வச்சிரயான பௌத்தம்

பெளத்த சமயப் பிரிவுகளுள் ஒன்று
(வஜ்ரயானம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வச்சிரயான பௌத்தம் (சீனம்: 金剛乘, jingangcheng, சப்பானியம்: 金剛乗, kongōjō) என்பது மகாயான பௌத்தத்தின் ஒரு நீட்சியாக கருதப்படுகிறது. வஜ்ரயானம் தர்மத்தை அறிந்து கொள்ள பல கூடுதல் உபாயங்களை கையாள்கிறது. இதை தந்திரயானம், மந்திரயானம், என்ற பெயர்களிலும் அழைப்பர். வஜ்ரயானம் என்ற சொல் வழக்கத்தில் வருவதற்கு முன், புத்தகுஹ்யர் போன்ற பௌத்த அறிஞர்கள், மகாயானத்தை பாரமித-யானம், மந்திர-யானம் என இரு வகையாக பிரிக்கின்றனர்.தேரவாதம் மற்றும் மகாயானத்துக்கு அடுத்து மூன்றாவது பெரும் பிரிவாக வஜ்ரயான பௌத்தம் கருதப்படுகிறது.

துணைப்பிரிவுகள்

தொகு

வஜ்ரயானம் தற்போது இரண்டு துணைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது

  • ஷிங்கோன் பௌத்தம்: இது ஜப்பானில் பின்பற்றப்படும் ஒரு பிரிவாகும். இது திபெத்திய பௌத்த பிரிவினை போல் பல மறைபொருள் சடங்குகளை கையாண்டாலும் இதன் முறைகள் திபெத்திய பௌத்தத்தில் இருந்து வேறுபட்ட்வை ஷிங்கோன் பௌத்தம் மஹாவைரோசன சூத்திரம் மற்றும் வஜ்ரசேகர சூத்திரத்தை அடிப்படையாக கொண்டது. ஷிங்கோன் பௌத்தம் கூக்காய் என்ற பௌத்த துறவியால் தோற்றுவிக்கப்பட்டது.

சொற்பொருளாக்கம்

தொகு

வஜ்ரம் என்ற சொல்லுக்கு மின்னல் மற்றும் வைரம் என்று பொருள். இது அனைத்தையும் அழிக்கக்கூடிய ஊடுருவக்கூடிய மிகவும் உறுதிவாய்ந்த ஆயுதத்தையும் குறிக்கிறது. எனவே வஜ்ரம், என்பது உறுதியான ஒரு பொருளை குறிக்கிறது. எனவே போதிநிலை அடைய ஒரு உறுதியான வழி என்ற முறையில் இது வஜ்ரயானம் என அழைக்கப்பட்டிருக்கலாம். மேலும் இது இதை பின்பற்றுபவர்கள் உறுதியான மனநிலையை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம். ஆக, வஜ்ரயானம் என்ற சொல்லுக்கு வைர வழி அல்லது உறுதியான வழி என பொருள் கொள்ளலாம்(யானம் என்ற வடமொழிச்சொல்லுக்கு வழி,பாதை என பொருள்[1] கொள்ளலாம்)

வஜ்ரயானத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்கள்

தொகு

பல்வேறு வஜ்ரயான பிரிவுகள் மற்றும் சம்பிரதாயங்களின் படி, வஜ்ரயான உபாயம் ஒருவர் அதிவிரைவில் போதி நிலை அடைய வழிவகை செய்கிறது. பல்வேறு தந்திர முறைகளை கையாள்வதன் மூலம் இது சாத்தியமாகிறது. பௌத்தத்தின் வேறு பிரிவுகள் முழு போதிநிலை அடைய பல பிறவிகள் எடுக்கவேண்டும் என குறிப்பிடும் வேலையில், வஜ்ரயானம் இப்பிறவியிலேயே புத்த நிலை அடைய பல முறைகளை குறிப்பிடுகிறது. அதே வேளையில், வஜ்ரயானம் தேரவாதம் மற்றும் மகாயானம் ஆகிய பிரிவுகளின் கொள்கைகளை இது தவறென்று குறிப்பிடவில்லை, உண்மையில் வஜ்ரயானத்தின் படி இப்போதனைகளே வஜ்ரயானத்தின் அடிப்படையாக கொள்ளப்படுகிறது. வஜ்ரயானத்தில் கங்க்யூர் பிரிவு, பிரக்ஞாபாரமித சூத்திரம், மற்றும் சில பாளி சூத்திரங்களை கூட தந்திர முறைகளுக்கு பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

