வந்தே

இந்தியாவின் குசாராத் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம்

வந்தே (Vandhay) அல்லது வந்தாய் என்பது இந்திய மாநிலமான குசராத்தின் கச்சு மாவட்டத்தின் புஜ் வட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும் இது புஜ், வட்டத் தலைமையகத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. [1]

வந்தே
கிராமம்
வந்தே is located in குசராத்து
வந்தே
வந்தே
குசராத்தில் வந்தேவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 23°11′17″N 69°27′00″E / 23.188°N 69.450°E / 23.188; 69.450
நாடு India
மாநிலம்குசராத்து
மாவட்டம்கச்சு
மொழிகள்
 • அலுவல்குஜராத்தி, இந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அருகிலுள்ள கிராமம்தேஷால்பர்

புள்ளிவிவரங்கள் தொகு

இந்த குக்கிராமத்தில், சுமார் 350 பேர் என்ற அளவில் மக்கள் தொகையும் 70 வீடுகளும் உள்ளது. [2] தேஷால்பர், ஆனந்த்சர், மாதாபர் மற்றும் ஜியாபர் போன்ற கிராமங்கள் இதனருகில் அமைந்துள்ளன.

அருகிலுள்ள நகரங்கள் அஞ்சர் (69.4 கி.மீ) தொலைவிலும் , நகாத்ரனா (30.4 கி.மீ), முந்திரா (61.2 கி.மீ), காந்திதாம் (88.9 கி.மீ) மற்றும் புஜ் (27.3 கி.மீ) தொலைவிலும் அமைந்துள்ளன..

ஆசிரமம் தொகு

இந்த கிராமம் கட்சின் பல இந்து சமூகங்களுக்கு மத முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. ஏனெனில் கட்சின் புகழ்பெற்ற சாது ஓதவ்ராம் என்பவரின் ஆசிரமம் இங்குள்ளது. மகாத்மா காந்தியைப் பின்பற்றுபவரான இவர், கல்வி, ஏழை, தலித்துகளின் உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்தார். 1937ஆம் ஆண்டில் கச்சு பகுதியில் ஈசுவராம்ஜி குருகுலம் என்ற முதல் குருகுலத்தைத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து 1938ஆம் ஆண்டில் பார்வையற்றோர் பள்ளியும் தொடங்கினார். இவை இரண்டும் வந்தே கிராமத்தில் உள்ளன. [3] அதே பிரிவைச் சேர்ந்த குக்மாவின் சாதுவான கரிப் தாஸ் என்பவரின் சமகாலத்தவரான சாது வால் தாஸ்ஜி தலைமையிலான இராமானந்தி பிரிவின் ஆசிரமும் இங்கே இருக்கிறது. [4] ஆசாராம் வாலாரம் ஜுப்தி என்றும் அழைக்கப்படுகிறது. ஜுப்தி என்பது ஒரு குடிசை என்று பொருள்படும், ஏனெனில் வலூம் என்றும் அழைக்கப்படும் சாது வால் தாஸ் ஒரு குடிசையில் தங்கியிருந்தார். இந்த இடம் குளத்தின் அருகே கிராமத்தின் புறநகரில் உள்ளது மற்றும் அவரது குடிசைக்கு அருகில் ஒரு இராமர் கோயிலும் உள்ளது.

குறிப்புகள் தொகு

  1. [1]
  2. Vandhay is a small village in the district of Kutch in the state of Gujarat in India. It has a population of about 334 persons living in around 71 households.
  3. "Odhavramji came to Vandhai in Kutchh.... The Vandhai Ashram follows the Harihar parampara..... The first gurukul of Kutch was named Ishwarramji Gurukul & inaugurated on Vasant Panchmi 1937. Odhavramji welcomed his first batch of 330 students.... He wanted to gift the blind self reliance and respect in society. The school for the blind began in 1938. He called for the brail script from Bombay and his first batch had 7-8 students". Archived from the original on 2011-09-04. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.
  4. Shree Kutch Gurjar Kshatriya Samaj : A Brief History & Glory of our Fore-Fathers. Calcutta. Author :Raja Pawan Jethwa (2007)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வந்தே&oldid=3139151" இலிருந்து மீள்விக்கப்பட்டது