வங்காளதேச விடுதலைப் போரின்போது வன்புணர்வு

1971 வங்காளதேச விடுதலைப் போரின் போது, பாக்கித்தானிய படைத்துறையினரும் இரசக்கார்களும் திட்டமிட்ட இனவழிப்பு வன்கலவியில் 200,000 முதல் 400,000 வரையிலான வங்காளதேசப் பெண்களையும் சிறுமிகளையும் வன்புணர்வுசெய்தனர். [1][2][3][4] இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்துப் பெண்கள்.[5][6] இமாம்களும் முசுலிம் மதத் தலைவர்களும் பெண்களை "போர்க்கால கொள்ளைப் பொருள்" என அறிவித்து வன்கலவிகளை ஆதரித்தனர்.[7][8] இசுலாமிய செயற்பாட்டாளர்களும் தலைவர்களும் கூட இந்த பெண் கடத்தல்களிலும் வன்கலவிகளிலும் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.[8]

பெண்கள் இருவிதமாகத் தாக்கப்பட்டனர்: முதலாவதாக, இந்துப் பெண்கள் வன்புணரப்பட்டு கொல்லப்பட்டனர்; இரண்டாவதாக, இந்துக்களின் வசமாக இருந்தவர்களாக கருதப்பட்ட வங்காள முசுலிம் பெண்கள் "களவில்லா" முசுலிம்களை உருவாக்குமுகமாக கட்டாயமாக கருதரிக்கப் புணரப்பட்டனர்.[9] பெரும்பான்மையினரான வங்காள முசுலிம்கள், சிறுபான்மை இந்துக்கள் என்ற இரு சமூகத்தினரையும் அச்சுறுத்தவே வன்கலவி பயன்படுத்தப்பட்டதாக அறிஞர்கள் கருதுகின்றனர். இந்த வன்கலவிகளால் ஆயிரக்கணக்கான கர்ப்பங்கள், போர்க் குழந்தைகள், கருக்கலைப்பு, சிசுக் கொலை, தற்கொலை, மற்றும் பாதிக்கப்பட்டவர் தள்ளிவைப்பு ஏற்பட்டன. உலகின் பெரும் போர்க் குற்றங்களில் ஒன்றாக ஏற்கப்படும்[10] இந்த அநியாயங்கள் பாக்கித்தான் படைகள் மற்றும் ரசக்கார் குடிப்படைகளின் சரணுக்குப் பின்னர் முடிவுக்கு வந்தன.[11][12] முதலில் இந்தியா முக்தி வாகினிக்கு ஆதரவளிப்பதாகக் கூறியது; பின்னர் மனிதநேய அடிப்படையில் இடையிட்டதாகக் கூறியது. இந்த காரணங்களை ஐ.நா ஏற்காததால் தன் பாதுகாப்பை கருதியே தலையிட்டதாக இந்தியா அறிவித்தது.[13][14] தற்போது இது மனிதநேய நடவடிக்கையாகவே ஏற்கப்படுகிறது.[15]


தாக்காவிலுள்ள விடுதலைப் போர் அருங்காட்சியகம் 1971ஆம் ஆண்டு வன்முறை, இறப்புகள், வன்கலவி நிகழ்வுகளின் எச்சங்களையும் ஆவணங்களையும் பாதுகாத்து வருகிறது.

போரின்போது வங்காள தேசத்தினரும் பாக்கித்தானிற்கு ஆதரவாக கருதப்பட்ட குடிபெயர்ந்து வந்திருந்த பீகாரி முசுலிம் பெண்களின் திரள் வன்கலவியில் ஈடுபட்டனர். [16] இந்தியப் படைவீரர்களும் வங்காளப் படைவீரர்களும் இந்த வன்கலவியில் ஈடுபட்டதாக யாசுமின் சாய்க்கியா போன்ற அறிஞர்கள் கருதுகின்றனர்.[17][18] பாக்கித்தானிய, வங்காளதேச, பீகாரி ஆண்கள் இந்துப் பெண்களை தொடர்ந்து வன்புணர்ந்ததாக தொடர்ந்து கேள்விப்பட்டதாக யாசுமின் சாய்க்கியா கூறுகிறார்.[19]

