வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் ஏப்ரல் 2010
- ஏப்ரல் 30:
- உலகின் மிகப்பெரும் வர்த்தகக் கண்கட்சியாகக் கருதப்படும் எக்ஸ்போ 2010 சீனாவின் ஷங்காயில் திறந்து வைக்கப்பட்டது. (பைனான்சியல் டைம்ஸ்)
- சாட் தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
- ஏப்ரல் 29:
- பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் முக்காடிட்டுக் கொள்வது பெல்ஜியத்தில் தடை செய்யப்பட்டது. (த டெலிகிராப்)
- சிறுகோள் ஒன்றில் முதற்தடவையாக பனிக்கட்டி கண்டுபிடிக்கப்பட்டது
- சீனாவில் ஆரம்பப் பள்ளியில் இடம்பெற்ற தாக்குதலில் 28 குழந்தைகள் படுகாயம்
- ஏப்ரல் 28:
- தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் படைவீரர் ஒருவல் கொல்லப்பட்டார். (வால்ஸ்ட்ரீட் ஜர்னல்)
- மலேசிய இடைத்தேர்தலில் தமிழ் வேட்பாளர் வெற்றி
- 1940 காட்டின் படுகொலை தொடர்பான ஆவணங்களை இரசியா வெளியிட்டது
- ஏப்ரல் 27:
- உலகின் மிக உயரமான 14 மலைச்சிகரங்களிலும் ஏறிய முதல் பெண் என்ற பெருமையை தென் கொரியாவின் ஓ யூன்-சூன்]] பெற்றார். (கொரியா டைம்ஸ்)
- பனாமாவின் முன்னாள் தலைவர் நொரியேகா பிரான்சுக்கு நாடு கடத்தப்பட்டார்
- சூடான் தேர்தலில் அரசுத்தலைவர் அல்-பசீர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு
- ஏப்ரல் 26:
- ஏப்ரல் 25:
- ஏப்ரல் 24:
- ஏப்ரல் 23:
- ஏப்ரல் 22:
- ஏப்ரல் 21:
- அர்ஜென்டினாவின் முன்னாள் தலைவருக்கு 25 ஆண்டு சிறைத்தண்டனை
- இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டன
- ஏப்ரல் 20:
- இலங்கையில் இரு தொகுதிகளில் மீள் வாக்கெடுப்பு இடம்பெற்றது
- ஏப்ரல் 19:
- ஜெசிகா லால் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது
- செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் அமெரிக்காவின் முயற்சி 2035 இற்குள் சாத்தியம்
- தமிழ் அகதிகள் மெராக் துறைமுகத்தை விட்டு வெளியேறினர்
- ஏப்ரல் 18:
- பாகிஸ்தானின் வடமேற்கில் இடம்பெற்ற வாகனக் குண்டுவெடிப்பில் 7 பேர் கொல்லப்பட்டனர் 20 பேர் காயமடைந்தனர். (பிபிசி)
- சிம்பாப்வே தனது 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. (பிபிசி)
- வடக்கு சைப்பிரசின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் அரசுத்தலைவர் தேர்தல்
- ஏப்ரல் 17:
- சிங்காய் நிலநடுக்கம், 2010: நிலநடுக்கத்தில் இறந்தோரின் எண்ணிக்கை 1,484 ஆக உயர்ந்தது. இன்னும் 312 பேர் காணாமல் போயுள்ளனர். (சின்குவா)
- பங்களூரில் எம். சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் துடுப்பாட்டப் போட்டிகளின் போது இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்புகளில் 8 பேர் காயமடைந்தனர். (பிபிசி)
- தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகர் அடிலெயிட் நகரில் நிலநடுக்கம் பதிவானது. (சிட்னி மோர்னிங் எரால்டு)
- பிரபாகரனின் தாயாரை இந்திய அரசு சென்னை விமான நிலையத்தில் வைத்துத் திருப்பி அனுப்பியது
- பாக்கித்தானில் இடம்பெயர்ந்தோர் முகாமில் இரட்டைக் குண்டுவெடிப்பு, பலர் உயிரிழப்பு
- ஏப்ரல் 16:
- பாகிஸ்தானில் பலுச்சிஸ்தான் மாகாணத்தில் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- பிரிக் நாடுகளின் உச்சிமாநாடு பிரெசிலின் தலைநகர் ஆரம்பமானது. த இந்து)
- சோமாலியப் பள்ளிக்கூடங்களில் மணி அடிப்பதற்கு இசுலாமியப் போராளிகள் தடை
- ஐசுலாந்தில் எரிமலை வெடிப்பின் சாம்பல் பரவியதால் ஐரோப்பிய விமானசேவைகள் பாதிப்பு
- பதவியில் இருந்து அகற்றப்பட்ட கிர்கிஸ்தான் அரசுத்தலைவர் நாட்டை விட்டு வெளியேறினார்
- உலகின் இரண்டாவது உயரமான கட்டடம் மக்காவில் கட்டப்படுகிறது
