வாலிசுவரா கோவில்

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

வாலிசுவரா கோவில்  தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருவலிஸ்வரம் நகரில் அமைந்துள்ள ஒரு இந்து கோவில் ஆகும். இக்கோயிலில் சிவன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 10 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இக்கோவில் சோழர்களால்  கட்டப்பட்டது.

கட்டிடக்கலை

தொகு

வாலிசுவரா கோவில்  சோழர் காலக்கட்டிடக்கலைக்கு [1] சிறந்த உதாரணமாக  கருதப்படுகிறது. இக் கோவிலின்  முக்கிய தெய்வம்  சிவன்.  சிவன் சண்டேஸ்அனுகிரக மூா்த்தியாக [1]காட்சியளிக்கிறாா். பார்வதி மற்றும் சிவன் பக்தர்களின் [1] சிலைகள் உள்ளன.

கோபுரத்தில் சிவன்  சிலை அா்த்தனாாிஸ்வரா் வடிவில் அமைந்திருக்கிறது. இக் கோவில் பனைமலை மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள பல்லவா் கால  கோயில்களின் கட்டிடக்கலையை ஒத்துள்ளது.  இதே வகையான கோவில்களோடு ஒப்பிடும் போது இக் கோவிலின் வேலைப்பாடு மற்றும் அழகு, முழுமையான அமைப்பு  மற்றவைகளை விஞ்சமுடியாத அளவிற்கு இருப்பதாக  கே. ஏ. நீலகண்ட சாஸ்த்திாி குறிப்பிடுகிறாா்.[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Sastri, K. A. Nilakanta (2000) [1935]. The Cholas. University of Madras. p. 759.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாலிசுவரா_கோவில்&oldid=3600521" இலிருந்து மீள்விக்கப்பட்டது