வளையயெக்சேன் தயோல்

வளையயெக்சேன் தயோல் (Cyclohexanethiol) என்பது C6H11SH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமவேதியியல் சேர்மமாகும். தயோல் வகை சேர்மமான இது நிறமற்றதாகவும் கடுமையான நெடியுடைய சேர்ம்மாகவும் காணப்படுகிறது. பொதுவாக சைக்ளோயெக்சேன் தயோல் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

வளையயெக்சேன் தயோல்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
வளையயெக்சேன் தயோல்
இனங்காட்டிகள்
1569-69-3 Y
ChemSpider 14555
InChI
  • InChI=1S/C6H12S/c7-6-4-2-1-3-5-6/h6-7H,1-5H2
    Key: CMKBCTPCXZNQKX-UHFFFAOYSA-N
  • InChI=1/C6H12S/c7-6-4-2-1-3-5-6/h6-7H,1-5H2
    Key: CMKBCTPCXZNQKX-UHFFFAOYAW
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 15290
  • C1CCC(CC1)S
UNII N8HOD9900V Y
பண்புகள்
C6H12S
வாய்ப்பாட்டு எடை 116.22 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.95 கி/செ.மீ3
கொதிநிலை 158 முதல் 160 °C (316 முதல் 320 °F; 431 முதல் 433 K)
குறைவு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

கார்பனிருசல்பைடை கந்தகத்தின் மூலமாகப் பயன்படுத்தி வளையயெக்சேனை ஓர் இயங்கு உறுப்பு வினையின் மூலம் வினைப்படுத்தி முதன்முதலில் வளையயெக்சேன் தயோல் தயாரிக்கப்பட்டது. [1] ஓர் உலோக சல்பைடு வினையூக்கியின் மீது ஐதரசன் சல்பைடு முன்னிலையில் வளையயெக்சனோனை ஐதரசனேற்றம் செய்து தொழில் முறையாக வளையயெக்சேன் தயோல் தயாரிக்கப்படுகிறது.

C6H10O + H2S + H2 → C6H11SH + H2O

நிக்கல் சல்பைடு முன்னிலையில் வளைய்யெக்சீனுடன் ஐதரசன் சல்பைடை சேர்த்து வினைபுரியச் செய்தும் இதை தயாரிக்கிறார்கள்.[2]

பாதுகாப்பு

தொகு

சுண்டெலிக்குள் ஊசி மூலமாகச் செலுத்தப்பட்டால் வளையயெக்சேன் தயோலினுடைய உயிர் கொல்லும் அளவு கிலோகிராமுக்கு 316 மில்லி கிராம் உள்ளதாக அமெரிக்க சுகாதார, கல்வி மற்றும் நல்வாழ்வுத்துறை மதிப்பீடு செய்துள்ளது. [3]

மேற்கோள்கள்

தொகு
  1. Kharasch, M.S.; Eberly, Kenneth (February 1941). "Reactions of Atoms and Free Radicals in Solution. III. The Introduction of a Mercaptan Group into Cyclohexane". J. Am. Chem. Soc. 63 (2): 625. doi:10.1021/ja01847a508. 
  2. Kathrin-Maria Roy "Thiols and Organic sulphides" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2002, Wiley-VCH Verlag, Weinheim. எஆசு:10.1002/14356007.a26_767
  3. Occupational Exposure to N-alkane Mono Thiols, Cyclohexanethiol, and Benzenethiol. U.S. Government Printing Office. 1978.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளையயெக்சேன்_தயோல்&oldid=3122943" இலிருந்து மீள்விக்கப்பட்டது