- ஏப்ரல் 15:
- ஏப்ரல் 14:
- மெக்சிகோவில் சரக்கு விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் 6 பேர் கொல்லப்பட்டனர். (ஏஎஸ்என்)
- மேற்கு வங்காளத்தில் சூறாவளி, 60 பேர் உயிரிழப்பு
- சோமாலிய வானொலிகளில் பாடல்கள் ஒலிபரப்புவதற்கு போராளிகள் தடை விதிப்பு
- ஏப்ரல் 13:
- பிலிப்பீன்சில் அபு சாயெப் தீவிரவாதிகளுக்கும் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். (சீஎனென்)
- பாக்கித்தானில் இராணுவ வான் தாக்குதல் ஒன்றில் 73 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை தமிழகத்திற்கு மூன்றாவது இடம்
- சோமாலியாவில் இடம்பெற்ற வன்முறைகளில் 21 பேர் உயிரிழப்பு
- கிர்கிஸ்தான் அரசுத்தலைவர் சரணடையக் காலக்கெடு
- சிங்காய் நிலநடுக்கம், 2010: சீனாவின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம், நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு
- ஏப்ரல் 12:
- ஆஸ்திரியாவில் இத்தாலிய எல்லைக்கருகில் மெரானோ என்ற இடத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதில் 6 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ரஷ்யாவின் பிரபலமான நீதிபதி எடுவார்ட் சுவாசொவ் மாஸ்கோவில் அவரது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். (பிபிசி)
- வட அயர்லாந்தில் வாகனக் குண்டுவெடிப்பு
- சூடானில் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் பல-கட்சிப் பொதுத் தேர்தல்
- ஏப்ரல் 11:
- பாகிஸ்தானில் படையினரின் வான்தாக்குதலில் 13 போராளிகள் கொல்லப்பட்டனர். (பிரஸ்டிவி)
- சொலமன் தீவுகளில் 6.8 அளவு நிலநடுக்கம் தாக்கியது. (தி ஆஸ்திரேலியன்)
- சூடானில் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் பல-கட்சிப் பொதுத் தேர்தல்
- தாய்லாந்து அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் 20 பேர் உயிரிழப்பு, பலர் காயம்
- கண்டி, நாவலப்பிட்டி தொகுதிகளில் ஏப்ரல் 20 இல் மீள் வாக்கெடுப்பு
- ஏப்ரல் 10:
- பாகிஸ்தானின் வடமேற்கில் படையினர் 100 போராளிகளைக் கொன்றனர். (அல்ஜசீரா)
- இரசிய விமான விபத்தில் போலந்தின் அரசுத்தலைவர் கொல்லப்பட்டார்
- வெள்ளியில் எரிமலைகள் வெடிக்கும் சாத்தியக்கூறுகள் இன்னும் உள்ளன
- ஏப்ரல் 2:
- சீனாவில் இவ்வார ஆரம்பத்தில் சுரங்கம் ஒன்றினுள் புகுந்த வெள்ளத்தினால் மூழ்கிய சுரங்கப் பாதையில் சிக்கிய 153 பேரும் இன்னமும் உயிருடன் இருப்பதாகவும் அவர்கள் தம்மைக் காப்பாற்ரக் கோரி சத்தமிடுவது கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (பிபிசி)
- கொழும்பில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐதேக சார்பில் போட்டியிடும் சுசில் கிந்தல்பிட்டிய என்ற மூத்த ஊடகவியலாளர் பெண்ணொருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார். (தமிழோசை)
- ரஷ்யாவின் சோயுஸ் டிஎம்ஏ-18 விண்கலம் மூவருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.
- இந்தியாவில் சிறுவர்கள் அனைவருக்கும் அடிப்படைக் கல்வி உரிமை
- ஏப்ரல் 1:
- உலகில் வேறு எங்கும் இல்லாத அளவிலான 2011 ஆம் ஆண்டுக்கான மிகப் பெரிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடவடிக்கையை இந்தியா ஆரம்பித்துள்ளது. (பிபிசி)
- பெரு வெள்ளம் காரணமாக மூடப்பட்டிருந்த பெருவின் மச்சு பிக்ச்சு நகரம் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்பட்டது. (பிபிசி)
- இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 1528 பேர் விடுவிக்கப்பட்டனர். (தமிழோசை)
- காஷ்மீரில் தொடருந்துப் பாதை தீவிரவாதிகளால் தகர்ப்பு
- கினி-பிசாவு நாட்டில் ”இராணுவப் புரட்சி” முயற்சி