வலிகாமம் மேற்கு பிரதேச சபை

வலிகாமம் மேற்கு பிரதேச சபை (Valikamam West Divisional Council) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 47.30 சதுர மைல்கள். இதன் வடக்கில் கடலும்; கிழக்கில் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையும்; தெற்கிலும் மேற்கிலும் நீரேரியும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்களும், சபையின் தலைவரும் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் 14 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த 14 உறுப்பினர்களும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் இடம்பெறும் தேர்தல் ஊடாகத் தெரிவு செய்யப்படுகின்றனர்.

வட்டாரங்கள் தொகு

வலிகாமம் மேற்கு பிரதேச சபைப் பகுதி 15 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வட்டாரங்களின் இலக்கம், பெயர், அவற்றில் அடங்கியுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பற்றிய விபரங்களைக் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.[1]

வட்டாரங்கள் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
இல. பெயர் இல. பெயர்
1 சுழிபுரம் மேற்கும் மத்தியும் J172 சுழிபுரம் மேற்கு
J173 சுழிபுரம் மத்தி
2 சுழிபுரம் கிழக்கு J174 சுழிபுரம் கிழக்கு
3 பண்ணாகம்-பனிப்புலம் J175 பண்ணாகம்
J176 பனிப்புலம்
4 பொன்னாலை J170 பொன்னாலை
5 தொல்புரம் J168 தொல்புரம் கிழக்கு
J169 தொல்புரம் மேற்கு
6 வட்டுக்கோட்டை கிழக்கு - சித்தங்கேணி J157 வட்டுக்கோட்டை கிழக்கு
J177 சித்தங்கேணி
7 சங்கானை மேற்கும் மத்தியும் J179 சங்கானை மேற்கு
J181 சங்கானை மத்தி
8 மூளாய் J171 மூளாய்
9 வட்டுக்கோட்டை வடக்கும் மேற்கும் J158 வட்டுக்கோட்டை வடக்கு
J167 வட்டுக்கோட்டை மேற்கு
10 சங்கானை கிழக்கும் தெற்கும் J178 சங்கானை கிழக்கு
J180 சங்கானை தெற்கு
11 சங்கரத்தை J159 சங்கரத்தை
12 வட்டுக்கோட்டை தெற்கும் தென்மேற்கும் J165 வட்டுக்கோட்டை தெற்கு
J166 வட்டுக்கோட்டை தென்மேற்கு
13 அராலி மேற்கும் மத்தியும் J160 அராலி மேற்கு
J161 அராலி மத்தி
14 அராலி தெற்கு J162 அராலி தெற்கு
15 அராலி கிழக்கும் வடக்கும் J163 அராலி கிழக்கு
J164 அராலி வடக்கு

தேர்தல் முடிவுகள் தொகு

1998 உள்ளூராட்சித் தேர்தல் தொகு

29 சனவரி 1998 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல்:[2][3]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  ஈழ மக்கள் சனநாயகக் கட்சி 3,146 49.74% 8
  சனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) 2,358 37.28% 4
  தமிழீழ விடுதலை இயக்கம் 494 7.81% 1
  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 327 5.17% 1
செல்லுபடியான வாக்குகள் 6,325 100.00% 14
செல்லாத வாக்குகள் 1,307
மொத்த வாக்குகள் 7,632
பதிவில் உள்ள வாக்காளர்கள் 37,746
வாக்களித்தோர் 20.22%

2011 உள்ளூராட்சித் தேர்தல் தொகு

23 யூலை 2011 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல்:[4]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * 12,117 77.78% 11
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ** 3,041 19.52% 3
  ஐக்கிய தேசியக் கட்சி 420 2.70% 0
செல்லுபடியான வாக்குகள் 15,578 100.00% 14
செல்லாத வாக்குகள் 2,058
மொத்த வாக்குகள் 17,636
பதிவில் உள்ள வாக்காளர்கள் 30,214
வாக்களித்தோர் 58.37%
* ஈபிஆர்எல்எஃப் (சு), இதக, புளொட், டெலோ, தவிகூ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
** ஈபிடிபி, இசுக ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.

மேற்கோள்கள் தொகு

  1. Ward Map for Valikamam West Pradeshiya Sabha – Jaffna District[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Election commissioner releases results". TamilNet. 30 January 1998.
  3. D.B.S. Jeyaraj (15 February 1998). "The Jaffna Elections". Tamil Times XVII (2): 12–15. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://www.noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_1998.02&uselang=en. பார்த்த நாள்: 24 மார்ச் 2017. 
  4. "Local Authorities Election - 23.07.2011 Jaffna District Valikamam West Pradeshiya Sabha". Department of Elections, Sri Lanka.[தொடர்பிழந்த இணைப்பு]