வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/20

பெஞ்சமின் ஆண்ட்ரூ ஸ்டோக்ஸ் (Benjamin Andrew Stokes பொதுவாக பென் ஸ்டோக்ஸ் என்று அறியப்படுகிறார்) (பிறப்பு: சூன் 4, 1991) இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் வீரரும் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் துணைத்தலைவரும் ஆவார். 2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த இவர் இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

நியூசிலாந்தில் கிறைஸ்ட்சேர்ச் நகரத்தில் பிறந்த இவர் தனது பன்னிரண்டாவது வயதில் வடக்கு இங்கிலாந்திற்குப் புலம்பெயர்ந்து அங்கிருந்த உள்ளூர் அணிகளின் சார்பாக துடுப்பாட்டம் விளையாடத் துவங்கினார். பன்முக ஆட்டக்காரரான இவர் வலதுகை விரைவு வீச்சாளரும் இடதுகை மட்டையாளரும் ஆவார்.

பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணிக்காக தேர்வுப் மோட்டிகளில் அதிவேக இரட்டை நூறு, அதிவேக 250 மற்றும் 6-வது மட்டையாளரின் அதிகபட்ச ஓட்டங்கள் உள்ளிட்ட சாதனைகளைப் படைத்துள்ளார்.