வார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் ஆகஸ்ட் 2007
- ஆகஸ்ட் 1 - யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் யாழ். பல்கலைக்கழக மாணவரும் இளம் ஊடகவியலாளருமான சகாதேவன் நிலக்சன் (வயது 24) சுட்டுக்கொலை செய்யப்பட்டார். (புதினம்)
- ஆகஸ்ட் 2 - யாழ்ப்பாணத்தில் தணிகாசலம் சசிரூபன் (வயது 25) என்ற மாணவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். (புதினம்)
- ஆகஸ்ட் 4 - யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்திருந்த மாணவர் பாலசிங்கம் சுரேஸ் (வயது 21) உயிரிழந்தார். (புதினம்)
- ஆகஸ்ட் 8 - அம்பாறை கஞ்சிக்குடிச்சாறுப் பகுதியில் தாக்குதல் நடவடிக்கைக்காக இறங்கிய இலங்கை சிறப்பு அதிரடிப்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 4 படையினர் கொல்லப்பட்டனர். (புதினம்)
- ஆகஸ்ட் 8 - யாழ்ப்பாணம் தென்மராட்சியில் பொதுமக்கள் இருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். (புதினம்)
- ஆகஸ்ட் 12 - யாழ்ப்பாணம் தச்சன்தோப்புப் பகுதியில் நிகழ்ந்த கிளைமோர் தாக்குதலில் 4 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டு 13 பேர் படுகாயமடைந்தனர். (புதினம்)
- ஆகஸ்ட் 13 - நெடுங்கேணியில் பயணிகள் பேருந்து] மீது இலங்கை வான்படையின் மிக் ரக வானூர்தி நடத்திய தாக்குதலில் சுபாஜினி (வயது 20) என்ற இளம்பெண் கொல்லப்பட்டார். (புதினம்)
- ஆகஸ்ட் 15 - கொழும்பில் தினக்குரல் ஊடகவியலாளர் கே. பி. மோகன் என்பவர் மீது வைத்து அசிட் வீசப்பட்டதில் அவர் படுகாயமடைந்தார். (டெய்லி மிரர்)
- ஆகஸ்ட் 20 - வவுனியாவில் செட்டிகுளம் உலுக்குளம் பகுதியில் காவற்படை சோதனை நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று பெண் ஊர்காவல் படையினர் உட்பட நான்கு ஊர்காவல் படையினரும் சாரதியொருவரும் கொல்லப்பட்டதுடன் இருவர் படுகாயமடைந்தனர். (தினக்குரல்)
- ஆகஸ்ட் 20 - யாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதியில் டெனிஸ் கண்ணிவெடி அகற்றும் பிரிவைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். (தினக்குரல்)