வானவில் மீன்
வானவில் மீன் | |
---|---|
போசீமான் வானவில் மீன் (ஆண்), மெலனோடேனியா போசீமணி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | ஏதெரினிபார்மிசு
|
குடும்பம்: | |
துணைக்குடும்பம் | |
உரையினை காண்க |
வானவில் மீன் (Rainbow-fish) அல்லது மெலனோடேனிடே என்பது சிறிய, வண்ணமயமான நன்னீர் மீன்களின் குடும்பமாகும். இது வடக்கு மற்றும் கிழக்கு ஆத்திரேலியா, நியூ கினி (இந்தோனேசியாவில் உள்ள செண்டரவாசி விரி குடா மற்றும் ராஜா ஆம்பட் தீவுகள் உட்பட), சுலாவெசி மற்றும் மடகாசுகரில் காணப்படுகிறது.
மிக அதிக எண்ணிக்கையிலான வானவில் மீன் பேரினமானது, மெலனோடேனியா ஆகும். இதன் பெயரானது பண்டைய கிரேக்கச் சொல்லான மெலனோ (கருப்பு) மற்றும் டேனியா (பட்டை) ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டது. மொழிபெயர்ப்பில், இது "கருப்பு-பட்டை" என்று பொருள்படும், மேலும் இது மெலனோடேனியா பேரினத்தில் உள்ள மீன்களின் உடல்களின் பக்கவாட்டு கருப்பு பட்டைகளைக் குறிக்கிறது.
சிறப்பியல்புகள்
தொகுமெலனோடேனிடே இவற்றின் தூர முன் மேல்தாடை பெரிய பற்கள் மூலம் வகைப்படுத்தப்படுகிறது. இரண்டு அழுத்தப்பட்ட முதுகுத் துடுப்புகளுடன் ஆனால் இவற்றுக்கிடையே ஒரு சிறிய இடைவெளியுடன் பிரிக்கப்பட்டிருக்கும் உடலைக் கொண்டுள்ளன. முதல் முதுகுத் துடுப்பில் 3-7 முதுகெலும்புகள் உள்ளன. இரண்டாவது முதுகுத் துடுப்பில் 6-22 கதிர்கள் கொண்டுள்ளன. சில சிற்றினங்களில் முதுகெலும்பு முதல் கதிர் சில வகைகளில் ஒரு தடிமனான முதுகெலும்பாக இருக்கும். குதத் துடுப்பில் 10-30 கதிர்கள் உள்ளன. . பக்கவாட்டு கோடு பலவீனமாகவோ அல்லது இல்லாதது காணப்படும். இவை ஒப்பீட்டளவில் பெரிய செதில்கள் மற்றும் பக்கவாட்டுத் தொடரில் 28-60 எண்ணிக்கையில் காணப்படும். இடுப்பு துடுப்புகள் மீனின் அடிவயிற்றில் ஒரு சவ்வு மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இது உட்புறக் கதிரின் நீளத்தில் செல்கிறது. இந்த குடும்பத்தில் உள்ள பெரும்பாலான சிற்றினங்கள் வெளிப்படையான பாலியல் ஈருருமையுடன் காணப்படும். ஆண் மீன்கள் பொதுவாக மிகவும் வண்ணமயமாகவும் நீளமான நடுத்தர துடுப்புக் கதிருடன் காணப்படும்.[1]
வானவில் மீன் வகைகளில் பெரும்பாலானவை 12 cm (4.7 அங்)க்கும் குறைவானவை நீளமுடையன. சில இனங்கள் 6 cm (2.4 அங்) க்கும் குறைவாக நீளத்துடன் காணப்படும். ஆனால் மெலனோடேனியா வான்ஹூர்னி, 20 cm (7.9 அங்) வரை நீளத்தை எட்டும். இவை ஆறு, ஏரி மற்றும் சதுப்புநிலங்கள் உட்படப் பலவிதமான நன்னீர் வாழ்விடங்களில் வாழ்கின்றன. இவை ஆண்டு முழுவதும் முட்டையிட்டாலும், குறிப்பாக மழைக்காலத்தின் தொடக்கத்தில் அதிக எண்ணிக்கையிலான முட்டைகளை இடுகின்றன. முட்டைகள் நீர் வாழ் தாவரங்களுடன் இணைக்கப்பட்டு, ஏழு முதல் 18 நாட்களுக்குப் பிறகு பொரிக்கின்றன. வானவில் மீன் பொதுவாக அனைத்துண்ணியாகும். சிறிய ஓட்டுமீன்கள், பூச்சி இளம் உயிரிகள் மற்றும் பாசிகளை உண்ணும்.[2]
மெலனோடேனியா, சூடோமுகில் மற்றும் பல வகை வண்ணமீன்கள், மீன் வணிகத்தில் வழக்கமாகக் காணப்படும் சிற்றினங்களாகும். இவை அறிமுகப்படுத்தப்பட்ட கிழக்கு கொசு மீன்கள் (காம்புசியா ஹோல்ப்ரூக்கி), திலாப்பியா, சிச்லிட்கள் மற்றும் மாசுபாட்டால் சில வானவில் மீன்களின் எண்ணிக்கை மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
வகைப்பாடு
