வார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் பெப்ரவரி 2009
- பெப்ரவரி 20:
- வான்புலிகளின் 2 கரும்புலிகள் கொழும்பில் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டு 47 பேர் கொல்லப்பட்டனர். (தமிழ்வின்)
- ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டு இயக்குநர் சீமான் 15 நாட்கள் சிறையிலடைக்கப்பட்டார். (தமிழ்வின்)
- இலங்கையில் தமிழினப் படுகொலையைக் கண்டித்து தென்னாபிரிக்காவில் மாபெரும் கண்டனப் பேரணி நிகழ்ந்தது. (தமிழ்வின்)
- வன்னிப்பெரு நிலப்பரப்பில் பொதுமக்கள் வாழ்விடங்களை நோக்கி படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 17 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் 43 பேர் காயமடைந்தனர். (தமிழ்வின்)
- பெப்ரவரி 19:
- வன்னியில் நிவாரணப் பொருளை பெறுவதற்காக மக்கள் முண்டியடித்த போது நெரிசலில் நசியுண்டு குழந்தை ஒன்று உயிரிழந்தது. (தமிழ்வின்)
- வன்னிப் பகுதியில் படையினர் நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 46 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 126 பேர் காயமடைந்தனர். (தமிழ்வின்)
- பெப்ரவரி 10:
- வன்னியில் இருந்து 246 நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலைக்கு கப்பல் மூலம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் எடுத்துச் சென்றது. (தமிழ்வின்)
- வன்னியில் தேவிபுரம், சுதந்திரபுரம் ஆகிய இடங்களில் படையினர் நடத்திய தாக்குதலில் 22 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 87 பேர் காயமடைந்தனர். (தமிழ்வின்)
- அம்பாறையில் விடுதலைப் புலிகள் நடத்திய இரு தாக்குதல்களில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவரும் இராணுவத்தினர் மூவருமாக நால்வர் கொல்லப்பட்டனர். (தமிழ்வின்)
- பெப்ரவரி 9:
- வன்னியில் வான் மற்றும் தரைப்படையினர் நடத்திய தாக்குதல்களில் 36 தமிழர்கள் கொல்லப்பட்டு 76 பேர் படுகாயமடைந்தனர். (தமிழ்வின்)
- இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்புச் செய்யப்பட்டு வந்த பிபிசி சிங்கள, தமிழ் நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டன. (தமிழ்வின்)
- முல்லைத்தீவு விசுவமடு பகுதியிலுள்ள இடைத்தங்கல் முகாமில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 20 படையினர் உட்பட 28 பேர் கொல்லப்பட்டதுடன் 90 பேர் காயமடைந்தனர். (தமிழ்வின்)
- பெப்ரவரி 8:
- முல்லைத்தீவு, சுதந்திபுரம் பகுதியில் படையினர் நடத்திய தாக்குதலில், 80 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 200 பேர் காயமடைந்தனர். (தமிழ்வின்)
- வன்னியிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கத்திற்கு இலங்கை அரசு உத்தரவு பிறப்பித்தது. (தமிழ்வின்)
- முல்லைத்தீவில் இருந்து 52 கடல் மைல் தொலைவில் கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை கடற்படையின் சூப்பர் டோரா மூழ்கடிக்கப்பட்டு 15 கடற்படையினர் கொல்லப்பட்டனர். (தமிழ்வின்)
- இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி மலேசியாவில் ராஜா (27 வயது) என்ற இலங்கைத் தமிழர் தீக்குளித்து இறந்தார். (தமிழ்நெட்)
- பெப்ரவரி 7:
- இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகிய இருவர் மீதும், அமெரிக்க நீதிமன்றத்தில் இன அழிப்புக் குற்றம் சுமத்தப்பட்டு, அமெரிக்காவின் முன்னாள் பிரதி சட்டமா அதிபர் புறூஸ் பெயின் வழக்கு தாக்கல் செய்துள்ளார். (தமிழ்வின்)
- நாகப்பட்டினம், சீர்காழியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவிச்சந்திரன் (45 வயது) என்பவர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கமிட்டபடி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து இறந்தார். (தமிழ்வின்)
- வன்னியின் பல பகுதிகளில் இலங்கைப் படையினர் பீரங்கிகள் மூலம் கொத்துக்குண்டுத் தாக்குதல்களை நடத்தியதில் 65 பொதுமக்கள் கொல்லப்பட்டு 226 பேர் காயமடைந்தனர். (தமிழ்வின்)
- பெப்ரவரி 6:
- புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை மீது வான்படையினர் அகோர வான் தாக்குதலை நடத்தியதில் 61 நோயாளர்கள் கொல்லப்பட்டனர். (தமிழ்வின்)
- விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க இலங்கை அரசு மறுத்துள்ளது. (ஸ்கை செய்திகள்)
- பெப்ரவரி 3: குறைந்தது 52 தமிழர்கள் வன்னியில் இடம்பெற்ற தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். (த கார்டியன்)
- பெப்ரவரி 2: புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது இராணுவ ஏவுகணைகள் வீழ்ந்ததில் 9 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- பெப்ரவரி 1:
- புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது இராணுவ ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்ததில் 6 நோயாளிகள் கொல்லப்பட்டு பலர் படுகாயமடைந்தனர். (ஏபி)
- முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பில் படையினர் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்துக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டும் 3 தாங்கிகள் முற்றாக தாக்கியழிக்கப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். (தமிழ்வின்), (தமிழ்வின்)