தந்திர முறைகள்

தொகு

வஜ்ரயானத்தின் படி, மரணம், உடலுறவு, கனவு மற்றும் இதைப்போன்ற பிற நிலைகளில் உடலும் மனமும் ஒரு விதமான நுட்பமான நிலையில் இருக்கின்றது. ஆகவே, முறையான பயிற்சி மூலம் மேம்பட்ட தந்திர சாதகம் செய்பவர்கள் இந்த நிலையினை பயன்படுத்தி mindstreamஐ முறையாக முற்றிலும் மாற்ற இயலும். மேலும் வஜ்ரயான பாரம்பரியத்தின் படி, ஒருவர் சில நுட்பங்களை கையாளவதன் மூலம் ஒரே பிறப்பில் புத்தநிலையை அடைய இயலும்.

  • குரு யோகம்: பல வேறுபாடுகளை கொண்டுள்ள போதிலும பொதுவாக இது ஒரு சாதகர் தன் சித்த சந்தானத்தை(மன ஓட்டத்தையும்) குருவின் மூவஜ்ர சித்த சந்தானத்தோடு ஒன்றினைப்பதை குறிக்கிறது. இங்கு குரு யிதம் ஆகவும் புத்தரின் நிர்மாணகாய உருவமாகவும் கருதப்படுகிறார். இந்த குரு யோகத்தின் போது குரு தன்னுடைய சீடருக்கு மந்திரங்களை இந்த யோகத்தின் போது உபதேசிக்கலாம்.
  • தேவதா யோகம்: இந்து தந்திரத்தில் மிகவும் அடிப்படையான ஒன்றாகும். இதில் ஒருவர் தன்னையே யிதமாக கருதிக்கொண்டு தியானம் செய்வர். இந்த யோகத்தின் மூலம் தியான மூர்த்தியும் தானும் ஒன்று என்பதை ஒருவர் அறிகின்றார். இவ்வாறு அறிந்து கொள்ளுமிடத்து உலக பற்றுகளில் இருந்து விடுபட்டு, கருணையையும் பிரக்ஞையும் ஒரே நேரத்தில் பெறுகின்றனர். சிலைகளோடு மற்றும் உருவப்படங்களோடு மண்டலங்களும் இதற்கு பயன்படுத்தப்படுகின்றன.
  • மரண யோகம்: இது இன்னொரு மிக முக்கியமான தந்திர முறையாகும். இதன்படி, ஒருவர் தன் மரண நிலையில் செய்ய வேண்டியனவற்றை செய்வதற்காக தன் வாழ்நாளிலேயே தேவையான தியான பயிற்சிகளை மேற்கொள்வர். மரண நிலையில் ஒருவரின் மனநிலை மிகவும் நுட்பமான நிலையில் இருக்கும் என வஜ்ரயானத்தில் நம்பப்படுகிறது, எனவே சரியான பயிற்சியின் மூலம் போதிநிலையை மரணத்தின் போதே பெற முடியும். சோங் காபா போன்ற லாமாக்கள் இவ்விதத்தில் போதியை அடைந்ததாக கருதப்படுகிறது. இந்த மரண யோகத்தில், இறக்கும் நிலை, அந்தரபாவ நிலை, மறுபிறப்பெய்துகிற நிலை என மூன்று நிலைகளிலும் இந்த மரண யோகத்தை பிரயோகிக்கலாம். திபெத்திய மரண புத்தகத்தில் இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தந்திர வகைப்பாடுகள்

தொகு

புதிய தந்திர வகைப்பாடுகள்

தொகு

திபெத்திய பௌத்தத்தின் கெலுக், சாக்ய, மற்றும் கக்யு பிரிவினர் தந்திரங்களை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்துகிறது.

பண்டைய தந்திர வகைப்பாடுகள்

தொகு

நியிங்மா பிரிவு கீழ்க்கண்டாவாறு வேறுவிதமாக தந்திரங்களை வகைப்படுத்துகிறது

மறைபொருள் தீட்சையும் சமயமும்

தொகு

வஜ்ரயானத்தின் மிகவும் முக்கியமான கூறு அதன் மறைபொருள்வாதம் ஆகும். மறைபொருள் வாதத்தின் படி போத்னைகள் குருவிடமிருந்து நேரடியாக சீடருக்கு கற்றுத்தரப்படும். புத்தகம் வாயிலாகவோ அல்லது பிற முறையிலோ அதை கற்றல் தகாது. இப்படி பல தந்திர முறைகள் இரக்சியமாக வைக்கப்பட்டிருக்கின்றனர். எனினும் சில வஜ்ரயான குருக்களின் படி குரு-சிஷ்ய பாரம்பர்யத்தில் தான் இந்த முறைகளுக்கு பொருள் உள்ளதையும் இதற்கு வெளியே இவை பொருளற்றவையாக உள்ளதையுமே இந்த ரகசிய போதனை என்ற குறிப்பால் உணர்த்துகிறது மேலும் இந்த ரகசிய தந்திர முறைகளை முறையாக கற்காவிடின் கற்பவருக்கு இது தீங்கு விளைவிக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

