விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் 14
- 1884 – இலங்கையில் இடம்பெற்ற பெரும் சூறாவளி காரணமாக யாழ்ப்பாணத்தில் பெரும் உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டன.
- 1900 – குவாண்டம் இயங்கியல்: மேக்ஸ் பிளாங்க் கரும்பொருள் கதிர்வீச்சு பற்றிய தனது பிளாங்கின் விதியை நிறுவினார்.
- 1903 – அமெரிக்காவின் வட கரொலைனா மாநிலத்தில் ரைட் சகோதரர்கள் தமது ரைட் பிளையர் (படம்) வானூர்தியை முதல் தடவையாக சோதித்தனர்.
- 1918 – ஐக்கிய இராச்சியத்தில் முதல் தடவையாக பெண்கள் நாடாளுமன்றத் தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
- 1940 – கலிபோர்னியா, பெர்க்லியில் புளுட்டோனியம் (Pu-238) முதல் தடவையாகப் பிரித்தெடுக்கப்பட்டது.
- 1962 – நாசாவின் மரைனர் 2 விண்கலம் வெள்ளிக் கோளை அண்மித்தது. இதுவே வெள்ளியை அண்மித்த முதலாவது விண்கலமாகும்.
- 1971 – வங்காளதேச விடுதலைப் போர்: கிழக்குப் பாக்கித்தானைச் சேர்ந்த 200 இற்கும் அதிகமான அறிவாளிகள் பாக்கித்தான் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
பாலூர் து. கண்ணப்பர் (பி. 1908) · சோமசுந்தர பாரதியார் (இ. 1959) · வி. என். சுந்தரம் (இ. 2009)
அண்மைய நாட்கள்: திசம்பர் 13 – திசம்பர் 15 – திசம்பர் 16