வஃபாதர் மொமன்ட்

வஃபாதர் மொமண்ட், (Wafadar Momand பிறப்பு: பிப்ரவரி 1, 2000) ஒரு ஆப்கான் துடுப்பாட்ட வீரர் .[1] 2018 ஜூன் மாதம் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் தேர்வாகிய துடுப்பாட்ட வீரர்களில் இவரும் ஒருவர். இவர் ஆப்கன் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார், மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்டம், முதல் தரத் துடுப்பாட்டம் மற்றும் இருபது20 ஆகிய உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.

2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற காஜி அமானுல்லா கான் பிராந்தியப் போட்டிகளில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அரிமுகமானார்.[2] இவர் செப்டம்பர் 15, 2017 அன்று நடைபெற்ற 2017 ஆம் ஆண்டிற்கான ஷ்பகீசா துடுப்பாட்ட லீக்கில் பேண்ட்-இ-அமீர் டிராகன்களுக்காக இருபது20 போட்டித் தொடரில் இவர் அறிமுகமானார்.[3]

சர்வதேச வாழ்க்கை

தொகு

டிசம்பர் 2017 இல், இவர் 19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பெற்றார்.[4]

2018 ஜூன் மாதம் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் தேர்வாகிய துடுப்பாட்ட வீரர்களில் இவரும் ஒருவர்.[5] இவர் 14 ஜூன் 2018 அன்று இந்தியாவுக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[6] போட்டியின் போது, இவர் ரஷீத் கானுடன் இணைந்து பந்துவீச்சில் 100 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதன்மூலம் ஆப்கானித்தான் அணி சார்பாக 100 ஒட்டங்கள் விட்டுக் கொடுத்த இளம் வயது இணை எனும் மோசமான சாதனை படைத்தனர்.[7] இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 21 ஓவர்கள் வீசி 100 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதில் இரு ஓவர்களை வீசி 2 இலக்குகளைக் கைப்பற்றினார். இவர் 2 பந்துகளில் 6 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 7 பந்துகளில் இவர் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி ஆட்டப் பகுதி மற்றும் 262 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[8]

ஜூலை 2018 இல், இவர் அயர்லாந்திற்கு எதிரான தொடருக்கான ஆப்கானிஸ்தானின் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியில் இவர் இடம் பெற்றார். ஆனால் இந்தத் தொடரில் விளையாடும் அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை.[9] செப்டம்பர் 2018 இல், 2018 ஆசிய கோப்பைக்கான ஆப்கானிஸ்தானின் ஒருநாள் அணியில் இவர் இடம் பெற்றார்.[10] இருப்பினும் ஒரு பயிற்சியில் விளையாடும் போது காயம் ஏற்பட்டதால் இவர் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.[11]

டிசம்பர் 2018 இல், 2018 ஏ.சி.சி வளர்ந்து வரும் ஆசிய அணிகள் கோப்பைக்கான ஆப்கானிஸ்தானின் 23 வயதுக்குட்பட்ட அணியில் இவர் இடம் பெற்றார்.[12] பிப்ரவரி 2019 இல், இந்தியாவில் நடைபெற்ற அயர்லாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரானதேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இவர் இடம்பெற்றார்.[13][14] நவம்பர் 2019 இல், பங்களாதேஷில் நடைபெற்ற 2019 ஏ.சி.சி வளர்ந்து வரும் ஆசிய அணிகள் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இவர் இடம் பெற்றார்.[15]

குறிப்புகள்

தொகு
  1. "Wafadar". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 August 2017.
  2. "3rd Match, Ghazi Amanullah Khan Regional One Day Tournament at Khost, Aug 11 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 August 2017.
  3. "9th Match, Shpageeza Cricket League at Kabul, Sep 15 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 September 2017.
  4. "Mujeeb Zadran in Afghanistan squad for Under-19 World Cup". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 December 2017.
  5. "Afghanistan pick four spinners for inaugural Test". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 May 2018.
  6. "Only Test, Afghanistan tour of India at Bengaluru, Jun 14-18 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 June 2018.
  7. "Stats: Rashid Khan & Co turn expensive on their first outing - CricTracker". CricTracker. https://crictracker.com/stats-rashid-khan-co-turn-expensive-on-their-first-outing/. பார்த்த நாள்: 15 June 2018. 
  8. "Full Scorecard of India vs Afghanistan Only Test 2018 - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-18.
  9. "Wafadar gets maiden white-ball call-up as Afghanistan name squads for Ireland". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 July 2018.
  10. "Afghanistan pick four spinners for Asia Cup". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 September 2018.
  11. "Wafadar ruled out of Asia Cup". Afghanistan Cricket Board. Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 6 September 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. "Afghanistan Under-23s Squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 December 2018.
  13. "Mujeeb left out for Ireland Test, Shahzad out of T20Is". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 February 2019.
  14. "No Mujeeb in Tests as Afghanistan announce squads for Ireland series". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 7 February 2019.
  15. "Afghanistan Emerging travels to Bangladesh for Asia Cup". Afghanistan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 12 November 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வஃபாதர்_மொமன்ட்&oldid=3570391" இலிருந்து மீள்விக்கப்பட்டது