வாழ்த்து (புறநானூற்றுத் துறை)

(வாழ்த்து, புறநானூற்றுத் துறை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வாழ்த்து என்னும் துறையைச் சேர்ந்த பாடல் புறநானூற்றுத் தொகுப்பில் ஒன்றே ஒன்று உள்ளது. [1] இந்தத் துறை புறநானூற்றில் பாடாண் திணையில் வருகிறது.

இலக்கணம் தொகு

தொல்காப்பியம் ‘புறநிலை வாழ்த்து’ என்னும் துறையைக் குறிப்பிடுகிறது. [2] புறப்பொருள் வெண்பாமாலையும் இதனைக் குறிப்பிட்டு பாட்டுடைத் தலைவனை வழிபடு தெய்வம் காக்கவேண்டும் என வேண்டுவது என விக்குகிறது. [3] இது புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள ‘வாழ்த்து’ என்னும் துறைக்குப் பொருந்தி வரவில்லை.

இலக்கியம் தொகு

இரவலர்கள் தங்கள் முரசங்களை ஊர்மன்றத்துப் பலாமரத்தில் மாட்டிவிடுவார்களாம். அதனைக் குரங்கு அடிக்குமாம். அந்த ஒலியை இடி என்று எண்ணி மயில் ஆடுமாம். ஆய் அரசனின் இத்தகைய பொதியமலைப் பகுதிக்கு ஆடுமகள் செல்லலாம். மன்னர்கள் பையெடுத்துச் செல்ல முடியாது – என்று இத் துறை குறிப்பிடப்பட்டுள்ள உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடல் சொல்கிறது.

அடிக்குறிப்பு தொகு

  1. புறநானூறு 128
  2. தொல்காப்பியம் புறத்திணையியல் 29
  3. இன்னது செய்தல் இயல்பு என இறைவன்
    முன் நின்று, அறிவன் மொழி தொடர்ந்தன்று. (புறப்பொருள் வெண்பாமாலை 225 பாடாண் படலம்)