வாச்சாத்தி
வாச்சாத்தி (Vachathi) என்பது இந்தியா, தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 636 904.[1] இது பே. தாதம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.
வாச்சாத்தி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636 904 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவிலும் தொலைவிலும் உள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 400 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 11°57'55.5"N 78°28'14.2"E[3] ஆகும்.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 250 குடும்பங்களும் 1032 [4] மக்களும் வசிக்கின்றனர். இதில் 517 ஆண்களும் 515 பெண்களும் அடங்குவர்.
வாச்சாத்தி வன்முறை
தொகுஇந்த சிற்றூரில் பழங்குடியினர் பெருமளவில் வாழ்கின்றனர். 1992 சூன் 20-22 தேதிகளில் வாச்சாத்தி கிராம மக்கள் மீது தமிழ்நாட்டுக் காவல்துறையினர், தமிழ்நாடு வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் நடத்திய வன்முறை/வன்கொடுமைத் தாக்குதல்களே நிகழ்வே வாச்சாத்தி வன்முறை எனப்படுகின்றது. காவல் துறையினர், வனத்துறையினர், வருவாய்த்துறையினரின் இந்த வன்முறைச் செயலில் 34 பேர் உயிரிழந்தார்; 18 பெண்கள் வன்புணரப்பட்டனர். 28 சிறார்கள் பாதிக்கப்பட்டனர். இந்த நிகழ்வை அடிப்படையாக கொண்டு வாச்சாத்தி என்ற திரைப்படம் 2012 இல் வெளியானது.
மேற்கோள்
தொகு- ↑ "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
- ↑ "Vachathi Village in Pappireddipatti (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-19.
{{cite web}}
: Text "villageinfo.in" ignored (help) - ↑ https://www.google.co.in/maps/place/11%C2%B057'55.5%22N+78%C2%B028'14.2%22E/@11.9654362,78.4684263,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d11.965431!4d78.470615
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html