வாமுட்டான்

மீன் இனம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Trachinotus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

வாமுட்டான் ( Trachinotus falcatus ) என்பது பாரை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மீன் இனம் ஆகும். இது மேற்கு அட்லாண்டிக் பெருங்கடலின் மீன் பிடி விளையாட்டு மீன் ஆகும். இதில் வளர்ந்த மீன்கள் நண்டு, இறால், சிறிய மீன்களை உண்கின்றன.

வாமுட்டான்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Trachinotus
இனம்:
இருசொற் பெயரீடு
Trachinotus falcatus
(லின்னேயஸ், 1758)
வேறு பெயர்கள் [2]

Labrus falcatus Linnaeus, 1758

வகைபிரித்தல் தொகு

வாமுட்டானை முதன்முதலில் "வகைபிரித்தல் தந்தை"யான, கரோலஸ் லின்னேயஸ் தனது சிசுடமா நேச்சரேவியின் பத்தாவது பதிப்பில் விவரித்தார். இது 1758 இல் வெளியிடப்பட்டது. அவர் முதலில் இதை லாப்ரஸ் ஃபால்கேடஸ் என வகைப்படுத்தினார், இருப்பினும் இந்த மீன்கள் டிராச்சினோடஸ் இனத்தில் வைக்கப்பட்டது. [3] இது டிராச்சினோடஸ் பேரினத்தின் மாதிரி இனம் ஆகும்.[4]

சொற்பிறப்பியல் தொகு

வாமுட்டானின் அறிவியல் பெயரில் உள்ள Trachinotus என்பது கிரேக்கச் சொல்லான trachys ( τραχύς ) மற்றும் noton ( νῶτον ) என்பதின் சேர்க்கையாகும். இதில் trachys என்பதற்கு "கரடுமுரடான" என்றும், noton என்பதற்கு "முதுகு" என்று பொருள்படும். அதாவது கரடுமுரடான முதுகு என்பது பொருளாகும். [5] வாமுட்டானின் அறிவியல் பெயரின் பின்னொட்டாக வரும் falcatus என்பது இனத்தின் பெயராகும். இது ஒரு லத்தீன் பெயரடை, இது தோராயமாக " அறுவாள் ஆயுதம்" என்று பொருளாகும். வாமுட்டான் கூட்டங்கள் எப்போதாவது உணவுக்காக கடலின் மேற்பரப்புக்கு அருகில் வரும் போது, தென்படும் வாமுட்டானின் அரிவாள் போன்ற முதுகு துடுப்பினால் இப்பெயர் இடப்பட்டது. [3]

உடற்கூறியல் மற்றும் உருவவியல் தொகு

 
மெக்ஸிகோ வளைகுடாவிலிருந்து பாடம் செய்யப்பட்ட வாமுட்டான்

வாமுட்டானை அவற்றின் நீளமான முதுகு துடுப்பு மற்றும் குதத் துடுப்புகளால் வேறுபடுத்தி அறியலாம். [3] இதன் முதுகுத் துடுப்பு அரிவாள் வடிவத்தில் உள்ளது. வால் துடுப்பு ஆழமான பிறை வடிவில் காணப்படுகிறது. மேலும் இதன் உடல் பக்கவாட்டில் தட்டையாக உள்ளதால், இந்த மீன்களை முன்பக்கத்திலிருந்து பார்க்கும்போது உயரமாகவும் மெல்லியதாகவும் தெரிகிறது. [3]

வாமுட்டானின் முதுகு துடுப்பில் சராசரியாக ஆறு முதல் ஏழு முட்கள் உள்ளன, அதில் 18 முதல் 20 வரை மென்மையான கதிர்கள் உள்ளன. குத துடுப்பில் இரண்டு முதல் மூன்று முட்களும், 16 முதல் 18 மென்மையான கதிர்களும் உள்ளன. [2] முதுகு துடுப்பு மற்றும் குத துடுப்புகள் இரண்டும் இருண்ட, முன்புற கதுப்புகளைக் கொண்டுள்ளன . [6] அதே நேரத்தில் இவற்றின் மார்புத் துடுப்புகள் இருண்டு இருக்கும். [7]

வாமுட்டான் மீன் அதிகபட்சமாக 48 அங் (122 செ.மீ) நீளத்தையும், 36 கி.கி வரை எடைவரை எட்டும் என்று, புளோரிடா இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் கூறுகிறது.

பரவல் மற்றும் வாழ்விடம் தொகு

வாமுட்டான்கள் பொதுவாக ஆழமற்ற, வெப்பமண்டல நீரில் களிமண் தரை, அலைதடங்கள், சேற்றுத் தரைப்பகுதிகளில் காணப்படுகின்றன. [3][2] கரைக்கு அருகில் மற்றும் சில உவர் நீர் பகுதிகளில் கூட வாமுட்டான்கள் காணப்படுகின்றன என்ற போதிலும், அவை கடலோரத்தில் உருவானவையாகும். [6] இளம் மீன்கள் பொதுவாக கடல்மட்ட நீரலைவுப்பகுதியில் காணப்படுகிறன. அங்கு இவை சாப்பிட சிறு சிறு முதுகெலும்பில்லாத விலங்குகள் உள்ளன.

மேற்கு கரிபியன் தீவுகள் உட்பட மாசச்சூசெட்ஸ் முதல் பிரேசில் வரை மேற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் வாமுட்டான்கள் காணப்படுகன்றன. [2]

குறிப்புகள் தொகு

  1. Smith-Vaniz, W.F.; Williams, J.T.; Pina Amargos, F.; Curtis, M.; Brown, J. (2015). "Trachinotus falcatus". IUCN Red List of Threatened Species 2015: e.T190407A16510662. doi:10.2305/IUCN.UK.2015-4.RLTS.T190407A16510662.en. https://www.iucnredlist.org/species/190407/16510662. 
  2. 2.0 2.1 2.2 2.3 Froese, Rainer and Pauly, Daniel, eds. (2019). "Trachinotus falcatus" in FishBase. August 2019 version.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "Florida Museum of Natural History". Archived from the original on 2008-04-14. பார்க்கப்பட்ட நாள் 2008-03-03.
  4. வார்ப்புரு:Cof record
  5. Romero, P., 2002.
  6. 6.0 6.1 Smith, C.L., 1997.
  7. Randall, J.E., 1996.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாமுட்டான்&oldid=3571203" இலிருந்து மீள்விக்கப்பட்டது