வலைவாசல்:மெய்யியல்/தேர்ந்தெடுத்த கட்டுரை/3

துசிடைடெஸ் (ஏறத்தாழ. 460 கி.மு – ஏறத்தாழ 395 கி.மு) (கிரேக்கம் Θουκυδίδης, Thoukydídēs) ஒரு கிரேக்க வரலாற்றாசிரியர். கி.மு ஐந்தாம் நூற்றண்டில் தொடங்கி, எசுபார்த்தாவிற்கும் ஏதென்ஸிற்கும் இடையே கி.மு 411 வரை நடைபெற்ற போர் நிகழ்வுகள் குறித்த பெலோப்போன்னேசியப் போர் வரலாற்றின் ஆசிரியர். தரமான வரலாற்றுச் சான்றுகளைச் சேர்ப்பதில் கண்டிப்பாக இருந்தமையாலும், கடவுள் இடையீடுகளை மறுத்து காரண-காரிய முறையில் வரலாற்றை ஆய்ந்ததாலும், இவரை 'அறிவியல் முறை வரலாற்றின் தந்தை' என்றும் வழங்குவர்.

அரசியல் இயல்பியல் எனும் கொள்கைக் கூடத்தின் தந்தையாகவும் கருதப்படுவார். இக்கொள்கைப்படி, நாடுகளுக்கிடையேயான உறவுகள் நீதி அடிப்படையிலன்றி வலிமையின் அடிப்படையிலேயே அமையும் என்பது கருத்து. உலகெங்கிலும் பல மேம்பட்ட படைசார் கல்விகளிலும் இவரது தொன்மையான எழுத்துக்கள் இன்றளவும் கற்பிக்கப்படுகின்றன. அவரது மெலியன் உரையாடல் பன்னாட்டு உறவுகள் பனைவில் ஓர் அரும்படைப்பாக இன்றளவும் கருதப்படுகிறது.

மேலும் படிக்க...