வகுப்பு அளவு

வகுப்பு அளவு (Class size) என்பது ஒரு குறிப்பிட்ட பாடவேளையின் போது ஆசிரியர் எதிர்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும். [1]

ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு பெரிய வகுப்பறை
சிமர் கல்லூரியில் உள்ள ஒரு சிறிய வகுப்பறை

அளவீடுகள் மற்றும் வரையறைகள் தொகு

சில ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் மாணவர்-ஆசிரியர் விகிதத்தைப் (அல்லது ஆசிரியர்-மாணவர் விகிதம்) பயன்படுத்தி வகுப்பறை அளவின் விளைவுகளை ஆய்வு செய்துள்ளனர், ஆனால் இந்த அளவீட்டால் வகுப்பறை அளவினை துல்லியமாக வரையறுக்க இயலவில்லை. இண்ட்ராஸ்கூல் வேரியேசன் இன் கிளாஸ் சைஸ்: பேட்டர்ன்ஸ் அண்ட் இம்பிளிகேசன்சில் மைக்கேல் பூசர் மற்றும் சிசிலியா ரூசின் கூற்றுப்படி மாணவர்- ஆசிரியர் விகிதம் சமமற்ற முறையில் பயன்படுத்தப்படலாம் என்பதால் வகுப்பறை அளவு பற்றிய துல்லியமான அளவினை தீர்மானிக்க இயலவில்லை என்று கூறியுள்ளனர்.[2]

சராசரி மதிப்புகள் தொகு

உலகம் முழுவதும் தொகு

2013 கணக்கெடுப்பில், பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பானது அதன் உறுப்பு நாடுகளின் சராசரி வகுப்பறை அளவை 24.1 என்று வரையறை செய்கிறது இந்த ஆய்வின் முழுமையான முடிவுகள் கீழே உள்ளன. இந்த ஆய்வில் வகுப்பு அளவின் சராசரிகள் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இந்த ஆய்வு பள்ளி சேர்க்கையை முழுமையாக ஆய்வு செய்யவில்லை, அதனால்தான் அமெரிக்காவின் வகுப்பு அளவு சராசரி முந்தைய விளக்கப்படத்தில் இருந்ததை விட வித்தியாசமாக இங்கு தோன்றுகிறது. [3]

நாடு சராசரி வகுப்பு அளவு
பிளாண்டர்சு 17.3
எஸ்டோனியா 17.3
லாட்வியா 17.7
பின்லாந்து 17.8
சிலோவாக்கியா 19.1
ஐஸ்லாந்து 19.6
குரோஷியா 20.0
சைப்ரஸ் 20.7
செக் குடியரசு 21.1
டென்மார்க் 21.2
போலந்து 21.4
சுவீடன் 21.4
பல்கேரியா 21.7
இத்தாலி 21.8
செர்பியா 21.9
நார்வே 22.5
போர்த்துகல் 22.6
ஸ்பெயின் 23.6
இங்கிலாந்து 23.9
சராசரி 24.1
ஆத்திரேலியா 24.7
அபுதாபி 25.1
நெதர்லாந்து 25.4
பிரான்ஸ் 25.5
கனடா 25.8
அமெரிக்கா 27.0
இசுரேல் 27.6
பிரேசில் 30.8
ஜப்பான் 31.2
சிலி 31.8
மலேசியா 32.1
கொரியா 32.4
மெக்சிகோ 33.0
சிங்கப்பூர் 35.5

யுனைடெட் ஸ்டேட்ஸ் வகுப்பு அளவு சராசரியின் வரலாற்று தரவு தொகு

தேசிய வகுப்பு அளவிற்கான தரவுகள் 1980 களின் பிற்பகுதியில் மட்டுமே உள்ளன. கிடைக்கக்கூடிய வரலாற்றுத் தரவு கீழே உள்ள அட்டவணையில் உள்ளது. [4]

ஆண்டு தொடக்கக் கல்வி வகுப்பு அளவு சராசரி உயர்நிலை வகுப்பு அளவு சராசரி
2007-2008 20 23.4
2003-2004 20.4 24.7
1999-2000 21.1 23.6
1993-1994 24.1 23.6

சான்றுகள் தொகு

  1. "The Condition of Education" (PDF). National Center for Education Statistics. பார்க்கப்பட்ட நாள் 4 August 2015.
  2. Boozer, Michael; Rouse, Cecilia (2001). "Intraschool Variation in Class Size: Patterns and Implications". Journal of Urban Economics 50 (1): 163–189. doi:10.1006/juec.2001.2216. 
  3. "Table 2.18". The OECD Teaching and Learning International Survey (TALIS) 2013 Results - Excel Figures and Tables. பார்க்கப்பட்ட நாள் 4 August 2015.
  4. "National Center for Education Statistics" (PDF). Monitoring School Quality: An Indicators Report.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வகுப்பு_அளவு&oldid=3891023" இலிருந்து மீள்விக்கப்பட்டது