வாதாதாம் புதைபடிவ பூங்கா

வாதாதாம் புதைபடிவ பூங்கா (Wadadam Fossil Park), மகாராட்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள சிரோஞ்சா வட்டத்தில் உள்ள வாதாதாம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இது சுமார் சிரோஞ்சாவிலிருந்து 19 கி.மீ. தொலைவிலும், மாவட்டத் தலைமையகமான கட்சிரோலிக்கு தெற்கே 189 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இங்குப் பழங்கால ஆராய்ச்சியாளர்கள் குழு புதைபடிவங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இவை டைனோசர் படிமங்கள் என்றும் மில்லியன் கணக்கான ஆண்டுகள் பழமையானவை என்றும் நம்பப்படுகிறது. இந்தியாவில், அதிக எண்ணிக்கையிலான புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நாட்டின் ஐந்து இடங்களில் சிரோஞ்சாவும் ஒன்றாகும். கொத்தப்பள்ளி-போச்சம்பள்ளி கிராமத்தில் 1959ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட டைனோசரின் முழு எலும்புக்கூடு, கொல்கத்தாவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.[1]

புதைபடிவங்கள் தொகு

வாதாதாம் புதைபடிவ பூங்கா அரை சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்தியாவின் முதல் டைனோசர் தளமாக அமைந்துள்ளது. இங்குத் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் படிமங்கள் அப்படியே காணப்படுகின்றன. இந்தியத் துணைக்கண்டத்தின் இந்த பகுதிகளில் சௌரோபாட்கள் இருந்த காலத்தில் தாவரங்களின் புதைபடிவங்கள் இருந்தன. சுராசிக் காலத்தின் நடுப்பகுதியில் குளோசோப்டெரிசு மற்றும் டாடாக்சிலோன் ஊசியிலை மரங்களுடன் இணைந்து இருந்த ராட்சத சௌரோபாட்களுடன் இந்த பகுதி காடுகளால் நிறைந்திருந்தது.[2]

வாதாதாம் புதைபடிவ பூங்காவில் கற்கால (பேலியோலிதிக்) கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கல் கருவிகள் சுமார் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டன. இந்த இடம் பாரபசரஸ், கோட்டாசரசு, யமன்பல்லியென்சிசு மற்றும் சில மீன்கள் மற்றும் டைனோசர்களின் புதைபடிவங்களுக்கும் அறியப்படுகிறது. சிரோஞ்சாவில் மொத்தம் 24 புதைபடிவ தளங்கள் உள்ளன.[3]

வாதாதாம் பகுதி புதைபடிவ பூங்காவாக மாறியுள்ளதால், இந்த பகுதியில் காணப்படும் விலங்குகள் மற்றும் தாவரங்களின் பெரிய கேலிச்சித்திரங்களைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வைத்துள்ளனர்.[4] இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறை மாநில தொல்லியல் இயக்குநரகம் மற்றும் ஒத்துழைப்புக்கான அருங்காட்சியகங்கள் இணைந்து விலங்குகளின் முப்பரிமாண பிரதிகளை நிறுவ முன்வந்துள்ளன.

அணுகல் தொகு

இது தெலங்காணாவின் நிஜாமாபாத் மற்றும் சத்தீசுகரில் உள்ள ஜெகதல்பூரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 16-ல் அமைந்துள்ளது. தெலங்காணாவில் உள்ள மஞ்செரியல் மற்றும் மகாராட்டிராவில் உள்ள பல்லார்ஷா ஆகியவை அருகிலுள்ள தொடருந்து நிலையங்கள் ஆகும்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "Wadadham Fossils Park | District Gadchiroli, Government of Maharashtra | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-24.
  2. "First dino site in India with flora, fauna intact". The Indian Express (in ஆங்கிலம்). 2015-06-14. பார்க்கப்பட்ட நாள் 2022-01-24.
  3. Vijay Pinjarkar (Apr 9, 2016). "Paleolithic tools discovered in Sironcha's fossil park | Nagpur News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-24.
  4. Kunal V. Shinde (April 18, 2015). "People to get feel of Lower Jurassic period as Maharashtra Fossil Park to bring alive dinosaur era". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-24.
  5. "Maharashtra to soon have fossil park with Jurassic-era remains". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-24.