நையோபியம் நைட்ரைடு
நையோபியம் நைட்ரைடு (Niobium nitride) என்பது NbN. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். நையோபியம் மற்றும் நைட்ரசன் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. 16 கெல்வின் வெப்பநிலை போன்ற தாழ் வெப்பநிலைகளில் நையோபியம் நைட்ரைடு மீக்கடத்தியாகிறது. மேலும் இது அகச்சிவப்பு ஒளியில் உணரியாகப் பயன்படுகிறது [1][2][3].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
நையோபியம் நைட்ரைடு
| |
இனங்காட்டிகள் | |
24621-21-4 | |
பப்கெம் | 90560 |
பண்புகள் | |
NbN | |
வாய்ப்பாட்டு எடை | 106.91 கி/மோல் |
தோற்றம் | சாம்பல் நிறத்திண்மம் |
அடர்த்தி | 8.470 கி/செ.மீ3 |
உருகுநிலை | 2,573 °C (4,663 °F; 2,846 K) |
வினைபுரிந்து அமோனியாவாகிறது | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரப் படிகம், cF8 |
புறவெளித் தொகுதி | Fm3m, No. 225 |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | வனேடியம் நைட்ரைடு டாண்ட்டலம் நைட்ரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பயன்கள்
தொகு- ஒரு மீக்கடத்தியாகப் பயன்படுவது நையோபியம் நைட்ரைடின் மிக முக்கியமான பயனாகும். அகச்சிவப்பு நிறமாலையில் 1-10 மைக்ரோ மீட்டர் பகுதியில் உள்ள தனி போட்டானை இதனால் உணரமுடியும். [4] இப்பயன் வானியல் மற்றும் தொலைதொடர்புகளில் முக்கியமானதாக உள்ளது. 25 கிகாயெர்ட்சு அளவிலான மாற்றங்களை இதனால் உணரமுடியும்.
- ஒளியியலில் எதிரொளிப்பை எதிர்க்கும் மேற்பூச்சாக வில்லைகள் மீது பூசுவதற்கும் இதைப் பயன்படுத்துகிறார்கள்.
- பேனசோனிக் நிறுவனம் 2015 ஆம் ஆண்டில் நையோபியம் நைட்ரைடை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஒளிவினையூக்கியை உருவாக்கியது. இது சுமார் 57% சூரிய ஒளியை ஈர்த்து தண்ணீர் சிதைவுறுதலை ஊக்குவித்து ஐதரசன் வாயு உற்பத்தியை அதிகரித்தது. இம்முறையில் உற்பத்தியாகும் வாயு மின்வேதியியல் எரி கலன்களில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது [5].
மேலும் படிக்க
தொகு- Counting Photons (using Niobium nitride) பரணிடப்பட்டது 2010-05-11 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
தொகு- ↑ Y. M. Shy, L. E. Toth and R. Somasundaram (1973). "Superconducting properties, electrical resistivities, and structure of NbN thin films". Journal of Applied Physics 44: 5539. doi:10.1063/1.1662193. Bibcode: 1973JAP....44.5539S.
- ↑ J. W. Kooi; J. J. A. Baselmans; M. Hajenius; J. R. Gao; T. M. Klapwijk; P. Dieleman; A. Baryshev; G. de Lange (2007). "IF impedance and mixer gain of NbN hot electron bolometers". Journal of Applied Physics 101: 044511. doi:10.1063/1.2400086. Bibcode: 2007JAP...101d4511K.
- ↑ S. P. Chockalingam; Madhavi Chand; John Jesudasan; Vikram Tripathi; Pratap Raychaudhuri (2009). "Superconducting properties and Hall effect in epitaxial NbN thin films". Physical Review B 77: 214503. doi:10.1103/PhysRevB.77.214503. Bibcode: 2008PhRvB..77u4503C.
- ↑ M Hajenius, J J A Baselmans, J R Gao, T M Klapwijk, P A J de Korte, B Voronov and G Gol'tsman (2004). "Low noise NbN superconducting hot electron bolometer mixers at 1.9 and 2.5 THz". Superconductor Science and Technology 17: S224. doi:10.1088/0953-2048/17/5/026. Bibcode: 2004SuScT..17S.224H.
- ↑ Yamamura, Tetsushi (August 2, 2015). "Panasonic moves closer to home energy self-sufficiency with fuel cells". Asahi Shimbun இம் மூலத்தில் இருந்து August 7, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150807010324/http://ajw.asahi.com/article/sci_tech/technology/AJ201508020014. பார்த்த நாள்: 2015-08-02.
.