வனேடோசின் டைகுளோரைடு

வேதிச் சேர்மம்

வனேடோசின் டைகுளோரைடு (Vanadocene dichloride) என்பது (η5-C5H5)2VCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் ஒருங்கிணைவுச் சேர்மமாகும். கரிம உலோக வேதியியலில் பொதுவாக Cp2VCl2 என்ற வாய்ப்பாடாக இதை சுருக்கி எழுவதும் உண்டு. தைட்டனோசின் டைகுளோரைடின் கட்டமைப்பை ஒத்த கட்டமைப்பிலேயே தைட்டானியம்(IV) அயனிக்குப் பதிலாக வனேடியம்(IV) அயனியுடன் இது காணப்படுகிறது. இச்சேர்மத்தில் ஓர் இணைசேரா எலக்ட்ரான் இருப்பதால் இது இணைகாந்தப் பண்பை வெளிப்படுத்துகிறது. பிசு(வளையபெண்டாடையீனைல்)வனேடியம்(IV) சேர்மங்களை தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாக Cp2VCl2 பயன்படுகிறது.

வனேடோசின் டைகுளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டைகுளோரோபிசு(η5-சைக்ளோபெண்டாடையீனைல்) வனேடியம்
வேறு பெயர்கள்
டைசைக்ளோபெண்டாடையீனைல் வனேடியம் டைகுளோரைடு
இனங்காட்டிகள்
12083-48-6 Y
Abbreviations Cp2VCl2
பப்கெம் 82917
வே.ந.வி.ப எண் YW1580000
UNII 4W2E0IDO21 Y
பண்புகள்
C10H10Cl2V
வாய்ப்பாட்டு எடை 252.03 கி/மோல்
தோற்றம் பச்சைநிற திண்மம்
அடர்த்தி 1.7 g/ml
உருகுநிலை சிதைவடையும்
கொதிநிலை சிதைவடையும்
கரையும் (நீராற்பகுப்பு அடையும்)
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சாய்வு
ஒருங்கிணைவு
வடிவியல்
நான்முகி
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் எரிச்சலூட்டி
R-சொற்றொடர்கள் R25 R36/37/38 R38
S-சொற்றொடர்கள் S26 S28 S36/37/39 S45
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

டெட்ரா ஐதரோபியூரானில் உள்ள வனேடியம் டெட்ராகுளொரைடுடன் சோடியம் சைக்ளோபெண்டாடையீனைலைடு சேர்த்து வினைபுரியச் செய்து வனேடோசின் டைகுளோரைடை விக்கின்சன்னும் பிரிம்மிங்காமும் தயாரித்தனர். [1]

வினைகளும் பயன்களும்

தொகு

கரிமத் தொகுப்பு வினைகளில் வனேடோசின் டைகுளோரைடு பயன்படுத்தப்படுகிறது. [2]

வனேடோசின் டைகுளோரைட்டை ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் வனேடோசின்ம் (C5H5)2V. கிடைக்கிறது.

தைட்டனோசின் டைகுளோரைடைப் போல இந்த கரிம வனேடியம் சேர்மமும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்தாக ஆராயப்பட்டு வருகிறது. டிரான்சுபெரின் எனப்படும் இரும்புக் கடத்துப் புரதத்துடன் கொண்டுள்ள தொடர்பு காரணமாக இது செயல்படுகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Wilkinson, G.; Birmingham, J. G. (1954). "Bis-cyclopentadienyl Compounds of Ti, Zr, V, Nb and Ta". J. Am. Chem. Soc. 76 (17): 4281–4284. doi:10.1021/ja01646a008. 
  2. Hirao, T.; Ogawa, A.; Asahara, M.; Muguruma, Y.; Sakurai, H. (2005). "d,l-Selective Pinacol-Type Coupling Using Zinc, Chlorosilane, and Catalytic Amount of Cp2VCl2; dl-1,2-Dicyclohexylethanediol". Organic Syntheses 81: 26. http://www.orgsyn.org/demo.aspx?prep=v81p0026. 
  3. Honzíček, Jan; Vinklárek, Jaromír (2015). "Bioinorganic chemistry of vanadocene dichloride". Inorganica Chimica Acta 437: 87–94. doi:10.1016/j.ica.2015.08.008. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வனேடோசின்_டைகுளோரைடு&oldid=2985866" இலிருந்து மீள்விக்கப்பட்டது