வரி மர மூஞ்சூறு
வரி மர மூஞ்சூறு Striped treeshrew | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | இசுகேன்டென்டியா
|
குடும்பம்: | துபாயடே
|
பேரினம்: | துபையா
|
இனம்: | து. டார்சாலிசு
|
இருசொற் பெயரீடு | |
துபையா டார்சாலிசு[2] | |
வரி மர மூஞ்சூறு பரம்பல் |
வரி மர மூஞ்சூறு (Tupaiia dorsalis-துபையா டார்சாலிசு) என்பது மர மூஞ்சூறு பேரினமான துபையாவின் சிற்றினம் ஆகும்.[2]
விளக்கம்
தொகுவரி மர மூஞ்சூறுவின் உடல் நீளம் 140 முதல் 230 மி.மீ. வரை இருக்கும். இதன் வாலின் அடிப்பகுதி உரோமங்கள் இன்றி, புதர் போல் உள்ளது. உடல் முழுவதும் குறைந்த அளவிலான உரோமங்கள் காணப்படும். இதன் உடலின் பின்புறம் கருமையாகவும், அதிகப் புள்ளிகளுடன் ஆலிவ்-பழுப்பு நிறமாகவும் இருக்கும்.[3][4]
இனப்பெருக்கம்
தொகுவரி மர மூஞ்சூறு ஒரு மணதார தன்மை கொண்டவை. இருப்பினும், இதன் பேரினத்தில் உள்ள பிற சிற்றினங்கள் பலதார மணத்தினைக் கொண்டுள்ளன.[5] சனவரி முதல் சூலை வரை அதிக உற்பத்தித் திறனை அளிக்கும் இனப்பெருக்கக் காலமாக உள்ளது. பாலின முதிர்ச்சியை 45 கிராம் எடையினை அடையும் போது பெண் மூஞ்சூறு பெறுகின்றது. கர்ப்ப காலம் 45 முதல் 55 நாட்கள் வரை நீடிக்கும். இதன் பின்னர் பொதுவாக 6 முதல் 8 கிராம் எடையுள்ள குட்டிகள் பிறக்கின்றன. தாய்ப்பாலூட்டுதல் 30 நாட்கள் வரை நீடிக்கும். இதன் பின்னர் பெற்றோர் அரவணைப்பிலிருந்து விலகும் குட்டிகள், சுமார் 2 மாதங்களில் பாலியல் முதிர்ச்சி அடையும்.
வாழிடம்
தொகுவரி மர மூஞ்சூறு போர்னியோவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. சபா, சரவாக், புரூணை மற்றும் கலிமந்தானில் உள்ள ஒரு சில உயிரிகளிடமிருந்து மட்டுமே இதன் பரவல் அறியப்படுகிறது.[1] இது பொதுவாகத் தாழ் நிலங்களில் காணப்படுகிறது.
நடத்தை
தொகுவரி மர மூஞ்சூறு தனியாக அல்லது எப்போதாவது இணையாகவோ வாழ்கிறது. இவை தனது சொந்தச் சிற்றினத்தின் ஊடுருவல்களைக் கடுமையாக எதிர்க்கும். இவை ஒரு விசித்திரமான ஊதல் ஒலியை உருவாக்கும். பொதுவாக நீரில் குளிப்பதிலும் நீரைப் பருகுவதிலும் ஆர்வம் மிக்கவை.[6]
உணவுப் பழக்கம்
தொகுதுபையா டார்சலிசு என்பது ஓர் அனைத்துண்ணி. இவை பூச்சிகளை, குறிப்பாக ஈக்கள், கிரிகெட்டுகள், வெட்டுக்கிளிகள் மற்றும் கரப்பான் பூச்சிகளை உண்கின்றன. இவை பழங்கள், விதைகள் மற்றும் தாவரங்களின் இலைகளையும் சாப்பிடும். பழம் உண்ணும் பழக்கம் காரணமாக இவை விதைகளைப் பரப்பலாம்.[7][8]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Gerrie, R.; Kennerley, R. (2019). "Tupaia dorsalis". IUCN Red List of Threatened Species 2019: e.T41493A22280298. doi:10.2305/IUCN.UK.2019-1.RLTS.T41493A22280298.en. https://www.iucnredlist.org/species/41493/22280298. பார்த்த நாள்: 26 January 2022.
- ↑ 2.0 2.1 Helgen, K.M. (2005). "Species Tupaia dorsalis". In Wilson, D.E.; Reeder, D.M. (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 106. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
- ↑ Ankle-Simons, F. 2007. Primate Anatomy. United States: Academic Press. Accessed March 02, 2017 at https://books.google.com/books?id=5fttVRAHA4MC&printsec=frontcover&dq=ankle-simons&hl=en&sa=X&ved=0ahUKEwjnrcTbrOLTAhUH7IMKHdVqBf4Q6AEILzAC#v=onepage&q=ankle-simons&f=false.
- ↑ Endo, H., T. Hikida, L. Chou, K. Fukuta, B. Stafford. 2004. Proportion and Cluster Analyses of the Skull in Various Species of the Tree Shrews. The Journal of Veterinary Medical Science, Volume 66: 1-6. Accessed March 02, 2017 at https://www.ncbi.nlm.nih.gov/pubmed/14960803.
- ↑ Ward Lyon, M. 1913. Treeshrews: an account for the mammalian family Tupaiidae. University of Michigan: U.S. Government Print Office. Accessed May 08, 2017 at https://books.google.com/books?hl=en&lr=&id=k1JLAAAAMAAJ&oi=fnd&pg=PA1&dq=tupaia+dorsalis+geographic+range&ots=RUsz0JQXX-&sig=bm5SJvKpUxfNPkixHovK47V81-U#v=onepage&q=tupaia%20dorsalis%20geographic%20range&f=false.
- ↑ Stone, D. 1995. Eurasion Insectivores and Tree Shrews: Status Survey and Conservation Action Plan. Cambridge, UK: IUCN. Accessed May 05, 2017 at https://books.google.com/books?id=GgtbBAAAQBAJ&pg=PA62&lpg=PA62&dq=tupaia+dorsalis&source=bl&ots=RDxHvP8zUg&sig=5n1OQwKGVHb03gYofogNTIOaPXU&hl=en&sa=X&ved=0ahUKEwi5wP6Rtd7TAhVn7oMKHfqqDyQ4ChDoAQg6MAc#v=onepage&q=tupaia%20dorsalis&f=false.
- ↑ Lelevier, M. 2013. "Animal Diversity Web" (On-line). Tupaia minor. Accessed May 06, 2017 at http://animaldiversity.org/accounts/Tupaia_minor/.
- ↑ Lowther, T. 2013. "Animal Diversity Web" (On-line). Tupaia belangeri. Accessed May 06, 2017 at http://animaldiversity.org/accounts/Tupaia_belangeri/.