2009இல், ஏறத்தாழ 1971 நிகழ்வுகளுக்கு 40 ஆண்டுகளுக்குப் பிறகு, வங்காளதேசத்தின் போர்க்குற்றங்கள் மெய்யறிக் குழு, 1597 பேர் வன்கலவி உள்ளிட்ட போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக அறிக்கை வெளியிட்டது. பன்னாட்டு குற்றங்கள் தீர்ப்பாயம் 2010 முதல் இவர்களில் பலர் மீது குற்ற அறிக்கை தாக்கல் செய்து, விசாரணை மேற்கொண்டு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. வன்கலவிப் பாதிப்படைந்தோரின் கதைகள் இலக்கியத்திலும் திரைக்கதைகளிலும் வெளியாயின; ஓவிய வடிவிலும் தீட்டப்பட்டுள்ளன.

பின்னணி

தொகு
 
டாக்கா பல்கலைக்கழகத்தின் மாணவியர் 1953ஆம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று மொழிப்போர் நாளாக பேரணி செல்தல்

இந்தியப் பிரிப்பையும் பாக்கித்தானின் உருவாக்கத்தையும் அடுத்து பாக்கித்தானின்கிழக்கு மேற்கு பிரிவுகள் புவியியல்படி தனித்திருந்தமை மட்டுமன்றி பண்பாடு சார்ந்தும் வேறுபட்டிருந்தன. மேற்கிலிருந்த அதிகாரிகள் கிழக்கிலிருந்த வங்காள முசுலிம்கள் "வங்காளிகளாக கூடுதலாகவும்" "கீழான, தூய்மையற்ற" முசுலிம்களாகவும் இருப்பதாகக் கருதினர். இதனால் அவர்களை தங்கள் பண்பாட்டிற்கு கட்டாயமாக தன்வயமாக்கும் திட்டங்களை மேற்கு தீட்டியது.[20] கிழக்குப் பாக்கித்தானின் பெரும்பாலானோர் முசுலிம்களாக இருந்த போதும் வெகு சிலரே உருது பேசும் திறன் பெற்றிருந்தனர். சிறுபான்மையினரான இந்துக்களுடன் மொழியால் இணைந்திருந்தனர். 1948இல் உருது தேசிய மொழியாக அறிவிக்கப்பட்டது.[21] இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வங்காள செயற்பாட்டாளர்கள் வங்காள மொழி இயக்கம் தொடங்கினர். 1949இல் மற்ற செயற்பாட்டாளர்கள் ஆளும் கட்சியான முசுலிம் லீக்கிற்கு மாற்றாக கிழக்குப் பாக்கித்தானில் அவாமி லீக் கட்சி தொடங்கினர். [22] அடுத்த 15 ஆண்டுகளில் வங்காளிகள் பாக்கித்தானில் நிலவிய அதிகார பகிர்தலில் சமநிலை இல்லாததாக உணர்ந்தனர். பெரும்பாலும் படைத்துறை கட்டுப்பாட்டில் இருந்த நாட்டில் இந்த ஐயங்களைப் போக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. மெல்ல மெல்ல பிரிவினைக்கான போராட்டம் எழுந்தது.[23][24] 1960களின் பிற்பகுதியில், கிழக்கு பாக்கித்தான் மக்கள் இரண்டாம் நிலைக் குடிகளே என்ற எண்ணம் வலுப்பட்டது. கிழக்குப் பாக்கித்தானில் பாக்கித்தானியப் படைகளின் தலைவராக இருந்த ஜெனரல் நியாசி கிழக்கு பாக்கித்தானை "தாழ்நிலை மக்களின் தாழ்நிலை நிலப்பகுதி" எனக் குறிப்பிட்டதும் போராட்டத்தை ஊக்குவித்தது.[25]

