ஆசிய மக்கள்

விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்

ஆசிய மக்கள்:ஆசியன் மக்கள் அல்லது ஆசிய மக்கள் ஆசியாவின் மக்கள்தொகையில் ஒரு பகுதியினர்[7].ஆசியாவில் உள்ள இனக்குழுக்களை வகைப்படுத்துவதற்காக பல்வேறுபட்ட வரையறைகள் மற்றும் புவியியல் தரவுகள் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களால் வழங்கப்படுகின்றன.[8]

ஆசிய மக்கள்
ஆசியாவின் மக்கள்தொகை
மொத்த மக்கள்தொகை
4,462,676,731
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
*தெற்காசியா1.749 billion[1]
 இந்தியா1,210,854,977[2][3]
 ஆப்கானித்தான்34,656,032
 வங்காளதேசம்162,951,560[4]
*கிழக்காசியா1,641,908,531
 சீனா1,339,724,852
*மத்தியகிழக்கு ஆசியா371 million
சவூதி அரேபியாசவூதி அரேபியா33,000,000[5]
*தென்கிழக்காசியா641,775,797
 மலேசியா31,977,000
*நடு ஆசியா69,787,760
கசக்கஸ்தான்17,987,736
*வடக்கு ஆசியா293,047,571
 உருசியா144,526,636 Increase[6]

மக்கள்தொகைப் புள்ளியியல்

தொகு
வரலாற்றில் சனத்தொகை
ஆண்டும.தொ.±%
1500 24,30,00,000—    
1700 43,60,00,000+79.4%
1900 94,70,00,000+117.2%
1950 1,40,20,00,000+48.0%
1999 3,63,40,00,000+159.2%
2012 4,17,50,38,363+14.9%
Source: "UN report 2004 data" (PDF).
The figure for 2012 is provided by PopulationData.net.

உலகில், மனித வளர்ச்சிச் சுட்டெண் மிகக் கூடுதலாக வளர்ந்திருப்பது கிழக்காசியாவிலேயே ஆகும். முன்னேற்றம் நலவியல், கல்வி, வருமானம் என்பவை தொடர்பிலான பகுப்பாய்வுகளின் அடிப்படையில், கடந்த 40 ஆண்டுகளில் சராசரி மனித வளர்ச்சிச் சுட்டெண் இரண்டு மடங்காகியுள்ளது. 1970ல் இருந்து மனித வளர்ச்சிச் சுட்டெண் மேம்பாட்டின் அடிப்படையில் உலகில் இரண்டாவது நிலையில் இருக்கும் சீனாவே, கல்வி, நலவியல் ஆகியவற்றில் அல்லாது வருமான அடிப்படையில் மட்டும் முதல் பத்துக்குள் அடங்கிய ஒரே நாடு ஆகும். சீனாவின் தனி நபர் வருமானம் கடந்த நான்கு பத்தாண்டுகளில் 21 மடங்கு ஆகியுள்ளதுடன், இக்காலப் பகுதியில் பல நூறு மில்லியன் மக்களை வறுமை நிலையிலிருந்து உயர்த்தியுள்ளது. இருந்தாலும், பள்ளிச் சேர்க்கை, வாழ்நாள் எதிர்பார்ப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் சீனா இப்பகுதியின் சிறப்பான வளர்ச்சி பெற்ற நாடுகளுள் அடங்கவில்லை.[9]

1970 ஆம் ஆண்டிலிருந்து குறிப்பாக நலவியல், கல்வி ஆகியவற்றின் மேம்பாட்டின் அடிப்படையில் விரைவாக வளரும் நாடாகத் தென்னாசிய நாடான நேப்பாளம் விளங்குகிறது. இதன் தற்போதைய வாழ்நாள் எதிர்பார்ப்பு 1970 ஆம் ஆண்டில் இருந்ததைவிட 25 ஆண்டுகள் கூடுதலானது. நேப்பாளத்தில் பள்ளிக்குச் செல்லும் வயதுள்ள ஐந்து சிறுவர்களில் நான்குக்கும் கூடுதலானவர்கள் இப்போது தொடக்கப் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். 40 ஆண்டுகளுக்கு முன்னர் இது ஐந்து பேருக்கு ஒருவராகவே இருந்தது.[9]

