வட மாவட்டம் (இஸ்ரேல்)

இசுரேலின் ஒரு மாவட்டம்

வடக்கு மாவட்டம் (அரபு மொழி: منطقة الشمال‎, Minṭaqat ash-Shamāl; எபிரேயம்: מחוז הצפון, Meḥoz HaTzafon) இசுரேல் நாட்டின் ஆறு நிர்வாக மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது. வடக்கு மாவட்டம் 4,478 கிமீ² நிலப்பரப்பைக் கொண்டது. 4,638 கிமீ² பரப்பளவு நீர் மற்றும் நில பரப்புகளை உள்ளடக்கத்தை கொண்டிருக்கிறது. மாவட்ட தலைநகர் நாப் ஹகாலில் ஆகும். மேலும் நாசரேத்து பெருநகரமாக உள்ளது.

வடக்கு மாவட்டம்
இசுரேல் இசுரேல் நாட்டின் மாவட்டம்
- transcription(s)
 • அரபுمنطقة الشمال
 • எபிரேயம்מחוז הצפון
நகரங்கள்17
உள்ளூர் சபைகள்61
பிராந்திய சபைகள்15
தலைநகர்நாப் ஹகாலில்
பெருநகரம்நாசரேத்து
பரப்பளவு
 • மொத்தம்4,478 km2 (1,729 sq mi)
மக்கள்தொகை
 (2016)
 • மொத்தம்14,01,300
ஐஎசுஓ 3166 குறியீடுIL-Z

கோலான் குன்றுகள் வடக்கு மாவட்டத்தை தழுவி செல்வதால் கோலான் குன்றுகள் சட்டம் மூலம் இது 1981 ஆம் ஆண்டு முதல் துணை மாவட்டமாக இருந்து வந்தது. ஆனால் இந்த சட்டம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படவில்லை. மேலும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 497 இணைப்பின் படி கோலான் குன்றுகள் சட்டம் செல்லாது என்றும் அறிவித்தது. 1,154 கிமீ² பரப்பளவைக் கொண்ட கோலான் குன்றுகள் தவிர வடக்கு மாவட்டம் 3,324 கிமீ² (நீர் பரப்பளவு உட்பட 3,484 கிமீ²) பரப்பளவைக் கொண்டுள்ளது.

மக்கள் தொகை பரவல்

தொகு

2016 ஆம் ஆண்டிற்கான இசுரேல் நாட்டின் மத்திய புலனாய்வு துறை தரவுகளின்படி:[1]

இசுரேல் நாட்டின் வடக்கு மாவட்டத்தில் மட்டுமே அராபியர்கள் அதிகமாக வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Population, by Population Group, Religion, Age and Sex, District and Sub-District" (PDF). Israel Central Bureau of Statistics. 2017. Archived from the original (PDF) on மே 9, 2018. பார்க்கப்பட்ட நாள் May 8, 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வட_மாவட்டம்_(இஸ்ரேல்)&oldid=3570531" இலிருந்து மீள்விக்கப்பட்டது