வாணி ஹரிகிருஷ்ணா
வாணி ஹரிகிருஷ்ணா (கன்னடம்: ವಾಣಿ ಹರಿಕೃಷ್ಣ) இந்திய திரைப்படப் பின்னணிப் பாடகி மற்றும் இசை இயக்குநர் ஆவார்.துவக்கத்தில் கன்னடத் திரைப்படங்களில் பணியாற்றிய இவர் பின்னர் தென் இந்தியப் படங்களில் பணிபுரியத் தொடங்கியார். திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவதற்கு முன் பல பக்தி பாடல்களை தாமே எழுதி, இசையமைத்து பாடியுள்ளார். இந்தி லின்ன பிரீத்தியா என்ற கன்னட மொழி திரைப்படத்தில் மதுவன காிதாரே என்ற பாடலுக்கு கர்நாடக மாநில அரசு விருதினைப் பெற்றுள்ளார்.[1] தற்போது ஜீ தொலைக்காட்சியின் ச-ரி-க-ம-ப இசைப் போட்டி நிகழ்ச்சியின் நடுவராக குழுவில் ஒருவராக செயல்பட்டு வருகிறார்.
வானி ஹரிகிருஷ்ணா | |
---|---|
பிறப்பு | பெங்களூரு, இந்தியா |
பணி | பிண்னணிப் பாடகி, இசையமைப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2008&ndash தற்போது |
குடும்பம்
தொகுவாணி பாரம்பரிய இசைக்கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்தார். பானுமதி இராமசாமி என்ற தாயாரும் வீனா நாகராஜ் என்ற சகோதரியும் இவருன்னு உள்ளனர். இவரது தாத்தா ஜி.கே.வெங்கடேஷ் கன்னட சினிமாவின் இசை அமைப்பாளராக இருந்துள்ளார். 1993-94 ஆண்டுகளில் ஒரே இசைக்குழுவில் இணைந்து பணியாற்றிய கீபோர்டு கலைஞரும், இசையமைப்பாளரும், திரைப்படப் பின்னணிப் பாடகருமான வி.ஹரிகிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார். கணவர் ஹரிகிருஷ்னா 2013 ஆம் ஆண்டு “டி-பீட்ஸ்” என்ற இசை நிறுவனத்தை தொடங்கிார்.[2] இவருக்கு ஆதித்யா என்ற மகன் உள்ளார்.[3] ஆதித்யா பியானோ இசையில் அதிக ஈடுபாடு உடையவராவார்.[4][5]
திரைப்பட விவரங்கள்
தொகுவானி ஹரிகிருஷ்ணா 25 க்கும் மேற்பட்ட கன்னடத் திரப்படங்களில் பின்னணி பாடியுள்ளார். 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ராணா, 2008 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தி நின்ன பிரீத்தியா 2011 ல் வெளிவந்த சாரதி ஆகிய திரைப்படங்களில் இவா் பாடிய பாடல்கள் இவரைப் பிரபலம் அயைச் செய்தன.[6]
ஒரு இசையமைப்பாளராக
தொகுஆண்டு | படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
2013 | லூசேகலு | கன்னடம் | அறிமுக இசையமைப்பாளர் |
2013 | மீனாட்சி | கன்னடம் | |
2015 | ரிங் ரோடு[7] | கன்னடம் |
ஒரு பாடகராக
தொகுஆண்டு | படம் | பாடல் | இசை |
---|---|---|---|
2008 | இந்தி நின்ன பிரீத்தியா | மதுவன கரிதரே | சாது கோகிலா |
2008 | மேகவே மேகவே | ஹே நீலி கானா | வி. ஹரிகிருஷ்ணா |
2008 | பயனா | ஜாரே | வி. ஹரிகிருஷ்ணா |
2009 | மலியாளி ஜோதியலி | மலியாளி ஜோதியலி | வி. ஹரிகிருஷ்ணா |
2009 | செலுவியே நின்ன நோடாலு | ஒலவே நின்னே | வி. ஹரிகிருஷ்ணா |
2011 | பரமாத்மா | ஹீசரு பூர்த்தி | வி. ஹரிகிருஷ்ணா |
2011 | சாரதி | ஙாஹோ ஹீகோ | வி. ஹரிகிருஷ்ணா |
2011 | போலீஸ் ஸ்டோரி 3 | பன்னா பன்னா | சாகர் எஸ் |
2011 | துஷ்டா | ஜின்கே ஓ ஜின்கே | S. நாராயண் |
2012 | அத்துரி | முசஞ்சே வீழிலி | வி. ஹரிகிருஷ்ணா |
2012 | சிகாரி | கன்னடியே | வி. ஹரிகிருஷ்ணா |
2012 | ஸ்நேகித்தாரு | படுகோடு ஹகே | வி. ஹரிகிருஷ்ணா |
2013 | லூசேகலு | பேலே ஹாரி | வாணி ஹரிகிருஷ்ணா |
