வாய் துர்நாற்றம்

வாய் துர்நாற்றம் (Halitosis/Bad breadth) என்பது வாயிலிருந்து துர்நாற்றம் வீசுவதைக் குறிக்கிறது. பெரும்பாலும் வாய் அசுத்தமாக உள்ளதன் அறிகுறியாக இருந்தாலும் சில நேரங்களில் வேறு பல நோய்களை வெளிப்படுத்தும் அறிகுறியாகவும் இருக்கிறது. பல் சொத்தை, பல்முரசு நோய்களுக்குட்பட்டபின் (periodontal disease) வாய் துர்நாற்றம் ஏற்படுவதைக் குறித்த கவலையானது பொதுமக்கள் பல் மருத்துவமனைக்கு அடிக்கடிச் செல்லும் தலையாயக் காரணங்களுள் மூன்றாவதாக விளங்குகிறது[1]. பொதுமக்களில் இருபது சதவிகிதத்தினர் ஒருவாறு வாய் துர்நாற்றத்தினால் அவதிப்படுகிறார்கள்.

வாய் துர்நாற்றம்
ஐ.சி.டி.-10R19.6
ஐ.சி.டி.-9784.99
DiseasesDB5603
MedlinePlus003058

வாய் துர்நாற்றத்திற்கு பொதுவான காரணங்களாக மோசமான வாய் சுகாதாரம், புகைப்பிடித்தல், மது அருந்துதல், நீர்ச்சத்து குறைவாக இருத்தல் ஆகியவைக் குறிப்பிடப்படுகின்றன. தீராத குடல் நோய் மற்றும் புண், ஈறுகளில் பிரச்சனை, சர்க்கரை நோய் ஆகிய மருத்துவக் காரணங்களும், அசைவ உணவுத் துணுக்குகள் வாயில் தங்குவது ஆகியவையும் காரணங்களாகக் கூறப்படுகிறது[2].

மேற்கோள்கள்

தொகு
  1. Loesche, WJ; Kazor, C (2002). "Microbiology and treatment of halitosis". Periodontology 2000 28: 256–79. doi:10.1034/j.1600-0757.2002.280111.x. பப்மெட்:12013345. 
  2. ஃப்ரீடா ஃப்ராங்ளின் (15 ஜூலை 2012). "மணக்க மணக்க பேசுங்கள்!". பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=வாய்_துர்நாற்றம்&oldid=3792328" இலிருந்து மீள்விக்கப்பட்டது