வாக்கரனா
வாக்கரனா திப்ளோசிடிகாமாதிரி இனம்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
வாக்கரனா

தகனுக்கர் மற்றும் பலர், 2016[1]
மாதிரி இனம்
வாக்கரனா திப்ளோசிடிகா
குந்தர், 1876
வேறு பெயர்கள் [2]

சாலிவாக்கரனா'' தகனுக்கர் மற்றும் பலர், 2016 – தேவையற்ற மறுவகைப்பாடு

வாக்கரனா (Walkerana) என்பது இராணிக்சலிடே குடும்பத்தில் உள்ள தவளைப் பேரினமாகும்.[1][2] இந்த பேரினமானது இந்தியாவின் கேரளம் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் அகணிய உயிரி.[2] இது 2016ஆம் ஆண்டு இந்திரானாவின் மூன்று சிற்றினங்களை வகைப்படுத்துவதற்காகத் தோற்றுவிக்கப்பட்டது. இது பரவலாக வரையறுக்கப்பட்ட இந்திரானாவிற்குள் ஒரு மரபணு மற்றும் உருவவியல் ரீதியாக வேறுபட்ட உயிரிக்கிளையினை உருவாக்குகிறது.[1] 2020-ல் வாக்கெரனா முடுகா விவரிக்கப்படும் வரை, பாலகாட்டுக் கணவாயிற்குத் தெற்கே மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்குப் பகுதியில் மட்டுமே இந்த பேரினம் அறியப்பட்டது.[3]

சொற்பிறப்பியல்

தொகு

இப்பகுதியில் செயல்படும் விலங்கு வெளிக்கள அமைப்பின் பாதுகாவலரான சாலி வாக்கர் நினைவாக இந்த பேரினம் பெயரிடப்பட்டது.[1] வாக்கரனா ஓட்டே மற்றும் பெரெஸ்-கெலாபர்ட், 2009 என்ற கிரிக்கெட் பூச்சி பேரினத்துடனான ஒற்றுமையின் காரணமாக இந்த இனமானது சாலிவால்கெரானா என மறுபெயரிடப்பட்டது.[2]

விளக்கம்

தொகு

வாக்கரனா இராணிக்சலிடே குடும்பத்தில் மரபணு ரீதியாக வெகு தொலைவில் உள்ளது. முதல் மற்றும் இரண்டாவது கால்விரல்களில் வலைப் பிணைப்பு இல்லாத விரலெலும்பு (இந்திரானாவில் எதுவுமில்லை) மற்றும் நான்காவது கால்விரலில் மூன்று விரல் எலும்புகள் (இந்திரனாவில் 2-2½) கொண்ட மிகக் குறைந்த வலையமைப்பைக் கொண்டிருப்பதில் இது இதன் சகோதர குழுவிலிருந்து வேறுபடுகிறது. மேலும், முதல் விரல் வாக்கரனாவில் இரண்டாவது விரலை விடச் சிறியதாக உள்ளது. அதே சமயம் இந்திரானாவில் (இ. லெத்தீ தவிர) சம நீளம் கொண்டவை அல்லது முதல் விரல் இரண்டாவதை விட நீளமாக இருக்கும்.[1]

சிற்றினங்கள்

தொகு

நான்கு அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன:[2][3]

  • வாக்கரனா திப்ளோசுடிக்டா (குந்தர், 1876)
  • வாக்கரனா லெப்டோடாக்டைலா (பவுலேஞ்சர், 1882)
  • வாக்கரனா முதுகா தினேசு, விஜயகுமார், ரமேஷ், ஜெயராஜன், சந்திரமௌலி மற்றும் சங்கர், 2020
  • வாக்கரனா பிரினோடெர்மா (பவுலேஞ்சர், 1882)

தினேஷ் மற்றும் சகாக்கள் பாலக்காடு கனவாய்ப் பகுதியின் வடக்கிலிருந்து சேகரித்த மாதிரி ஒன்றின் அடிப்படையில் கூடுதலாகச் சிற்றினம் ஒன்றை அடையாளம் கண்டுள்ளனர். ஆனால் சேகரிக்கப்பட்ட மாதிரியின் காப்புத்தன்மை காரணமாக விவரிக்க இயலவில்லை.[3]

 
வாக்கரனா பிரினோடெர்மா

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Dahanukar, Neelesh; Modak, Nikhil; Krutha, Keerthi; Nameer, P. O.; Padhye, Anand D.; Molur, Sanjay (2016). "Leaping frogs (Anura: Ranixalidae) of the Western Ghats of India: An integrated taxonomic review". Journal of Threatened Taxa 8 (10): 9221–9288. doi:10.11609/jott.2532.8.10.9221-9288. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Frost, Darrel R. (2020). "Walkerana Dahanukar, Modak, Krutha, Nameer, Padhye, and Molur, 2016". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 12 March 2020.
  3. 3.0 3.1 3.2 Dinesh, K.P.; Vijayakumar, S.P.; Ramesh, Vijay; Jayarajan, Aditi; Chandramouli, S.R.; Shanker, Kartik (2020). "A deeply divergent lineage of Walkerana (Anura: Ranixalidae) from the Western Ghats of Peninsular India". Zootaxa 4729 (2): 266–276. doi:10.11646/zootaxa.4729.2.7. பப்மெட்:32229864. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாக்கரனா&oldid=3837268" இலிருந்து மீள்விக்கப்பட்டது