வாதிராஜ தீர்த்தர்
வாதிராஜ தீர்த்தர் (Vadiraja Tirtha ) (அண். 1480 - அண். 1600)[1] இவர் ஓர் துவைதத் தத்துவஞானியும், கவிஞரும் ஆன்மீகவாதியுமாவார். இவரது காலத்தின் ஒரு பன்மொழிப் புலமை கொண்டவரான் இவர், மத்துவ இறையியல் மற்றும் தத்துவங்கள் குறித்து பல படைப்புகளை எழுதினார். கூடுதலாக, இவர் ஏராளமான கவிதைகளையும் இயற்றினார். சோதே மடத்தின் தலைவராக, உடுப்பியில் உள்ள கோயில் வளாகத்தை புதுப்பித்து, பரியாய வழிபாட்டு முறையை நிறுவினார்.[2] மத்துவரின் படைப்புகளில் உத்வேகம் கொண்டு கன்னடத்திற்கு மொழிபெயர்த்ததன் மூலம் அக்கால கன்னட இலக்கியங்களை வளப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு[3]. மேலும், ஹரிதாச பக்தி இயக்கத்திற்கும் பங்களிப்பு செய்தார். இவரது படைப்புகள் அவற்றின் கவிதை செழிப்பு, கூர்மையான அறிவு மற்றும் நகைச்சுவை ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகின்றன.[1][note 1]
வாதிராஜ தீர்த்தர் | |
---|---|
பிறப்பு | 1480 அவினகரே, வட்டம் உடுப்பி மாவட்டம், கருநாடகம் |
இறப்பு | 1600 சோதே, வடகன்னட மாவட்டம், கருநாடகம் |
இயற்பெயர் | பூவராகர் |
சமயம் | இந்து சமயம் |
தத்துவம் | துவைதம் |
குரு | வாகீச தீர்த்தர் |
வாழ்க்கை
தொகுஉடுப்பி மாவட்டம், குந்தாபுரா பகுதியில் உள்ள அவினகரே என்ற கிராமத்தில் பூவராகனாக இவர் பிறந்தார். இவர் தனது 8 வயதில் துறவியாக நியமிக்கப்பட்டு, வித்யநிதி தீர்த்தரின் பராமரிப்பில் வைக்கப்பட்டார். பின்னர் வாகீச தீர்த்தரின் மேற்பார்வையில் தனது கல்வியை கற்றார்.[4]
1512 ஆம் ஆண்டில், இவர் இருபதாண்டுகள் நீடித்த இந்தியாவில் யாத்திரைக்கான தனது மகத்தான சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். அதன் விவரங்களை இவர் தனது பயணக் குறிப்பை தீர்த்த பிரபந்தம் என்ற தலைப்பில் பதிவு செய்தார். இறந்தவர்களின் உயிர்த்தெழுதல் மற்றும் பேய்களின் பேயோட்டுதல் போன்ற பல பயணங்களில் பல அற்புதங்கள் கூறப்பட்டுள்ளன.[5]
இவர் உடுப்பிக் கோயிலை மறுசீரமைத்து, கோயிலைச் சுற்றி எட்டு மடங்களை நிறுவினார். இவர் ஆரம்பித்த கோயில் வழிபாட்டு சீர்திருத்தங்கள் இன்றுவரை நீடிக்கின்றன. 120 வருட வாழ்க்கை பாரம்பரியமாக அவருக்கு கூறப்படுகிறது,[3] இந்த கூற்றின் உண்மைத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டாலும், வராற்றாசிரியர் சர்மா குறிப்பிடுகையில், "இவர் (வாதிராஜர்) சோதேவில் உள்ள மடத்தின் தலைவராக நீண்ட காலம் வாழ்ந்தார் என்பதில் சந்தேகம் இல்லை, இவர் தன்னை பல ஆண்டுகளாக நிறுவிக் கொண்டார்". [6] இவரது பிருந்தாவனம் சோதேயில் இருக்கிறது.
மரபு
தொகுஇவர் தாச சாகித்யத்திற்கு பங்களித்தார். அயவதானா என்ற பெயரில் பல கவிதைகளை எழுதினார். யுக்திமாலிகா எனற படைப்பு இவரது மகத்தான பணியாக பரவலாகக் கருதப்படுகிறது. சர்மா குறிப்பிடுகிறார், "இந்தப்பணியானது புத்துணர்ச்சியுடனும் அணுகுமுறை மற்றும் யோசனைகளின் அசல் தன்மையுடனும் உள்ளது"..[7] இவர் பல கவிதைகளையும் இயற்றினார். அவற்றில் குறிப்பிடத்தக்கவை இருக்மிணி விஜயம் என்ற தலைப்பில் 90 கான்டோக்களின் காவியக் கவிதை.
குறிப்பிடத்தக்க படைப்புகள்
தொகுஒரு சிறந்த எழுத்தாளரான இவர், அறுபதுக்கும் மேற்பட்ட படைப்புகளுக்கு பெருமை சேர்த்துள்ளார். [8] குறுகிய பாடல்கள் மற்றும் காவியக் கவிதைகள் முதல் துவைதத் தத்துவங்களை சிக்கல்களைப் பற்றிய சுருக்கமான அறிவார்ந்த படைப்புகள் வரை இவரது சாயல் வேறுபட்டது. இவரது பல சுயாதீன படைப்புகள் அத்வைதத்தில் மட்டுமல்லாமல், பௌத்தம் மற்றும் குறிப்பாக சமண மதம் போன்ற 16 ஆம் நூற்றாண்டில் தென் கன்னட பிராந்தியத்தில் செழித்தோங்கிய மரபுவழியல்லாத பள்ளிகளாகும்.[9]
குறிப்புகள்
தொகு- ↑ மத்துவ சமூகம் இவரை அடுத்த கல்பத்தில் வாயுவின் நிலையை ஏற்றுக்கொள்ள வேண்டிய கடவுளான லாதவ்யாவின் அவதாரம் என்று நம்புகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Sharma 2000.
- ↑ Rao 2002.
- ↑ 3.0 3.1 Dalal 2010.
- ↑ Sharma 2000, ப. 191-192.
- ↑ Rao 2002, ப. 72-76.
- ↑ Sharma 2000, ப. 192.
- ↑ Sharma 2000, ப. 201.
- ↑ Sharma 2000, ப. 196.
- ↑ Sharma 2000, ப. 194.
உசாத்துணைகள்
தொகு- Sharma, B.N.K (2000) [1961]. History of Dvaita school of Vedanta and its Literature. Vol. 2 (3rd ed.). Bombay: Motilal Banarasidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-1575-0.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Dalal, Roshen (2010). "Vadirajatirtha". Hinduism: An Alphabetical Guide. Penguin Books India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0143414216.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Rao, Vasudeva (2002). Living Traditions in Contemporary Contexts: The Madhva Matha of Udupi. Orient Blackswan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788125022978.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)
வெளி இணைப்புகள்
தொகு- Vadiraja Tirtha பரணிடப்பட்டது 2020-06-27 at the வந்தவழி இயந்திரம்