மேற்கு பாக்கித்தானிலும் படைத்துறை ஆட்சிக்கு எதிர்ப்பு நிலவியது. எனவே படைத்துறை பொதுக்கருத்துக்கு இணங்கி திசம்பர் 1970இல் முதல் பொதுத் தேர்தலை நடத்தியது. எதிர்பாராத வண்ணம் சேக் முஜிபுர் ரகுமான் தலைமையேற்ற அவாமி லீக் தனிப்பெரும்பான்மை பெற்றது. இதனை மேற்கத்திய நிர்வாகம் விரும்பவில்லை.[26] அரசுத்தலைவராக இருந்த யாக்யா கான் அவாமி லீக்கை தடை செய்தார்; கிழக்கு பாக்கித்தானில் இராணுவ ஆட்சியை நிறுவினார். [27][28]

வங்காள தேசியவாதத்தை அடக்கும் இலக்குடன் பாக்கித்தானிய இராணுவம் 25, மார்ச்சு 1971இல் தேடொளி நடவடிக்கையை (ஆப்பரேசன் சர்ச்லைட் ) முன்னெடுத்தது. [29] இந்த நடவடிக்கையின் போது வங்காள முசுலிம்களையும் இந்துக்களையும் ஒருசேர இலக்காக்கின. [30] அடுத்த நிகழ்ந்த இனப்படுகொலையில் இராணுவம் 3 மில்லியன் பேரைக் கொன்றது, 10 மில்லியன் ஏதிலிகளை உருவாக்கி இந்தியாவிற்கு அனுப்பியது; தவிர மேலும் 30 மில்லியன் பேரை கிழக்கு பாக்கித்தானிற்குள்ளேயே இடம் பெயர வைத்தது.[31]

மேற்கோள்கள்

தொகு
  1. Sharlach 2000, ப. 92–93.
  2. Sajjad 2012, ப. 225.
  3. Ghadbian 2002, ப. 111.
  4. Mookherjee 2012, ப. 68.
  5. Bartrop & Jacobs 2014, ப. 1866.
  6. Islam 2019, ப. 175.
  7. Siddiqi 1998, ப. 208.
  8. 8.0 8.1 D'Costa 2011, ப. 108.
  9. Bina D'Costa, Nationbuilding, Gender and War Crimes in South Asia (2011) pg. 139
  10. DeRouen 2007, ப. 593.
  11. Kabia 2008, ப. 13.
  12. Wheeler 2000, ப. 13.
  13. Narine 2009, ப. 344.
  14. Weiss 2005, ப. 183.
  15. Lee 2011, ப. 110.
  16. D'Costa 2011, ப. 104.
  17. Saikia 2011a, ப. 3.
  18. "Women, War, and the Making of Bangladesh". Duke University Press இம் மூலத்தில் இருந்து 2 February 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170202055848/https://www.dukeupress.edu/Women-War-and-the-Making-of-Bangladesh/index-viewby%3Dsubject%26categoryid%3D74%26sort%3Dnewest.html. 
  19. Saikia, Yasmin (2017). "Nations, Neighbours, and Humanity: Destroyed and Recovered in War and Violence". Melbourne Historical Journal 44 (1): 23-40. 
  20. Mookherjee 2009, ப. 51.
  21. Thompson 2007, ப. 42.
  22. Molla 2004, ப. 217.
  23. Hossain & Tollefson 2006, ப. 345.
  24. Riedel 2011, ப. 9.
  25. Jones 2010, ப. 227–228.
  26. Roy 2010b, ப. 102.
  27. Sisson & Rose 1992, ப. 141.
  28. Hagerty & Ganguly 2005, ப. 31.
  29. Southwick 2011, ப. 119.
  30. Heinze 2009, ப. 79.
  31. Totten, Bartrop & Jacobs 1998, ப. 34.

உசாத்துணை

தொகு