தொகுமெலனோடேனிடே பல துணைக் குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தக் குடும்பங்கள் சில வகைப்பாட்டியலரால் குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றன. ஆனால் உலகில் உள்ள மீன்களின் 5வது பதிப்பு, இவை ஒரு ஒற்றைக் குடும்பத்தின் துணைக் குடும்பங்களாக வகைப்படுத்துகிறது. எனவே இவை பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன:[1]
- துணைக்குடும்பம் பெடோட்டினே ஜோர்டான் & ஹப்ஸ், 1919 மடகாஸ்கர் ரெயின்போஃபிஷ்ஸ்
- பேரினம் பெடோடியா ரீகன், 1903
- பேரினம் ஜெனஸ் ரியோகிள்ஸ் ஜோர்டான் & ஹப்ஸ், 1919
- துணைக்குடும்பம் மெலனோடேனினே கில், 1894 வானவில் மீன்கள்
- பேரினம் சிலாதெரினா ரீகன், 1914
- பேரினம் குளோசோலெபிசு வெபர், 1907
- பேரினம் மெலனோடேனியா கில், 1862
- பேரினம் கெய்ர்ன்சிக்திசு ஜிஆர் ஆலன், 1980
- பேரினம் ராடினோசென்ட்ரசு ரீகன், 1914
- பேரினம் இரியதெரினா மெய்ன்கென், 1974
- பேரினம் பெலங்கியா ஜிஆர் ஆலன், 1998
- துணைக்குடும்பம் சூடோமுகிலினே க்னர் , 1867 நீலக் கண்கள்
- பேரினம் கியுங்கா ஜிஆர் ஆலன், 1983
- பேரினம் சூடோமுகில் க்னர், 1866
- பேரினம் இசுகாடுரிஜினிச்திசு இவன்ட்சாஃப், அன்மேக், சயீத் & க்ரோலி, 1991
- துணைக்குடும்பம் டெல்மாதெரினினே மன்ரோ, 1958 செலிப்சு வானவில் மீன்கள்
- பேரினம் கலிப்டதெரினா சயீத் & இவன்ட்சாப், 1991
- பேரினம் மரோசதெரினா ஆர்ன், இவன்ட்சாஃப் & கோட்டேலட், 1998
- பேரினம் பரதேரினா கோட்டேலட், 1990
- பேரினம் தெல்மாதெரினா பவுலங்கர், 1897
- தோமிநன்கா கோட்டேலட், 1990
மீன்காட்சித் தொட்டியில் நடத்தை
தொகுவானவில் மீன் பொதுவாக டெட்ராசு, கப்பி மீன்கள் மற்றும் பிற வானவில் மீன்கள் போன்ற வெப்பமண்டல சமூக மீன்களுடன் சிறப்பாகச் செயல்படுகிறது. இருப்பினும், போதுமான பெண் மீன்கள் இல்லாவிட்டால், இனப்பெருக்க காலத்தில் ஆண் மீன்கள் தங்களுடன் சில நேரங்களில் சண்டையிடலாம். வானவில் மீன்கள் பொதுவாக மிதக்கும் செதில்களை உண்ணும். ஏனெனில் காடுகளில் இவை பெரும்பாலும் மேற்பரப்பில் மிதக்கும் பூச்சிகளைச் சாப்பிடும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 J. S. Nelson; T. C. Grande; M. V. H. Wilson (2016). Fishes of the World (5th ed.). Wiley. pp. 358–363. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-118-34233-6.
- ↑ Allen, Gerald R. (1998). Paxton, J. R.; Eschmeyer, W.N. (eds.). Encyclopedia of Fishes. San Diego: Academic Press. pp. 155–156. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-547665-5.
வெளி இணைப்புகள்
தொகு- ANGFA – Australia New Guinea Fishes Association, an international organization responsible for the quarterly publication of the color journal Fishes of Sahul and a quarterly newsletter devoted to the keeping and discussion of native fishes in Australia and New Guinea (the geographical region known as Sahul)
- Home of the Rainbowfish பரணிடப்பட்டது 2022-03-13 at the வந்தவழி இயந்திரம் – Adrian Tappin's extensive information pages which promote the aquarium keeping, study and conservation of the rainbowfish species of Australia and New Guinea, and provide free and valuable information to the general public
- Rainbowfish Species Easy to use information on keeping rainbowfish in the aquarium
- Rainbowfish discussion forum
- Rainbowfish discussion forum (mostly Europeans & Australians)