வளையஎக்சீன்

வளையஎக்சீன் (Cyclohexene) C6H10 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு நீரகக்கரிமம் ஆகும். இந்த வளைய ஆல்க்கீன் நுண்ணிய மணமுடைய ஒரு நிறமற்ற நீர்மம் ஆகும். இச்சேர்மமானது, பல தொழிலக செயல்முறைகளில் ஒரு இடைநிலைச் சேர்மமாகும். நீண்ட கால சேமிப்பு, ஒளி மற்றும் காற்றுக்கு வெளிப்படுத்தும்போது பெராக்சைடுகளை உருவாக்கும் காரணத்தால் பெரிய அளவிலான நிலைத்தன்மையைக் கொண்டிருப்பதில்லை.  

வளையஎக்சீன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
சைக்ளோஎக்சீன்
வேறு பெயர்கள்
டெட்ராஐதரோபென்சீன், 1,2,3,4-டெட்ராஐதரோபென்சீன், பென்சீன்டெட்ராஐதரைடு, வளையஎக்ச்-1-ஈன், எக்சாப்தைலீன், UN 2256
இனங்காட்டிகள்
110-83-8 Y
ChEBI CHEBI:36404 Y
ChEMBL ChEMBL16396 Y
ChemSpider 7788 Y
EC number 203-807-8
InChI
  • InChI=1S/C6H10/c1-2-4-6-5-3-1/h1-2H,3-6H2 Y
    Key: HGCIXCUEYOPUTN-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C6H10/c1-2-4-6-5-3-1/h1-2H,3-6H2
    Key: HGCIXCUEYOPUTN-UHFFFAOYAQ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8079
வே.ந.வி.ப எண் GW2500000
  • C1CCC=CC1
பண்புகள்
C6H10
வாய்ப்பாட்டு எடை 82.143 கி/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மணம் இனிமையான மணம்
அடர்த்தி 0.8110 கி/செமீ3
உருகுநிலை −103.5 °C (−154.3 °F; 169.7 K)
கொதிநிலை 82.98 °C (181.36 °F; 356.13 K)
நீரில் கரைவதில்லை
கரைதிறன் கரிமக் கரைப்பான்களில் இலேசாகக் கரைகிறது.
ஆவியமுக்கம் 8.93 கிபாசுகல் (20 °செ)

11.9 கிபாசுகல் (25 °செ)

0.022 மோல்·கிகி−1·பார்−1
-57.5·10−6 செமீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.4465
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
R-சொற்றொடர்கள் R11, R19, R21/22
S-சொற்றொடர்கள் S16, S23, S24, S25, S33
தீப்பற்றும் வெப்பநிலை −12 °C (10 °F; 261 K)
Autoignition
temperature
244 °C (471 °F; 517 K)
வெடிபொருள் வரம்புகள் 0.8–5 %
Lethal dose or concentration (LD, LC):
1946 மிகி/கிகி (வாய்வழி, எலி)
13,196 இவொப (சுண்டெலி, 2 மணி)[2]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 300 இவொப (1015 மிகி/மீ3)[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 300 இவொப (1015 மிகி/மீ3)[1]
உடனடி அபாயம்
2000 இவொப[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு மற்றும் பயன்கள்

தொகு

வளையஎக்சீனானது அசாகி வேதி நிறுவனம் உருவாக்கிய செயல்முறையினைப் பயன்படுத்தி பென்சீனை பகுதி ஐதரசனேற்றம் செய்வதால் தயாரிக்கப்படுகிறது.[3] இது முதலில் வளையஎக்சனாலாக மாற்றப்பட்டு பின்னர் ஐதரசன் நீக்கல்வினைக்கு  உட்படுத்தப்பட்டு கேப்ரோலேக்டத்தின் முன்னோடிச் சேர்மமான வளையஎக்சனோனைத் தருகிறது.[4] வளையஎக்சனோனானது அடிபிக் அமிலம், மேலியிக் அமிலம், இருவளையஎக்சைல்அடிப்பேட்டு மற்றும் வளையஎக்சீன் ஆக்சைடு ஆகிய சேர்மங்களுக்கும் முன்னோடிச் சேர்மமாகும். மேலும், இது கரைப்பானாகப் பயன்படுகிறது.