மனித வளர்ச்சிச் சுட்டெண் அடிப்படையிலான உலகத் தரவரிசையில் சப்பானும், தென்கொரியாவும் முறையே 11, 12 ஆவது இடங்களில் உள்ளன. இவை மிக உயர்ந்த மனித வளர்ச்சி வகைக்குள் அடங்குகின்றன. இவற்றைத் தொடர்ந்து, ஆங்காங் 21 ஆவது இடத்திலும், சிங்கப்பூர் 27 ஆவது இடத்திலும் உள்ளன. ஆப்கானித்தான் மதிப்பிடப்பட்ட 169 நாடுகளுள் 155 ஆவது இடத்தைப் பெற்று, ஆசிய நாடுகளுள் மிகக் கீழான நிலையில் உள்ளது.[9]

 
ஆசியாவின் பகுதிகள்:

பிற நாடுகளின் கூற்று

தொகு

ஆங்லோபோன் ஆப்பிரிக்கா மற்றும் கரிபியன்

தொகு

ஆங்லோபோன் ஆப்பிரிக்கா குறிப்பாக கிழக்கு ஆபிரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகள் ஆகியவற்றில் "ஆசிய" என்ற வார்த்தை பொதுவாக தெற்காசிய வம்சாவளியினர் குறிப்பாக இந்தியர்கள், பாக்கிஸ்தான், பங்களாதேசிகள் மற்றும் ஸ்ரீலங்காவாசிகளுடன் தொடர்புடையது என கூறுகின்றனர். தென்னாப்பிரிக்காவில் ஆசிய வார்த்தை முழு கண்டம் உணர்வுகளில் பயன்படுத்தப்படுகிறது. தென்னாபிரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் இருப்பதால் உத்தியோகபூர்வ ஆவணங்கள் "இந்திய" என்ற பெயரை தெற்கு மற்றும் கிழக்கு-ஆசியர்கள் என கருத்துகின்றனர்.[10]

மேற்கோள்கள்

தொகு
  1. "World Population Prospects - Population Division - United Nations". esa.un.org.
  2. "Population Enumeration Data (Final Population)". Census of India. Archived from the original on 22 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 17 சூன் 2016.
  3. "A – 2 DECADAL VARIATION IN POPULATION SINCE 1901" (PDF). Census of India. Archived from the original (PDF) on 30 ஏப்பிரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 17 சூன் 2016.
  4. Data பரணிடப்பட்டது 4 செப்டெம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம். Census – Bangladesh Bureau of Statistics.
  5. "Official annual projection". cdsi.gov.sa. 2014. Archived from the original (PDF) on 9 May 2016.
  6. "ПРЕДВАРИТЕЛЬНАЯ ОЦЕНКА ЧИСЛЕННОСТИ ПОСТОЯННОГО НАСЕЛЕНИЯ на 1 января 2018 г. и в среднем за 2017 г." www.gks.ru. Archived from the original on ஜூன் 15, 2018. பார்க்கப்பட்ட நாள் February 23, 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Asian M-w.com
  8. Nlm.nih.gov
  9. 9.0 9.1 9.2 "2010 Human Development Report: Asian countries lead development progress over 40 years" (PDF). UNDP. Archived from the original (PDF) on 2013-07-23. பார்க்கப்பட்ட நாள் 2010-12-22.
  10. "Race, Ethnicity and Language in South Africa". World Elections. பார்க்கப்பட்ட நாள் 6 October 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_மக்கள்&oldid=3586075" இலிருந்து மீள்விக்கப்பட்டது