வரணி (Varany) இலங்கையின் வட மாகாணத்தின் யாழ்ப்பாணக் குடாநாட்டில், யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரிவில், சாவகச்சேரிப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட ஊர். முன்னர் வரணியில் வாழ்ந்த மக்கள் பயிர்த்தொழிலில் தமது அதிக கவனத்தைச் செலுத்தியிருந்தமையால், கல்வித்துறையில் முன்னேறுவது பற்றி அதிகம் சிந்திக்காமல் இருந்து வந்தனர். அதனால் அங்கு பெரிய பாடசாலைகள் உருவாகவில்லை. கல்வியில் அதிக கவனம் செலுத்தியவர்கள் பொதுவாக பேருந்திலோ அல்லது தொடருந்திலோ சாவகச்சேரி அல்லது யாழ்ப்பாணம் போன்ற இடங்களுக்கு நாளும் பயணம் செய்து தமது கல்வியைப் பெற்று வந்தனர். இங்கு மிகவும் புகழ் பெற்ற சுட்டிபுரம் அம்மன் கோவில் அமைந்துள்ளது.

வரணி கிராம சேவையாளர் பிரிவுகள்தொகு

 1. யா/337 குடமியன்
 2. யா/338 நாவற்காடு
 3. யா/339 வரணி வடக்கு
 4. யா/340 மாசேரி
 5. யா/341 இடைக்குறிச்சி
 6. யா/342 கரம்பைக்குறிச்சி
 7. யா/343 வரணி இயற்றாலை
 8. யா/344 தாவளை இயற்றாலை

வரணியில் அமைந்துள்ள பாடசாலைகள்தொகு

 • வரணி மகா வித்தியாலயம்
 • யா/இடைக்குறிச்சி ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயம்
 • யா/சைவபிரகாச வித்தியாலயம்
 • கணபதிப்பிள்ளை வித்தியாலயம்
 • ஸ்ரீசுப்பிரமணிய வித்தியாலயம்
 • அமெரிக்கன் மிசன். த.க.பாடசாலை
 • யா/வரணி வடக்கு அ.த.க பாடசாலை
 • கரம்பை குருச்சி அ.த.க பாடசாலை (முத்தட்டு)
 • யா/அ.த.க பாடசாலை
 • மந்துவில் ஸ்ரீபாரதி வித்தியாலயம்
 • கரம்பை அ.த.க பாடசாலை (நாவற்காடு 3ம் பள்ளம்)

வரணியில் அமைந்துள்ள இந்து ஆலயங்கள்தொகு

 • சுட்டிபுரம் அம்மன் கோவில்
 • வடவரணி வயிரவர் ஆலயம்
 • சிமிள் அம்மன் - வரணி வடக்கு
 • கேலத்து அம்மன் - மந்துவில்
 • காட்டுக்கந்தசாமி கோவில் - இயற்றாலை
 • சேவலைப்பிட்டி கந்தசாமி கோவில் - இடைக்குறிச்சி
 • கொட்டிக்கன் கந்தசாமி கோவில் - வரணி இயற்றாலை
 • திக்கில் கந்தசாமி கோவில் - வரணி மத்தி
 • கந்தசாமி கோவில் - கறுக்காய்
 • ஆலைமடம் கந்தசாமி கோவில் - வரணி இயற்றாலை
 • நாவலடிப் பிள்ளையார் - வரணி வடக்கு
 • கும்பிட்டான் கற்பகவிநாயகர் தம்பான் - வரணி வடக்கு
 • கறுக்காய் பிள்ளையார் கோவில் - வரணி வடக்கு
 • பெட்டையர் குளம் பிள்ளையார் கோவில் - குடமியன்
 • தில்லையம்பலம் பிள்ளையார் - வரணி
 • கொம்புதட்டி பிள்ளையார் - கரம்பைக்குறிச்சி
 • மூன்றாம் பள்ளம் பிள்ளையார் - நாவற்காடு
 • தனிவளைப் பிள்ளையார் - நாவற்காடு
 • குடலைகூறி பிள்ளையார் - நாவற்காடு
 • வேலாயுதசாமி - கரம்பை குறிச்சி
 • குருநாதர் - மாசேரி
 • சடைவைரவர் - குடமியன்
 • ஐய்யன் கோவில் - கரம்பைக்குறிச்சி
 • கரம்பன் பிள்ளையார் - வரணி மத்தி
 • கல்வளைப் பிள்ளையார் - தாவளை இயற்றாலை
 • திம்பிரிவில் விரக்திப் பிள்ளையார் - வரணி மத்தி
 • கயாமரவை வைரவர் - நாவற்காடு
 • அண்ணாமார் - நாவற்காடு
 • நாக தம்பிரான் கோவில் - இயற்றாலை (குமரனி)
 • பெரியநாக தம்பிரான் கோவில் - குருக்கள்குடியிருப்பு
 • நாச்சிமார் கோவில் - வரணி வடக்கு

இவற்றையும் பார்க்கவும்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வரணி&oldid=2853894" இருந்து மீள்விக்கப்பட்டது