வானவில் தேரை
போர்ணியோ வானவில் தேரை Ansonia latidisca | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | அன்சோனியா
|
இனம்: | A. latidisca
|
இருசொற் பெயரீடு | |
Ansonia latidisca இங்கர், 1966 |
அன்சோனியா லாட்டிடிஸ்க்கா (Ansonia latidisca, பொதுவாக Sambas stream toad அல்லது Bornean rainbow toad, போர்ணிய வானவில் தேரை), என்பது ஒரு வகைத் தேரை இனமாகும்[1]. இவ்வினம் இந்தோனேசியா, மற்றும் மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மிதவெப்ப மண்டல அல்லது வெப்பமண்டலத் தாழ்நிலக் காடுகள் அல்லது ஆறுகள் ஆகியன இவற்றின் இயற்கையான வாழ்விடங்கள் ஆகும். இவை மிக அரிதான அல்லது முற்றாக அழிந்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அன்சோனியா லாட்டிடிஸ்க்கா இனம் "உலகில் தேடப்படும் முதல் 10 தவளை" இனங்களில் ஒன்றாக 2010 ஆம் ஆண்டில் வகைப்படுத்தப்பட்டது. 2011 சூலையில் மலேசியாவின் சரவாக் மாநிலத்தின் மலேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் இந்திராநீல் தாஸ் என்பவரின் தலைமையில் ஆய்வாளர்கள் குழு ஒன்று இவ்வகைத் தேரைகளைக் கண்டுபிடித்தனர். மேற்கு சரவாக்கின் குனுங் பென்றிசன் மலைத்தொடரில் உள்ள மிக உயரமான மரக் கொப்புகளில் இவ்வகையான மூன்று தேரையினக்களைப் படம் பிடித்துள்ளனர்[2]. இக்கண்டுபிடிப்புகளுக்கு முன்னர் 1920களின் ஆய்வாளர்களின் தகவல்களின் அடிப்படையில் இவ்வகைத் தேரைகளின் மாதிரிப்படங்களே வரையப்பட்டுள்ளன[3].
மேற்கோள்கள்
தொகு- ↑ ""Lost" Amphibian Stages Amazing Reappearing Act in Borneo after Eluding Scientists for 87 years". Conservation International. பார்க்கப்பட்ட நாள் 14 July 2011.
- ↑ "BBC Nature - Lost rainbow toad is rediscovered". Bbc.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2011-07-14.
- ↑ "Rainbow toad: Found after 87 years, first photo ever". csmonitor.com. பார்க்கப்பட்ட நாள் 2011-07-15.
வெளி இணைப்புகள்
தொகு- Inger, R., Das, I., Stuebing, R., Lakim, M. & Yambun, P. 2004. Ansonia latidisca. 2006 IUCN Red List of Threatened Species. Downloaded on 21 July 2007.