வல்லுநர் மன்றம் (ஈரான்)

ஈரானின் வல்லுநர்கள் மன்றம் (Assembly of Experts) (பாரசீக மொழி: مجلس خبرگان رهبری‎, romanized: majles-e khobregân-e rahbari) ஈரானின் அதியுயர் தலைவரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் படைத்த மன்றம் ஆகும். [2][3] வல்லுநர்கள் மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரகளை, ஈரானின் பாதுகாவலர் மன்றம் நேரடியாக நன்கு ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கும். மேலும் வல்லுநர்கள் மன்ற உறுப்பினர்கள் ஈரானின் உச்ச தலைவரால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நியமிக்கப்படுகிறார்கள். [4] ஈரானின் வல்லுநர்கள் மன்றம் 88 உறுப்பினர்களைக் (Mujtahid) கொண்டது.[5][6]வல்லுநர் மன்ற உறுப்பினர்கள்ன் பதவிக்காலம் 8 ஆண்டுகள் ஆடும். [7]மேலும் ஈரான் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இந்த வல்லுநர்கள் மன்றம் தேர்வு செய்யும்.

ஈரானின் வல்லுநர்கள் மன்றம்
மரபு சின்னம் அல்லது சின்னம்
தலைமை
பெருந்தலைவர்
அகமதி ஜன்னதி
24 மே 2016 முதல்
முதல் துணைப் பெருந்தலைவர்
இப்ராகிம் ரைசி
12 மார்ச் 2019 முதல்
இரண்டாம் துணைப் பெருந்தலைவர்
அலி மொவாகெதி கெர்மானி
13 மார்ச் 2018 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்88 (6 இடங்கள் காலியாக உள்ளது.)
அரசியல் குழுக்கள்
இசுலாமிய மதகுருமார்கள் சங்கம்
மதராசா பள்ளிகளின் ஆசிரியர்கள்
மார்க்க நிபுணர்கள்
ஆட்சிக்காலம்
8 ஆண்டுகள்[1]
தேர்தல்கள்
மாவட்டத் தொகுதிகள்[1]
அண்மைய தேர்தல்
26 பிப்ரவரி 2016
கூடும் இடம்
ஈரானிய வல்லுநர்கள் மன்றக் கட்டிடம், தெகுரான், ஈரான்
வலைத்தளம்
www.majlesekhobregan.ir

வல்லுநர்கள் மன்றத்தின் பணிகளும், அதிகாரங்களும்

தொகு

வல்லுநர்கள் மன்றம் நீதி பரிபாலனம் மற்றும் இசுலாமிய மெய்யியல் அவையாகவும் செயல்படும். ஈரானிய அரசியலமைப்பின் படி, வல்லுநர்கள் மன்றம், ஈரானின் அதியுயர் தலைவரை தேர்வு செய்யவும், நீக்கவும் அதிகாரம் படைத்தது. ஈரானிய அதியுயர் தலைவர் இறப்பின் அல்லது பதவியிலிருந்து நீக்கப்பட்டால், வல்லுநர்கள் மன்றம் உடனடியாக புதிய உச்சத் தலைவரை நியமிப்பர். [8]

இருப்பினும் பதவியிலிருக்கும் ஈரானின் உச்சத்தலைவரை நீக்கும் பணி வல்லுநர்கள் மன்றம் செய்யாது. வல்லுநர்கள் மன்றத்தின் கூட்டம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும். அதன் கூட்டத் தீர்மானங்கள் வெளியிடப்படாது. ஈரானின் உச்சத் தலைவரின் எந்தவொரு முடிவையும் கேள்வி கேட்கவோ அல்லது வெளிப்படையாகவோ கருத்து தெரிவிப்பதற்கு வல்லுநர்கள் மன்றத்திற்கு அதிகாரம் இல்லை.[9]வல்லுநர்கள் மன்றம், ஈரானின் அதியுயர் உச்சத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் இசுலாமிய மார்க்க அறிவு, நீதி பரிபாலனம், நிர்வாகத் தகுதிகள், சமூக & அரசியல் தகுதிகள், நன்நடத்தைகள் குறித்து தங்களுக்குள்ளே கலந்து பேசி ஆலோசனை செய்து முடிவுகள் அறிவிப்பர்.[8] 1989-ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட ஈரானிய அரசியலமைப்புச் சட்டத்தின் படி, ஈரானிய அதியுயர் உச்சத் தலைவர் பன்னிருவர் இசுலாமியப் பிரிவை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும் என்ற பிரிவு நீக்கப்பட்டது. இதன் படி அலி காமெனி 1989 முதல் ஈரானின் உச்சத் தலைவராக உள்ளார்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Nohlen, Dieter; Grotz, Florian; ஹார்ட்மன், Christof (2001). "Iran". Elections in Asia: A Data Handbook. Vol. I. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 64. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-924958-X.
  2. Article 107 of the Constitution of Iran}}
  3. Article 111 of the Constitution of Iran
  4. "Rafsanjani breaks taboo over selection of Iran's next supreme leader". The Guardian. 14 December 2015. https://www.theguardian.com/world/2015/dec/14/rafsanjani-breaks-taboo-over-selection-of-irans-next-supreme-leader. 
  5. (see Article 108 of the constitution)
  6. LL.M., Prof. Dr. Axel Tschentscher. "ICL - Iran - Constitution". www.servat.unibe.ch. பார்க்கப்பட்ட நாள் 6 April 2018.
  7. "Understanding Iran's Assembly of Experts" (PDF). Archived from the original (PDF) on 30 June 2007. பார்க்கப்பட்ட நாள் 2012-07-28.
  8. 8.0 8.1 "Iranian Government Constitution, English Text". Iran Online. Archived from the original on 23 November 2010. பார்க்கப்பட்ட நாள் 28 July 2012.
  9. "Iran Announces Second Extension of Voting," Reuters, 23 October 1998.

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லுநர்_மன்றம்_(ஈரான்)&oldid=4148682" இலிருந்து மீள்விக்கப்பட்டது