வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் டிசம்பர் 2007
- டிசம்பர் 30 - பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக பெனசீர் பூட்டோவின் 19 வயது மகன் பிலாவால் பூட்டோ சர்தாரி தெரிவு செய்யப்பட்டார். (பிபிசி)
- டிசம்பர் 27 - பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ ராவுல்பிண்டி நகரில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். (ரொய்ட்டர்ஸ்)
- டிசம்பர் 25 - மேற்கு நேபாளத்தில் தொங்கு பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 15 பேஎர் கொல்லப்பாட்டு பலர் படுகாயமடைந்தனர். (பிபிசி)
- டிசம்பர் 23 - நேபாளத்தில் 240 ஆண்டுகால மன்னராட்சியை அகற்றுவதற்கு அந்நாட்டு அரசு ஒப்புக் கொண்டுள்ளது. (பிபிசி)
- டிசம்பர் 23 - இந்தியாவின் குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல்களில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றது. (பிபிசி)
- டிசம்பர் 22 - ஐவரி கோஸ்ட்டில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசாங்க ஆயுதக் குழுவிற்கும் இடையில் இடம்பெற்ற அமைதி ஒப்பந்தத்தை தொடர்ந்து ஆயுதங்களை கைவிடும் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. (பிபிசி)
- டிசம்பர் 21 - பாகிஸ்தானில் பெஷாவார் நகரில் மசூதி ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- டிசம்பர் 20 - 81 ஆண்டுகள், 7 மாதங்கள், 29 நாட்களை நிறைவு செய்து பிரித்தானியாவை ஆட்சிசெய்த மன்னர்கள், மகாராணிகளில் மிகவும் வயது முதிர்ந்தவரென்ற பெருமையை மகாராணி இரண்டாம் எலிசபெத் பெற்றார். (பிபிசி)
- டிசம்பர் 20 - நியூ சிலாந்து, கிஸ்போர்ன் நகரில் 6.8 நிலநடுக்கம் தாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டார். பெரும் சேதம் ஏற்பட்டது. (சிட்னிமோர்னிங்ஹெரால்ட்)
- டிசம்பர் 19 - பாகிஸ்தானில் மெஹ்ராப்பூர் நகரில் கடுகதி தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 50 பேருக்கு மேல் கொல்லப்பட்டுப் பலர் படுகாயமடைந்தனர். [1] (பிபிசி)]
- டிசம்பர் 17 - பொலீவியாவின் நிர்வாகப் பகுதிகாளான பெனி, பாண்டோ, சாண்டா குரூஸ், தரிஜா ஆகியன நடுவண் அரசிலிருந்து சுயாட்சி மாகாணங்களாகத் தம்மை அறிவித்தன. (சிஎன்என்)
- டிசம்பர் 16 - இந்தியாவின் சத்திஸ்கர் மாநிலத்தில் தாண்தேவாடா சிறையிலிருந்து கம்யூனிச நக்ஸலைட்டுகள் உட்பட குறைந்தது முந்நூறு கைதிகள் தப்பியோடினர். (பிபிசி)
- டிசம்பர் 15 - பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் நாட்டில் நடைமுறையில் இருந்த அவசரகாலச் சட்டத்தை நீக்கினார். (பிபிசி)
- டிசம்பர் 15 - பாலியில் இடம்பெற்ற ஐநா அவையின் காலநிலைமாற்ற மாநாட்டில் அடுத்த இரு ஆண்டு காலத்துள் காலநிலைமாற்றம் குறித்த புதிய உடன்படிக்கை ஒன்றை வரைய முடிவெடுக்கப்பட்டது. (நியூயோர்க் டைம்ஸ்)
- டிசம்பர் 13 - மலேசியாவில் ஹிண்ட்ராப் எனப்படும் இந்து உரிமை செயற்குழுவின் தலைவர்கள் ஐந்து பேரை காவற்துறையினர் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். (தமிழ்முரசு)
- டிசம்பர் 13 - அஸ்ஸாம் மாநிலத்தில் தொடருந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர். (அசோசியேட்டட் பிரஸ்)
- டிசம்பர் 12 - ஊக்க மருந்து உட்கொண்டதை ஒப்புக் கொண்ட அமெரிக்க ஓட்டப்பந்தய வீராங்கனை மரியன் ஜோன்சின் 5 சிட்னி ஒலிம்பிக் விருதுகள் திரும்பப் பெறப்பட்டன். (ரொய்ட்டர்ஸ்)
- டிசம்பர் 5 - ஐக்கிய அமெரிக்காவின் நெப்ராஸ்காவில் ஒமாஹா நகரின் கடைத் தொகுதி ஒன்றில் குழுமியிருந்த மக்கள் மீது ஒருவன் சரமாரியாகச் சுட்டு எட்டுப் பேரைக் கொன்று தன்னையும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டான். (ராய்ட்டர்ஸ்)
- டிசம்பர் 3 - இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் (படம்) தேர்வுத் துடுப்பாட்டத்தில் 709 இலக்குகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார். (பிபிசி)
- டிசம்பர் 3 - ஆஸ்திரேலியாவின் 26வது பிரதமராக தொழிற்கட்சியைச் சேர்ந்த கெவின் ரட் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். (பிபிசி)
- டிசம்பர் 2 - ரஷ்ய அதிபார் விளாடிமிர் பூட்டினின் ஐக்கிய ரஷ்யக் கட்சி நாடாளுமன்றத் தேர்தல்களில் 62.8% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. (ராய்ட்டர்ஸ்)