இந்த மறைபொருள் தீட்சை இரு விதங்களில் அளிக்கப்படுகிறது திபெத்திய பௌத்ததில் மகா சந்தி முறையும் ஷிங்கோன் பௌத்தத்தில் மகாமுத்திரை முறையும் பயன்படுத்தப்படுகிறது.

மகாயானத்துடன் தொடர்பு

தொகு

திபெத்திய பௌத்த பார்வையில், தந்திரமும் மறைபொருள்வாதமும் வஜ்ரயானத்தை மகாயானத்தில் இருந்து வேறுபடுத்துகிறது. எனினும் இரண்டிலும் மற்ற உயிர்களுக்கு நன்மை செய்வதற்காக புத்தத்தன்மை அடைவதே இறுதி குறிக்கோள் ஆகும். மகாயானத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சூத்திரங்கள் பொதுவாக வஜ்ரயானத்திலும் முக்கியத்துவம் பெற்றிருக்கும். இந்த சூத்திரங்களுடன் வஜ்ரயானம் தனக்கே உரிய சில சூத்திரங்களையும் நூல்களையும் கொண்டுள்ளது. போதிசத்துவர்கள் மற்றும் எண்ணற்ற பிற பௌத்த தேவதாமூர்த்திகளின் மீதுள்ள நம்பிக்கை மகாயானத்துக்கும் வஜ்ரயானத்துக்கு பொதுவானவை.

எனினும் ஜப்பானிய வஜ்ரயான குரு கூக்காய் வஜ்ரயானத்தையும் மகாயானத்தை தெளிவாக வேறுபடுத்துகிறார். கூக்காயை பொருத்தவரையில் மகாயானம் வெளிப்படையானது எனவே அது தற்போதைக்கும் மட்டுமே. மாறாக வஜ்ரயான போதனைகள் தர்மகாய உருவில் உள்ளது. ஏனெனில் இப்போதனைகள் மஹாவைரோசன புத்தர் தமக்கு தாமே பேசிக்கொள்ளும் போது தோன்றியவை. அவ்வாறெனில், உண்மையில் மகாயானமும் ஹீனயானமும் வஜ்ரயானத்தின் வெவ்வேறு அம்சங்களாக ஆகிவிடுகிறது. இதே வாதம் திபெத்திய பௌத்தத்திலும் காணப்படுகிறது, அதாவது புத்தத்தன்மை ஒருவர் அடவைதற்கு இறுதி வழி தந்திரமே என்கிறது.

வஜ்ராயானத்தின் சில கூறுகள் மீண்டும் மகாயானத்திலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக வஜ்ரயானத்தில் வணங்கப்படும் உக்கிர மூர்த்திகளை மகாயான கோவில்களில் காணலாம்

வஜ்ரயானம் பலதரப்பட்ட நடத்தை விதிமுறைகளையும் உறுதிமொழிகளையும் கொண்டுள்ளது. இவ்வனைத்தும் பிரதிமோக்‌ஷம் மற்றும் போதிசத்துவத்தை அடிப்படையாக கொண்டவை. எனினும் இது புத்த பிக்ஷுக்குளுக்கு மட்டும் பிரத்யேகமானவை. பொதுமக்கள் தங்களுக்குரிய பொதுவான நடத்தை விதிமுறைகளை கடைபிடித்தால் போதுமானது.

இவை அல்லாமல், உயர்வகை தந்திரங்களை பின்பற்றுவோர் அதற்கேற்றாற்போல் சில விசேஷமான உறுதிமொழிகளையும் நடத்தை விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

மேற்கோள்கள்

தொகு

இவற்றையும் படிக்கவும்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. MW சமஸ்கிருத மின்னகராதி சோதனை பதிப்பு 1.5
"https://ta.wikipedia.org/w/index.php?title=வச்சிரயான_பௌத்தம்&oldid=3306051" இலிருந்து மீள்விக்கப்பட்டது