வளையஎக்சனால்

வளையஎக்சனால் (Cyclohexanol)  (CH2)5CHOH என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய கரிமச் சேர்மம் ஆகும்.  இந்த மூலக்கூறானது வளையஎக்சேனின் ஒரு ஐதரசன் அணுவை அய்தராக்சைடு தொகுதியால் இடப்பெயர்வு செய்து கிடைக்கப்பெறும் சேர்மமாகும்.[4] இந்தச் சேர்மமானது, நீர் உறிஞ்சும் திறன் கொண்ட,  கற்பூரத்தின் மணம் கொண்ட, துாய்மையான நிலையில் அறை வெப்பநிலைக்கு அருகாமையிலான வெப்பநிலையில் உருகக்கூடிய வெண்ணிறத் திண்மம் ஆகும்.  இது நைலான் தயாரிப்பில் முன்னோடி சேர்மமாக உள்ளதால், ஒவ்வொரு ஆண்டும் நூறு கோடி கிலோகிராம்கள் அளவுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது.[5]

வளையஎக்சனால்[1]
Skeletal formula of cyclohexanol
Ball-and-stick model of the cyclohexanol molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
வளையஎக்சனால்
வேறு பெயர்கள்
வளையஎக்சைல் ஆல்ககால்,
எக்சாஐதரோபீனால்,
ஐதரோபீனால்,
ஐதராக்சிவளையஎக்சேன்,
நேக்சால்
எக்சாலின்
ஐதராலின்
இனங்காட்டிகள்
108-93-0 Y
ChEBI CHEBI:18099 Y
ChEMBL ChEMBL32010 Y
ChemSpider 7678 Y
DrugBank DB03703 Y
EC number 203-630-6
InChI
  • InChI=1S/C6H12O/c7-6-4-2-1-3-5-6/h6-7H,1-5H2 Y
    Key: HPXRVTGHNJAIIH-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C6H12O/c7-6-4-2-1-3-5-6/h6-7H,1-5H2
    Key: HPXRVTGHNJAIIH-UHFFFAOYAN
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C00854 Y
பப்கெம் 7966
வே.ந.வி.ப எண் GV7875000
  • C1CCC(CC1)O
பண்புகள்
C6H12O
வாய்ப்பாட்டு எடை 100.158 கி/மோல்
தோற்றம் நிறமற்ற, பாகுத்தன்மை கொண்ட திரவம்
நீர் உறிஞ்சும் திறன் கொண்டது
மணம் கற்பூரம்-போன்ற மணம்
அடர்த்தி 0.9624 கி/மிலி, (திரவம்)
உருகுநிலை 25.93 °C (78.67 °F; 299.08 K)
கொதிநிலை 161.84 °C (323.31 °F; 434.99 K)
3.60 கி/100 மிலி (20 °செ)
4.3 கி/100 மிலி (30 °செ)
கரைதிறன் எதில் ஈதர் அசிட்டோன், குளோரோபார்ம் எத்தனால்இல் கரையும்
எத்தில் அசிடேட், லின்செட் எண்ணெய், பென்சீன் ஆகியவற்றிடன் கலந்து விடும்
ஆவியமுக்கம் 1 மிமீ பாதரசம் (20°செ)[2]
4.40 x 10−6 atm-cu m/mol
காடித்தன்மை எண் (pKa) 16
-73.40·10−6 cm3/mol
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.4641
பிசுக்குமை 41.07 mPa·s (30 °C)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் எளிதில் தீப்பற்றக்கூடியது, தோலில் எரிச்சலை உண்டாக்கும்
ஆக்சிசனேற்றிகளுடன் தீவிரமாக வினைபுரிகிறது
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் MSDS for cyclohexanol
R-சொற்றொடர்கள் R20 R22 R37 R38
S-சொற்றொடர்கள் S24 S25
தீப்பற்றும் வெப்பநிலை 67 °C (153 °F; 340 K)
Autoignition
temperature
300 °C (572 °F; 573 K)
வெடிபொருள் வரம்புகள் 2.7-12%
Lethal dose or concentration (LD, LC):
2060 மிகி/கிகி (வாய்வழி, எலி)
2200-2600 மிகி/கிகி (வாய்வழி, முயல்)[3]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 50 ppm (200 mg/m3)[2]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 50 ppm (200 mg/m3)[2]
உடனடி அபாயம்
400 ppm[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

வளையஎக்சனாலானது, வளையஎக்சேனை கோபால்ட்டை வினையூக்கியாகப் பயன்படுத்தி காற்றில் ஆக்சிசனேற்றம் செய்வதால் தயாரிக்கப்படுகிறது:

C6H12 + 1/2 O2 → C6H11OH

இந்த செயல்முறையானது, வளையஎக்சனோனையும் உடன் விளைபொருளாகத் தருகிறது. இந்தக் கலவையானது ("KA எண்ணெய்" அதாவது கீட்டோன்-ஆல்ககால் எண்ணெய் என்பதன் சுருக்கம்) அடிப்பிக் அமிலத் தயாரிப்பிற்கு நுழைநிலை மூலப்பொருளாக உள்ளது. ஆக்சிசனேற்றமானது தனிஉறுப்புக்களையும், ஐதரோபெராக்சைடின் இடைவினையையும் உள்ளடக்கியுள்ளது. C6H11O2H. மாற்றாக, வளையஎக்சனாலானது, பீனாலின் ஐதரசனேற்ற வினை மூலமாகவும் தயாரிக்கப்படுகிறது:

C6H5OH + 3 H2 → C6H11OH

இந்தச் செயல்முறையானது வளையஎக்சனோனை உருவாக்கும் விதமாக மாற்றி அமைக்கப்படலாம்.