ஆய்வக பரிசோதனைகள்

தொகு

தொகுப்பு

தொகு

கரிம வேதியியலில் தொடக்க நிலையில் உள்ள மாணவர்களுக்கான பொதுவான சோதனைகளில் ஒன்றாக இது உள்ளது. இந்த வினையில், அமிலத்தை வினைவேக மாற்றியாகக் கொண்டு வளையஎக்சனாலின் நீர் நீக்க வினை நிகழ்த்தப்பட்டு வடித்திறக்கல் முறையில் கிடைக்கக்கூடிய வளையஎக்சீனை வினைக்கலவையில் இருந்து பிரித்தெடுக்கப்பட வேண்டும்.

 
 

பிணைப்பின் ஆக்சினேற்ற பிளவு

தொகு

கரிம ஆக்சிசனேற்ற வினைகளின் மூலமாக வளையஎக்சீனிலிருந்து அடிபிக் அமிலம் பெறப்படும் வினையானது ஒரு பசுமை வேதியியல் வினையாகும். டங்ஸ்டன் வினையூக்கியின் முன்னிலையில் ஐதரசன் பேரொட்சைடு ஒரு ஆக்சிசனேற்றியாகப் பயன்படுகிறது..[5]

அமைப்பு

தொகு

வளையஎக்சேனானது நாற்காலி வடிவ அமைப்பிற்கு அதிக முன்னுரிமை தருவதாக இருக்க, வளையஎக்சீனானது அரை-நாற்காலி வடிவ அமைப்பில் மிகுந்த நிலைத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது.[6] வளைய அமைப்பில், ஒவ்வொரு பிணைப்பையும் எதிரெதிரான நிலையைக் கொண்டிருப்பதற்கான முயற்சியானது நாற்காலி அமைப்பிற்கான முன்னுரிமைக்கான அடிப்படைக் காரணமாக உள்ளது. வளையஎக்சீனைப் பொறுத்தவரை, ஆல்க்கீனானது தள அமைப்பை மறைப்பு வெளி வடிவ அமைப்பிற்குச்(eclipsed conformation) சமானமான அமைப்பில் தள அமைப்பினைப் பெற்றுள்ளது.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  • International Chemical Safety Card 1054
  • "NIOSH Pocket Guide to Chemical Hazards #0167". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  • Material Safety Data Sheet for cyclohexene
  • Safety MSDS data பரணிடப்பட்டது 2007-10-22 at the வந்தவழி இயந்திரம்
  • Reaction of Cyclohexene with Bromine and Potassium Permanganate
  • Cyclohexene synthesis
  • Data sheet at inchem.org

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0167". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. "Cyclohexene". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. Cyclohexanol, method for producing cyclohexanol, and method for producing adipic acid, 26 Sep 2017, பார்க்கப்பட்ட நாள் 2017-12-04 {{citation}}: Unknown parameter |inventor-first= ignored (help); Unknown parameter |inventor-last= ignored (help); Unknown parameter |inventor2-first= ignored (help); Unknown parameter |inventor2-last= ignored (help)
  4. Michael T. Musser "Cyclohexanol and Cyclohexanone" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2005.எஆசு:10.1002/14356007.a08_217
  5. Reed, Scott M.; Hutchison, James E. (2000). "Green Chemistry in the Organic Teaching Laboratory: An Environmentally Benign Synthesis of Adipic Acid". J. Chem. Educ. 77 (12): 1627–1629. doi:10.1021/ed077p1627. https://archive.org/details/sim_journal-of-chemical-education_2000-12_77_12/page/1627. 
  6. Jensen, Frederick R.; Bushweller, C. Hackett (1969). "Conformational preferences and interconversion barriers in cyclohexene and derivatives". J. Am. Chem. Soc. 91 (21): 5774–5782. doi:10.1021/ja01049a013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளையஎக்சீன்&oldid=3521329" இலிருந்து மீள்விக்கப்பட்டது