வனேடியம் கார்பைடு

வனேடியம் கார்பைடு (Vanadium carbide ) என்பது VC என்ற மூலக்கூற்று வாய்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மமாகும். இது மிகவும் அதிகமான வெப்பம் தாங்கும் பீங்கான் பொருளாகும். இச்சேர்மத்தின் கடினத்தன்மை அளவு மோவின் அளவுகோல் மதிப்பு 9 – 9.5 ஆகும். அநேகமாக அறியப்பட்ட கடினமான உலோகப் பொருட்களில் மிகவும் கடினமான பொருள் இதுவாகத்தான் இருக்கும்[2]. வனேடியம் இந்தக் காரணத்திற்காகவேதான் உலோகம் மற்றும் உலோக கலவைகளில் பொதுவாக இடம் பெறுகிறது[3]

வனேடியம் கார்பைடு[1]
Vanadium carbide
பெயர்கள்
வேறு பெயர்கள்
வனேடியம் கார்பன்
இனங்காட்டிகள்
12070-10-9 N
பப்கெம் 159387
பண்புகள்
VC
வாய்ப்பாட்டு எடை 62.953 g/mol
தோற்றம் வெப்பம் தாங்கும் கருப்பு கன்சதுரம்படிகங்கள்
அடர்த்தி 5.77 g/cm3
உருகுநிலை 2,810 °C (5,090 °F; 3,080 K)
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம், cF8
புறவெளித் தொகுதி Fm3m, No. 225
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

அமைப்பும் பண்புகளும்

தொகு

வனேடியம் ஓராக்சைடுடன் ஒத்தவடிவமைப்பு கொண்டிருப்பதால் இது பாறை உப்பு வடிவமைப்பில் படிகமாகிறது. ஏனெனில் வனேடியம் கார்பைடும் வனேடியம் ஓராக்சைடும் ஒன்றாகக் கலக்கும் தன்மையுடையனவாகும். வனேடியம் கார்பைடு மாதிரிகளில் வனேடியம் ஓராக்சைடு மாசாகக் கலந்திருக்கிறது. வனேடியம் ஆக்சைடை கார்பனுடன் சேர்த்து 1000 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்குவதன் மூலம் இதைத் தயாரிக்கலாம். வானொலி அலைவரிசை மேக்னெட்ரான் தெறித்துப் பூசும் நிலையில் வனேடியம் கார்பைடை (111) திசையமைப்பில் உருவாக்க முடியும். வெப்ப இயக்கவியல் அடிப்படையில் வனேடியம் கார்பைடு நிலைப்புத் தன்மை கொண்டது ஆகும். உயர் வெப்பநிலைகளில் இது V2C ஆக மாற்றப்படுகிறது.

வனேடியம் கார்பைடை தங்குதன் கார்பைடுடன் கூட்டுப்பொருளாக சேர்த்து கார்பைடு படிகங்களின் பீங்கான் தன்மையை மேம்படுத்த உதவுகிறது.

இயற்பியல் பண்புகள்

தொகு

வனேடியம் கார்பைடின் மீள்மைக் குணகம் மதிப்பு தோராயமாக 380 ஜிகா பாஸ்கல் ஆகும்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–93, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-09-11. பார்க்கப்பட்ட நாள் 2015-07-01.
  3. Günter Bauer, Volker Güther, Hans Hess, Andreas Otto, Oskar Roidl, Heinz Roller, Siegfried Sattelberger "Vanadium and Vanadium Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2005, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a27_367
  4. Hannink, R.; Murry, M. (1974). Material Science 9: 223. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வனேடியம்_கார்பைடு&oldid=3915556" இலிருந்து மீள்விக்கப்பட்டது