2013 | கட்டிபுடி | பீரே யாரே | வி. ஹரிகிருஷ்ணா |
2014 | உள்ளிடவாறு கண்டந்தே | கண்ணா மூச்சே | அஜ்னீஷ் லோகநாத் |
2014 | டவ் | ஹீகூ இரபாகுதே | அர்ஜுன் ஜன்யா |
2017 | ஹொம்பன்னா | அம்பிகாநிரதே | வினு மனசு |
விருதுகள்
தொகுவெற்றி - சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான கர்நாடகா மாநில திரைப்பட விருது-பாடல்: “மதுவன கரிதரே” படத்தில் இருந்து இந்தி நின்ன பிரீத்தியே எழுதியவர் ஜெயந்த் கைக்கினி மற்றும் இசையமைத்தவர் சாது கோகிலா.
வெற்றி - சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான சுவர்னா திரைப்பட விருது 2011. சாரதி என்ற திரைப்படத்திலிருந்து ஹாகோ ஹீஹோ என்ற பாடல். நாகேந்திர பிரசாத் எழுதிய இந்தப் பாடலுக்கு வி. ஹரிகிருஷ்ணா இசையமைத்துள்ளார்
வெற்றி - சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான சுவர்னா திரைப்பட விருது 2011. ஆதுரி என்ற திரைப்படத்திலிருந்து ”முசஞ்சே வீலிலி” என்ற அர்ஜீன் எழுதிய பாடலுக்கு வி. ஹரிகிருஷ்ணா இசையமைத்துள்ளார்.
வெற்றி - மிர்ச்சி இசை விருது -தெற்கு 'சிறந்த பெண் பின்னணிப் பாடகி 2012' ஆதுரி என்ற திரைப்படத்திலிருந்து ”முசஞ்சே வீலிலி” என்ற அர்ஜீன் எழுதிய பாடலுக்கு வி. ஹரிகிருஷ்ணா இசையமைத்துள்ளார்.
வெற்றி - சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தென் இந்திய சர்வதேச திரைப்பட விருது ஆதுரி என்ற திரைப்படத்திலிருந்து ”முசஞ்சே வீலிலி” என்ற அர்ஜீன் எழுதிய பாடலுக்கு வி. ஹரிகிருஷ்ணா இசையமைத்துள்ளார்.
பரிந்துரைப்பு- சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டாா். ஆதுரி என்ற திரைப்படத்திலிருந்து ”முசஞ்சே வீலிலி” என்ற அர்ஜீன் எழுதிய பாடலுக்கு வி. ஹரிகிருஷ்ணா இசையமைத்துள்ளார்.[8]
வெற்றி - சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தென் இந்திய சர்வதேச திரைப்பட விருது பாடல்: "பீரி யாரோ படம்: கட்டிப்பிடி
மேற்கோள்கள்
தொகு- ↑ Vaani turns music director பரணிடப்பட்டது 2012-08-28 at the வந்தவழி இயந்திரம் IndiaGlitz, 24 August 2012. Retrieved 25 May 2013.
- ↑ "'Bul Bul' Audio from D Beats". Indiaglitz. 18 March 2013. Archived from the original on 22 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 6 மார்ச் 2020.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ https://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/news/Vani-Harikrishna-composes-for-Ring-Road-Shubha/articleshow/28437379.cms
- ↑ Vani Harikrishna turns music composer பரணிடப்பட்டது 2013-06-29 at Archive.today The Times of India, 24 August 2012. Retrieved 25 May 2013. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ V Harikrishna's wife turns composer 24 August 2012. Retrieved 25 May 2013.
- ↑ https://chiloka.com/celebrity/vani-harikrishna
- ↑ ""Ring Road Shubha" based on real incident". Cineloka. Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2013-08-19.
- ↑ "60th Idea Filmfare Awards 2013 (South) Nominations". Filmfare. 4 July 2013. Archived from the original on 2016-04-06.