வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் மார்ச் 2009
- மார்ச் 22: சீனாவில் காவல் நிலையம் ஒன்றைத் தாக்கிய திபெத்தைச் சேர்ந்த 93 புத்த குருக்கள் கைது செய்யப்பட்டனர். (ஏபி)
- மார்ச் 21:
- அங்கோலாவில் பாப்பரசர் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் கொல்லப்பட்டுப் பலர் படுகாயமடைந்தனர். (பிபிசி)
- மடகாசுகர் நாட்டுத் தலைவராக ஆண்ட்ரீ ராசொய்லினா பதவியேற்றார். (பிபிசி)
- மார்ச் 20: ஹோர்முஸ் நீரிணையில் இரண்டு அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் மோதிக்கொண்டன. (சீஎனென்)
- மார்ச் 19: தொங்கா நாட்டில் 7.9-அளவு நிலநடுக்கம் பதியப்பட்டது. (ஸ்கை செய்திகள்)
- மார்ச் 17: மடகாசுகர் அதிபராக முன்னாள் மேயர் ஆண்ட்ரி ராசொய்லினா இராணுவத்தினரால் தேர்ந்தெடுக்கப்பட்டார். (பிபிசி)
- மார்ச் 16: மடகாசுகரில் அதிபர் இல்லத்தை இராணுவம் முற்றுகையிட்டுக் கைப்பற்றியது. (ஏபி)
- மார்ச் 15: டிஸ்கவரி விண்ணோடம் புளோரிடாவில் இருந்து ஏழு விண்வெளி வீரருடன் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. (சீஎனென்)
- மார்ச் 12: விண் எச்சங்களில் இருந்து தப்புவதற்காக பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் இருந்து விண்வெளி வீரர்கள் சிறிது நேரம் ரஷ்ய அவசர விண்கூடத்திற்குள் சென்றனர். (ஸ்கை)
- மார்ச் 11: ஜெர்மனியின் வினெண்டன் நகரில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் மாணவர்கள் 15 பேர் கொல்லப்பட்டனர். (DW)
- மார்ச் 10: அமெரிக்காவின் அலபாமாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு நிகழ்வில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர். (சீஎனென்)]
- மார்ச் 9: குருத்தணு (குளோனிங்) முறையில் மனிதரை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அனுமதி மறுத்துள்ளார். (ராய்ட்டர்ஸ்)
- மார்ச் 8: வட அயர்லாந்தில் பிரித்தானிய இராணுவ முகாம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- மார்ச் 7: வேறு விண்மீன்களைச் சுற்றிவரும் கோள்களின் ஒளிச்செறிவை ஆராயவென நாசா கெப்ளர் விண்கலத்தை ஏவியது. (சீஎனென்)
- மார்ச் 6: சிம்பாப்வே பிரதமர் மோர்கன் சுவாங்கிராய் வீதி விபத்தொன்றில் படுகாயமடைந்தார். அவரது மனைவில் கொல்லப்பட்டார். (பிபிசி)
- மார்ச் 5: மகாத்மா காந்தி பயன்படுத்திய மூக்குக் கண்ணாடி உட்பட ஐந்து பொருட்கள் நியூயோர்க் நகரில் ஏலத்தில் விடப்பட்ட போது அவற்றை இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையா 18 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கினார். (பிபிசி)
- மார்ச் 4: சூடான் நாட்டுத் தலைவர் ஓமார் அல்-பசீருக்கு எதிராக பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. (சீஎனென்)
- மார்ச் 3: பாகிஸ்தானில் லாகூர் நகரில் இலங்கை துடுப்பாட்ட அணி வீரர்கள் சென்ற வாகனம் மீது இனம்தெரியாதோர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் காயமடைந்து, 5 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- மார்ச் 2: மேற்கு ஆபிரிக்க நாடான கினி-பிசாவு தலைவர் ஜொவாவோ பேர்னார்டோ வியெய்ரா இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். (பிபிசி)
- மார்ச் 1:
- சந்திரனுக்கான சீனாசின் முதலாவது விண்கலம் சாங்கேர் 1 வெற்றிகரமாக சந்திரனில் மோதியது. (சீன வானொலி)
- இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஜானே து யா ஜானே நா என்ற படத்துக்காக பிலிம் பேர் விருது வழங்கப்பட்டது. (தினமணி)