வங்கவீதி மோகன ரங்கா

இந்திய அரசியல்வாதி

வங்கவீதி மோகனா ரங்க ராவ் (Vangaveeti Mohana Ranga Rao) (1948 சூலை 4 – 1988 திசம்பர் 6) ரங்கா என்றும் அழைக்கப்படும் இவர், ஆந்திராவின் விஜயவாடாவில் ஒரு இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதி ஆவார். [1] விஜயவாடா கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) சட்டமன்றத்தின் உறுப்பினராகப் பணியாற்றினார்.

வங்கவீதி மோகன ரங்கா
பிறப்புவங்கவீதி மோகன ரங்கா
4 சூலை 1947
காட்டூரு, உய்யூரு, கிருஷ்ணா மாவட்டம்
இறப்பு26 திசம்பர் 1988(1988-12-26) (அகவை 41)
விசயவாடா, ஆந்திரப் பிரதேசம்
இறப்பிற்கான
காரணம்
கொலை
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்ரங்கா
பணிஅரசியல்வாதி
பட்டம்சட்டமன்ற உறுப்பினர்
பதவிக்காலம்1985 – 1988
முன்னிருந்தவர்அட்சுமில்லி செயபிரகாசு இராவ்
பின்வந்தவர்வங்கவீதி இரகு
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கைத்
துணை
இரத்னகுமாரி
பிள்ளைகள்வங்கவீதி இளைய இராதா கிருஷ்ணா இராவ்.
உறவினர்கள்கோட்டீசுவர இராவ் (சகோதரர்)
வெங்கட நாராயண இராவ் (சகோதரர்)
சோபனா சலபதி இராவ் (சகோதரர்)
மூத்த இராதா கிருஷ்ணா இராவ் (சகோதரர்)

இவரது மூத்த சகோதரர், மூத்த வங்கவீதி ராதா கிருட்டிண ராவ், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் விஜயவாடாவின் சலசனி வெங்கட ரத்தினத்துடன் தொடர்பு கொண்டிருந்தார். [2] இருப்பினும், விஜயவாடா போக்குவரத்து வணிகத்தில் ஒரு பிடிப்பைப் பெற இருவருக்குமடையே மோதல்கள் எழுந்தன.

விஜயவாடாவில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த இவர் கொல்லப்பட்டார். இவரது படுகொலை கிருஷ்ணா,குண்டூர் மற்றும் கோதாவரி மாவட்டங்களில் பெரிய அளவிலான கலவரங்களுக்கு வழிவகுத்தது.  

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

மோகனா ரங்கா 1947 சூலை 4 ஆம் தேதி ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் அமைந்துள்ள உய்யூருவுக்கு அருகிலுள்ள காட்டூரில் பிறந்தார். மோகனா ரங்கா சென்னுபதி ரத்னா குமாரி என்பவரை மணந்தார்; இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தனர்.

அரசியல் வாழ்க்கை தொகு

தனது சகோதரர் வங்கவீதி ராதா கிருஷ்ணாவின் மரணத்திற்குப் பிறகு இவர் பொது வாழ்க்கையில் நுழைந்தார். இவரது அரசியல் வாழ்க்கை 1981 இல் தொடங்கியது. இவர் நகராட்சி தேர்தலில் போட்டியிட்டபோது, காங்கிரசு கட்சி தனது அதிகாரப்பூர்வ வேட்பாளரை இவருக்கு ஆதரவாக திரும்பப் பெற்றது. மாவட்டத்தில் இவரது போட்டியாளரான தேவிநேனி ராஜசேகர் (நேரு) தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் வேறொரு தொகுதியில் தேர்தலில் நின்றார். ரங்கா காப்பு சமூகத்தின் தலைவரானார். ரங்கா 1985 ல் காங்கிரசு கட்சிக்கு சட்ட மன்ற உறுப்பினரானார். ராஜசேகரும் தேர்தலில் வென்று, இறுதியில் அமைச்சராகவும் ஆனார். 1983 இல் தொடங்கி இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. என்.டி.ராமராவ் அப்போது ஆந்திர முதல்வராக இருந்தார்.

கலவரம் தொகு

இவரது மரணத்தைத் தொடர்ந்து, இப்பகுதி முழுவதும் கலவரம் ஏற்பட்டது. [3] [4] பெரும்பாலும் கம்மர்களாக இருந்த தெலுங்கு தேசம் அனுதாபிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் தாக்கப்பட்டது. [5] விஜயவாடா நகரம் 40 நாட்கள் ஊரடங்கு உத்தரவின் கீழ் இருந்தது. 42 பேர் கொல்லப்பட்டனர். தேவினேனி ராஜசேகரை (நேரு) சரணடையுமாறு முதலமைச்சரால் உத்தரவிடப்பட்டது, காவல்துறை இயக்குனர் பதவி விலகினார். 44 பேர் குற்றம் சாட்டப்பட்டனர்; 2002 ஆம் ஆண்டில், இதற்கிடையில் 33 பேர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரான பாண்டு என்று அழைக்கப்படும் சல்லசானி வெங்கடேசுவர ராவ் 2010 இல் கொலை செய்யப்பட்டார். [6]

குறிப்புகள் தொகு

  1. "It all began at the auto stand". Archived from the original on 2021-05-15. பார்க்கப்பட்ட நாள் 2020-08-09.
  2. "Archive News". The Hindu.
  3. "A caste war erupts". http://indiatoday.intoday.in/story/congressi-mla-murder-triggers-off-caste-violence-in-four-andhra-pradesh-coastal-districts/1/323011.html. 
  4. "All 33 accused in V M Ranga Rao murder acquitted". http://www.rediff.com/news/2002/mar/05ap.htm. 
  5. Menon, Amarnath K. (31 January 1989). "A caste war erupts". India Today.
  6. "Not many surprised as 'settlement Pandu' meets a violent end". http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Not-many-surprised-as-settlement-Pandu-meets-a-violent-end/articleshow/6639262.cms?referral=PM. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்கவீதி_மோகன_ரங்கா&oldid=3712759" இலிருந்து மீள்விக்கப்பட்டது