வால்டர் பிராட்டன்
அமெரிக்க இயற்பியலாளர் (1902-1987)
வால்டர் அவுசர் பிராட்டன் (Walter Houser Brattain, பெப்ரவரி 10, 1902 – அக்டோபர் 13, 1987) ஓர் அமெரிக்க இயற்பியலாளர் ஆவார். இவர் பெல் ஆய்வுகூடத்தில் ஜான் பார்டீன், வில்லியம் ஷாக்லி ஆகியோருடன் இணைந்து புள்ளித் தொடர்புத் திரிதடையத்தை 1947 திசம்பரில் கண்டுபிடித்தார்.[1] இக்கண்டுபிடிப்புக்காக இவர்கள் மூவருக்கும் 1956 ஆம் ஆன்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. பிராட்டன் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை மேற்பரப்பு மின்னணு நிலைகளின் ஆய்வுகளுக்காக அர்ப்பணித்தார்.
வால்டர் ஹவுசர் பிராட்டன் Walter Houser Brattain | |
---|---|
1950 இல் பிராட்டன் | |
பிறப்பு | சியாமென், புஜியான் மாகாணம், சிங் சீனா | பெப்ரவரி 10, 1902
இறப்பு | அக்டோபர் 13, 1987 சியாட்டில், அமெரிக்கா | (அகவை 85)
தேசியம் | அமெரிக்கர் |
துறை | இயற்பியல், மின்னணுப் பொறியியல் |
பணியிடங்கள் | உவிட்மன் கல்லூரி பெல் ஆய்வுக்கூடங்கள் |
கல்வி கற்ற இடங்கள் | உவிட்மன் கல்லூரி ஓரிகன் பல்கலைக்கழகம் மின்னசொட்டா பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | ஜான் டொரென்சு டேட், மூத்தவர் |
அறியப்படுவது | திரிதடையம் |
விருதுகள் | இசுடுவர்ட் பாலன்டைன் பதக்கம் (1952) இயற்பியலுக்கான நோபல் பரிசு (1956) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Walter H. Brattain". IEEE Global History Network. ஐஇஇஇ. பார்க்கப்பட்ட நாள் 10 August 2011.