வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் பெப்ரவரி 2011
- பெப்ரவரி 27:
- லிபியாவுக்கு எதிராக ஐநா பாதுகாப்புச் சபை பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.
- கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் அரசுத்தலைவர் மாளிகையைத் தாக்க முற்பட்ட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
- பெப்ரவரி 25:
- அல்ஜீரியாவில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்று வந்த அரசு எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து அங்கு கடந்த 19 ஆண்டு காலமாக அமுலில் இருந்த அவசரகாலச் சட்டத்தை அந்நாட்டின் அரசுத்தலைவர் நீக்கியுள்ளார்.
- பெப்ரவரி 24:
- ஐரோப்பாவின் அதிநவீன சரக்கு விண்கலம், யொகான்னசு கெப்லர், பன்னாட்டு விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்தது.
- அமெரிக்காவின் டிஸ்கவரி விண்ணோடம் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து கடைசித் தடவையாக விண்ணுக்கு ஏவப்பட்டது.
- பெப்ரவரி 22:
- நியூசிலாந்தின் தெற்குத் தீவில் உள்ள கிறைஸ்ட்சேர்ச் நகரில் இடம்பெற்ற 6.3 அளவு நிலநடுக்கத்தில் இருநூறுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
- பெப்ரவரி 20:
- தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதியம்மா தனது 81வது அகவையில் வல்வெட்டித்துறையில் காலமானார்.
- பெப்ரவரி 19:
- துடுப்பாட்ட உலகக்கோப்பைப் போட்டிகள் ஆரம்பமாயின.
- பெப்ரவரி 16
- இலங்கையின் வடக்குக் கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 112 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
- பெப்ரவரி 15:
- நாசாவின் ஸ்டார்டஸ்ட் விண்கலம் டெம்பெல் 1 வால்வெள்ளியைக் கடந்துள்ளது.
- நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் இனந்தெரியாதோரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
- பெப்ரவரி 11:
- 18 நாட்கள் இடம்பெற்று வந்த மக்கள் போராட்டங்களை அடுத்து எகிப்திய அரசுத்தலைவர் ஒசுனி முபாரக் தனது பதவியில் இருந்து விலகி பொறுப்புகளை இராணுவத்திடம் ஒப்படைத்தார்.
- சிலியின் மந்திய பகுதியில் 6.8 அளவு நிலநடுக்கம் இடம்பெற்றது.
- பெப்ரவரி 10:
- பாக்கித்தானில் பள்ளி மாணவனின் தற்கொலைக் குண்டுவெடிப்பில் 31 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
- பெப்ரவரி 9:
- தெற்கு சூடான் விடுதலைக்கு ஆதரவான பொது வாக்கெடுப்பு இறுதி முடிவுகள் வெளிவந்தன. 99 வீதமானோர் ஆதரவாக வாக்களித்தனர்.
- பெப்ரவரி 6:
- கம்போடியாவில் 900-ஆண்டுகள் பழமையான பிரியா விகார் கோயில் தொடர்பான தாய்லாந்துடனான எல்லைப்போர் 3வது நாளாகத் தொடர்ந்தது. (பிபிசி)
- பெப்ரவரி 4:
- பர்மாவின் புதிய அரசுத்தலைவராக முன்னாள் பிரதமர் தெய்ன் செய்ன் அறிவிக்கப்பட்டார்.
- பெப்ரவரி 3:
- 2011 எகிப்திய போராட்டம்: கெய்ரோவில் அரசுத்தலைவர் ஹொஸ்னி முபாரக்கின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கைகலப்பு தொடர்ந்ததில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர். 1,500 பேர் காயமடைந்தனர். (ஏபி)
- ஆத்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் வடக்குப் பகுதியை சூறாவளி யாசி தாக்கிப் பெரும் சேதத்தை உண்டுபண்ணியது. (ஏபிசி)
- பெப்ரவரி 2:
- இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் அதிகப் பயணிகளை ஏற்றிச் சென்ற தொடருந்தின் கூரையில் ஏறிச் சென்றவர்கள் 14 பேர் தாழ் உயரப் பாலம் ஒன்றிச் சிக்கி உயிரிழந்தனர். [ (டைம்ஸ் ஒஃப் இந்தியா)]
- இலங்கையில் மீண்டும் மழை, மண்சரிவு ஏற்பட்டதில் மூவர் உயிரிழந்தனர்.
- கெப்லர்-11 என்ற விண்மீனைச் சுற்றி வரும் 6 கோள்களைக் கண்டறிந்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. (தி இண்டியன்)
- முன்னாள் இந்திய மத்திய அமைச்சர் ஆ. ராசா 2ஜி-ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டார்.
- மக்சேசே பரிசு பெற்ற சமூக ஆர்வலர் சந்தீப் பாண்டே ஊழலுக்கு எதிரான தனது குரலை வலுப்படுத்தத் தான் இந்திய அரசிடம் இருந்து பெற்ற உயர் விருது ஒன்றைத் திரும்பக் கொடுத்துள்ளார்.
- பெப்ரவரி 1:
- தெற்குத் தாய்லாந்தில் இசுலாமியத் தீவிரவாதிகளால் பௌத்த மதத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகொலை செய்யப்பட்டனர். (ராய்ட்டர்ஸ்)