வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி

வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் பருத்தித்துறையில் அமைந்திருக்கும் ஒரு பெண்கள் உயர்தரப் பாடசாலையாகும்.[1][2]

வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி, பருத்தித்துறை
வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி - பின் வாசல்
அமைவிடம்
பருத்தித்துறை, யாழ்ப்பாண மாவட்டம்
வட மாகாணம்
இலங்கை
தகவல்
வகைஅரசுப் பாடசாலை, 1AB
சமயச் சார்பு(கள்)இந்து
தொடக்கம்1944
பள்ளி மாவட்டம்யாழ்ப்பாணக் கல்வி வலயம்
ஆணையம்கல்வி அமைச்சு
பால்பெண்கள்
மொழிதமிழ், ஆங்கிலம்

வரலாறு

தொகு

1940களின் ஆரம்பத்தில் வடமராட்சிப் பகுதி இந்துக்களுக்கு அவர்களின் இந்துத்துவத்தைப் பேணும் வகையில் ஒரு மகளிர் பாடசாலை அமைக்கும் தேவை கருதி இப்பாடசாலை 1944 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் எம். கார்த்திகேசு என்பவரின் தலைமையில் ஒரு 11 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டு கார்த்திகேசு அவர்களுக்குச் சொந்தமான ஒரு வீட்டிலேயே இப்பாடசாலை முதலில் பாலர் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையில் 40 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இப்பாடசாலைக்கென நிரந்தரக் காணி வாங்கப்பட்டு பல வகுப்பறைகளுடன் 10ம் வகுப்பு வரை வகுப்புகள் விஸ்தரிக்கப்பட்டன. 1946 இல் இக்கல்லூரி இலங்கை கல்வித் திணைக்களத்தில் உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது.

ஆரம்பத்தில் ஆண்களையும் உள்ளடக்கிய வடமராட்சி இந்து கல்லூரி தற்போது பெண்கள் பாடசாலையாக மாற்றபட்டுள்ளது.

பாடசாலைப் பண்

தொகு

வடமராட்சி இந்து மகளிர் கல்லூரிக்கான பாடசாலைப் பண், பாடசாலையின் முன்னாள் ஆசிரியை திருமதி கமலா பெரியதம்பி அவர்களால் 1954 இல் எழுதப்பட்டது.[3]

பல்லவி
வட இந்து மகளிர் கல்லூரி
வாழிய வாழி நீடுழி - (வட)

அனுபல்லவி
ஆழி யிறைவன் அருள்நிதம் பாடி
பாழ்வினை யகலப் பரிவுடன் பயிலும் - (வட)

சரணம்
ஈழநன் நாடாம் எங்கள் பொன்னாட்டில்
திரு வளர்ந்தோடும் பருத்தித்துறையாம்
தாழ்விலாத் தலத்தில் தவநெறிச் சங்கம்
தமிழ்மகள் மாற்புறத் தரணியி லருளிய - (வட)

செந்தமிழ் முதலாஞ் சிறந்த நற்கலையும்
சிந்தையை யேற்றும் நந்திரு மறையும்
எந்தத் துறையிலும் தேர்ந்திடப் பயிற்சி
தந்திடும் தர்மம் தனதெனச் சாற்றும் - (வட)

மங்கையர் பண்பும் இங்குநாம் பயின்று
நங்குலம் தழைக்க நாடும் செழிக்கப்
பொங்கிடு மன்பும் மங்கிடா வீரமும்
எங்கணும் சேவைகள் செய்திட வளரும் - (வட)

பன்னரும் பெருமைசேர் பரந்தநல் விண்ணே
பரிதியும் மதியு மின்றேல் இருட்புண்ணே
அன்பெனும் நிலவைப் பொழிபவள் பெண்ணே
இன்பக் கதிரொளி காட்டிடுங் கண்ணே
நன்மணி விளக்கே மாற்றுயர் பொன்னே
மண்ணுயர் சேவையை தன்னுயிர் என்னும் - (வட)

அதிபர்கள்

தொகு
  • திருமதி. எம். பொன்னுத்துரை, 1945
  • செல்வி. வி. பசுபதிஐயர், 1946
  • செல்வி. வை. கனகசபை 1947 - 1952
  • செல்வி. கே. சரவணமுத்து 1953 - 1966
  • திருமதி. கே. கணேசன் 1967 - 1970
  • திருமதி. பி. கனகசுந்தரம் 1971 - 1983
  • திருமதி. எஸ். சுப்ரமணியம் 1984 - 1989
  • திருமதி. எல். குமாரசாமி 1990 - 1994
  • செல்வி. ஏ. கனகரத்தினம் 1995 - 2004

படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Schools Basic Data as at 01.10.2010. வட மாகாண சபை. 2010. Archived from the original on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2011-02-27. {{cite book}}: More than one of |archivedate= and |archive-date= specified (help); More than one of |archiveurl= and |archive-url= specified (help)
  2. "Province - Northern" (PDF). Schools Having Bilingual Education Programme. Ministry of Education. Archived from the original (PDF) on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2012-08-29.
  3. இந்து விழிகள்: யா/ வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி உயர்தர மாணவர் ஒன்றியம் 2017 - பக்கம் 5

வெளி இணைப்புகள்

தொகு