வட சென்னிமலை


வட சென்னிமலை (Vadachennimalai) ஊரானது, சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டத்தில், சதாசிவபுரம் ஊராட்சியில் தேசிய நெடுஞ் சாலை 79 ல் இருந்து தெற்கே ஒரு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

வட சென்னிமலை
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ஆர். பிருந்தா தேவி, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

வழிபாட்டிடங்கள்

தொகு

இங்குள்ள குன்றின் மேல் முருகப்பெருமானின் வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பங்குனி உத்திரத் தேர் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகின்றது. பங்குனி உத்திரத் தேர் திருவிழா நடைபெற்ற இரண்டாம் நாள் சத்தாபரம் விழா நடைபெறும். அப்போது முருகப்பெருமான், வள்ளி மற்றும் தெய்வானையுடன் உற்சவ மூர்த்தியாக வலம் வரும் போது பலவகையான வானவெடிகள் வெடிக்கப்படும். இந்த வானவேடிக்கையை காணச் சுற்றுவட்டாரத்திலுள்ள கிராமங்களில் இருந்து பெருவாரியான மக்கள் வருகின்றனர். மேலும் கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கிலப் புத்தாண்டு, தைப்பொங்கல், சிவராத்திரி, கிருத்திகை. தைப்பூசம், சஷ்டி போன்ற தினங்களில் சிறப்பு வழிபாடும் நடைபெற்று வருகின்றது.

கல்வி

தொகு

இம்மலையின் அடிவாரத்தில் அரசு அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி அமைந்துள்ளது.

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வட_சென்னிமலை&oldid=3613133" இலிருந்து மீள்விக்கப்பட்டது