அடிப்படை வினைகள்

தொகு

வளையஎக்சனால் ஒரு ஈரிணைய ஆல்ககாலால் எதிர்பார்க்கப்படும் வினைகளில் ஈடுபடுகின்றன. ஆக்சிசனேற்றமானது வளையஎக்சனோனைத் தருகிறது. தொழிற்துறையில், வளையஎக்சனோனானது கேப்ரோலாக்டத்தின் முன்னோடியான ஆக்சைமாக பெருமளவில் மாற்றப்படுகிறது. ஆய்வகத்தில் செய்யப்படும் சோதனை முயற்சியாக குரோமிக் அமிலத்துடனும் இந்த ஆக்சிசனேற்றமானது மேற்கொள்ளப்படலாம். எசுத்தராக்குதல் வினையானது இருவளையஎக்சைலடிப்பேட்டு மற்றும் இருவளையஎக்சைல்ப்தாலேட்டு போன்ற வணிகரீதியில் பயன்படக்கூடிய நெகிழியாக்கிகளைத் தருகிறது. அமில வினையூக்கிகள் முன்னிலையில் வெப்பப்படுத்துதல் மூலமாக வளையஎக்சனாலானது வளையஎக்சீனாக மாறுகிறது.[5]

அமைப்பு

தொகு

வளையஎக்சனாலானது குறைந்தபட்சம் இரண்டு திண்ம நிலைகளையாவது கொண்டுள்ளது. அவற்றுள் ஒன்று நெகிழிப் படிக (Plastic Crystal) நிலையாகும்.

பயன்பாடுகள்

தொகு

நைலானுடைய முன்னோடிச் சேர்மமாக இருப்பதால் பலபடித் தொழிற்துறையில் இச்சேர்மமானது ஒரு முக்கியமான நுழைநிலை மூலப்பொருளாக உள்ளது. மேலும் பல நெகிழியாக்கிகளைத் தயாரிக்கவும் இச்சேர்மம் பயன்படுகிறது. மிகச் சிறிய அளவில் இது ஒரு கரைப்பானாகப் பயன்படுகிறது.

பாதுகாப்பு

தொகு

வளையஎக்சனாலானது ஓரளவு நச்சுத்தன்மை உடையது. இதன் ஆவியின் தொடக்கநிலை வரம்பு மதிப்பானது எட்டு மணி நேரத்திற்கு 50 ப.ஒ.ப (பத்து இலட்சத்தில் ஒரு பங்கு) ஆகும்.[5] இச்சேர்மத்தின் உயிர் வாழ்தல் அல்லது உடல்நலத்திற்கு உடனடித் தீங்கேற்படுத்தும் செறிவு மதிப்பானது (Immediately Dangerous to Life or Health) IDLH]] 400 ப.ஒ.ப (பத்து இலட்சத்தில் ஒரு பங்காக உள்ளது. விலங்குகளுக்கு வாய்வழியாக கொடுக்கப்பட்டு கண்டறியப்பட்ட தீவிர நச்சுத்தன்மை ஆய்வுகளின் அடிப்படையில் மேற்கண்ட முடிவுகளானது தரப்பட்டுள்ளது.[6] இச்சேர்மத்தின் புற்றுநோய்க்காரணியாக செயல்படக்கூடிய தன்மையும் சில ஆய்வுகளில் சோதிக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு ஆய்வு மட்டும் எலிகளில் புற்றுநோய்க்காரணிக்கு துணை செய்யும் இணைக்காரணியாகக் கண்டறிந்துள்ளது.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. Merck Index, 11th Edition, 2731.
  2. 2.0 2.1 2.2 2.3 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0165". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. "Cyclohexanol". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  4. Lide, D. R., ed. (2005). CRC Handbook of Chemistry and Physics (86th ed.). Boca Raton (FL): CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0486-5.
  5. 5.0 5.1 5.2 Michael Tuttle Musser "Cyclohexanol and Cyclohexanone" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2005.
  6. CDC - NIOSH Pocket Guide to Chemical Hazards
  7. [1] பரணிடப்பட்டது 2013-01-05 at Archive.today Lucrecia Márquez-Rosado, Cristina Trejo-Solís 2, María del Pilar Cabrales-Romero, Evelia Arce-Popoca, Adolfo Sierra-Santoyo, Leticia Alemán-Lazarini, Samia Fatel-Fazenda, Claudia E. Carrasco-Legleu, Saúl Villa-Treviño, "Co-carcinogenic effect of cyclohexanol on the development of preneoplastic lesions in a rat hepatocarcinogenesis model", Molecular Carcinogenesis, Vol. 46, No. 7, Pages 524 - 533, March 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளையஎக்சனால்&oldid=3946972" இலிருந்து மீள்விக்கப்பட்டது