வனேடியம் நைட்ரைடு
வனேடியம் நைட்ரைடு (Vanadium nitride) என்பது VN என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். எஃகை நைட்ரைடேற்றம் செய்யும்போது வனேடியம் மற்றும் நைட்ரசன் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது[1]. இதனால் எஃகின் தேய்மானத்தடை அதிகரிக்கிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
வனேடியம் நைட்ரைடு
| |
வேறு பெயர்கள்
வனேடியம்(III) நைட்ரைடு
| |
இனங்காட்டிகள் | |
24646-85-3 | |
பப்கெம் | 90570 |
பண்புகள் | |
VN | |
வாய்ப்பாட்டு எடை | 64.9482 கி/மோல் |
தோற்றம் | கருப்புத் தூள் |
அடர்த்தி | 6.13 கி/செ.மீ3 |
உருகுநிலை | 2,050 °C (3,720 °F; 2,320 K) |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம், cF8 |
புறவெளித் தொகுதி | Fm3m, No. 225 |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | வனேடியம்(III) ஆக்சைடு, வனேடியம் கார்பைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | தைட்டானியம் நைட்ரைடு, குரோமியம்(III) நைட்ரைடு, நையோபியம் நைட்ரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
V2N, என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட சேர்மமும் வனேடியம் நைட்ரைடு என்றே அழைக்கப்படுகிறது. நைட்ரைடேற்றம் நிகழும்போதே இச்சேர்மமும் உண்டாகிறது[2]. வனேடியம் நைட்ரைடு கனசதுர பாறை உப்பு அமைப்பைக் கொண்டுள்ளது. V4 கொத்துகளைக் கொண்டுள்ள தாழ் வெப்பநிலை அமைப்பும் காணப்படுகிறது[3]. உயர் வெப்பநிலை சோடியம் குளோரைடு அமைப்பின் அதிர்வு முறைகள் சுழிக்குக் கீழாகக் குறைக்கப்படும் போது தோன்றும் இயக்க நிலைப்புத்தன்மை இன்மையினால் தாழ் வெப்பநிலை நிலை உருவாகிறது[4]
இச்சேர்மம் ஒரு வலிமையான இணைப்பு மீக்கடத்தியாகும்[5]. மீநுண்படிக வனேடியம் நைட்ரைடு மீமின் தேக்கிகளில் பயன்படுத்தப்படுகிறது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Munozriofano, R; Casteletti, L; Nascente, P (2006). "Study of the wear behavior of ion nitrided steels with different vanadium contents". Surface and Coatings Technology 200 (20–21): 6101. doi:10.1016/j.surfcoat.2005.09.026.
- ↑ Thermo reactive diffusion vanadium nitride coatings on AISI 1020 steel U.Sen Key Engineering Materials vols 264-268 (2004),577
- ↑ Kubel, F.; Lengauer, W.; Yvon, K.; Junod, A. (1988). "Structural phase transition at 205 K in stoichiometric vanadium nitride". Physical Review B 38 (18): 12908. doi:10.1103/PhysRevB.38.12908.
- ↑ A. B. Mei, O. Hellman, N. Wireklint, C. M. Schlepütz, D. G. Sangiovanni, B. Alling, A. Rockett, L. Hultman, I. Petrov, and J. E. Greene (2015). "Dynamic and structural stability of cubic vanadium nitride". Physical Review B 91 (5): 054101. doi:10.1103/PhysRevB.91.054101.
- ↑ Zhao, B. R.; Chen, L.; Luo, H. L.; Mullin, D. P. (1984). "Superconducting and normal-state properties of vanadium nitride". Physical Review B 29 (11): 6198. doi:10.1103/PhysRevB.29.6198.
- ↑ Choi, D.; Blomgren, G. E.; Kumta, P. N. (2006). "Fast and Reversible Surface Redox Reaction in Nanocrystalline Vanadium Nitride Supercapacitors". Advanced Materials 18 (9): 1178. doi:10.1002/adma.200502471.