வரித் தூக்கணம்

வரித் தூக்கணம்
Ploceus manyar.JPG
இந்தியாவின் அரியானா மாநிலத்தில் குருகிராம் என்ற நகருக்கு அருகில் அமைந்துள்ள பைசா ஈரநிலத்தில் காணப்படும் ஆண் வரித் தூக்கணம்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: பிளோசடே
பேரினம்: பிளோசியேசு
இனம்: பி. மேன்யர்
இருசொற் பெயரீடு
பிளோசியேசு மேன்யர்
(கோர்சுபீல்டு, 1821)

வரித் தூக்கணம் (Streaked Weaver)(பிளோசியேசு மேன்யர்) அல்லது கருங்கீற்றுத் தூக்கணம் என்பது பிளோசடே (Ploceidae) குடும்பத்தைச் சார்ந்த தூக்கணாங்குருவி சிற்றினம் ஆகும். இந்தச் சிற்றினம் நான்கு துணையினங்களைக் கொண்டுள்ளது.

உடலமைப்பும் கள அடையாளங்களும்தொகு

பெருமளவில் காணப்படும் துணைச் சிற்றினமான பி. மேன்யர் பிளாவிசெப்சு சிட்டுக்குருவியை விட சற்று சிறியது. இதன் உடல் நீளம் 15 செ. மீ. ஆகும். வளர்ந்த ஆண் குருவியின் உச்சந்தலை அடர்மஞ்சள் நிறத்துடன், அதன் கீழே கருங்கபில நிறத்தில் காணப்படும். வெண்ணிற அடிப்பகுதியில் கரும்பழுப்புக் கீற்றுகள் காணப்படும்.

பரம்பல்தொகு

கருங்கீற்றுத் தூக்கணாங்குருவிகள் இந்தியத் துணைக்கண்டம் (மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் ராஜஸ்தானில் சில பகுதிகள் நீங்கலாக), ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகக் காணப்படுகின்றன[2]. தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் இவை காணப்படுகின்றன.

மேற்கோள்கள்தொகு

  1. "Ploceus manyar". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. "ebird - Range Map". 05 June 2021 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |access-date= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரித்_தூக்கணம்&oldid=3343979" இருந்து மீள்விக்கப்பட்டது