விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு19
பெங்களூரில் தமிழ் விக்கிப்பீடியா கருத்தரங்கம்
தொகுபெங்களூரில் இந்திய அறிவியல் கழகத்தில் ஒரு 2-3 மணி நேர தமிழ் விக்கிப்பீடியா - ஒரு முன்னுரை என்ற கருத்தரங்கத்திற்கு அனுமதி கோரியிருந்தேன், இன்று அனுமதி கிடைத்துவிட்டது :). இந்த கருத்தரங்கம் இவ்வளாகத்தில் இருக்கும் சுமார் 60 தமிழை தாய் மொழியாகக் கொண்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவை பற்றியும் மற்றும் அவர்கள் பங்களிப்பை எப்படி செய்யவேண்டும் என்ற விடயங்களை தெரிவிக்க வேண்டி நடத்த திட்டமிட்டுள்ளேன். இதை பற்றி திரு சுந்தரிடமும் உரையாடினேன், இதில் பங்கு பெற அவருடைய ஆவலை தெரிவித்ததுடன் மேலும் சிவகுமார், ரவி மற்றும் பெங்களுரில் இருக்கும் மேலும் சிலரையும் அழைக்கலாம் எனக்கூறியிருந்தார். இந்நிகழ்ச்சி பிப்ரவரி திங்களில் ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் (பெரும்பாலும் 3/4 சனியில்) நடக்கும். இதில் முக்கியமாக ஒலி ஒளியுடன் உரையாட நபர்கள் தேவை.இது சம்பந்தமாக அனைவரது கருத்துகளை பெறவிருப்புகின்றேன். --கார்த்திக் 17:59, 16 ஜனவரி 2009 (UTC)
- அருமை, கார்த்திக். கொஞ்ச நேரம் முன்னாடி தான் http://thamizha.com முகுந்தும் பெங்களூரில் விக்கி அறிமுகப்பட்டறை நடத்துவது பற்றி சொல்லி இருந்தார். சுந்தர் போக சந்தோசு குருவும் (தொடக்க கால தமிழ் விக்கி ஆர்வலர்) பெங்களூரில் இருக்கிறார். இன்னும் பல இந்திய விக்கி ஆர்வலர்களும் பெங்களூரில் இருப்பார்கள். இடம், கணினி வசதி இருக்கும் பட்சத்தில் இந்திய அறிவியல் கழகத்துக்கு வெளியில் உள்ள ஆட்களும் கலந்து கொள்ள இயலுமாறு செய்தால் நன்றாக இருக்கும். என்னால் பெங்களூருக்கு வர இயலும் என்று உறுதியாக சொல்ல இயலவில்லை. முடிந்த அளவு முயல்வேன். நிகழ்பட பயிற்சிக் கோப்புகள் தயாரிப்பதில் உதவ முடியும்.--ரவி 18:56, 16 ஜனவரி 2009 (UTC)
பெங்களூர் தமிழ் விக்கிப்பீடியா கருத்தரங்கம் சிறப்பாக அமைய பாராட்டுக்கள் கார்த்திக். இந்திய அறிவியல் கழகத்தில் இருப்பவர்கள் பங்களித்தால் துறை சார் கட்டுரைகள் அதிகமாகவும் ஆழமாகவும் இருக்கும். --குறும்பன் 02:17, 17 ஜனவரி 2009 (UTC)
- நல்ல முயற்சி கார்த்திக். இம் முயற்சியில் பங்களிக்கக்கூடிய அனைவரும் சேர்ந்து இந்தச் சந்தர்ப்பத்தை முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கருத்தரங்கத்தின் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள். மயூரநாதன் 04:13, 17 ஜனவரி 2009 (UTC)
- தற்செயலாக வழிமாறி (!) இந்திய அறிவியல் கழகத்தருகே சென்று கார்த்திக்கை கண்டு பேசும் வாய்ப்பு கிடைத்தது. வெகு நேரம் பேசியதில் எனக்கு தனிப்பட்ட அளவில் மிக்க மகிழ்ச்சி. அப்போது இ.அ.க. தமிழ்ச் சங்கத்தினரைப் பார்த்தபோது நினைவு வந்து கார்த்தி இதைப் பரிந்துரைத்தார். எனக்கும் ஆவல் கூடியுள்ளது. இந்த அறுபது பேரில் ஒரு இருபது பேர் பல துறைக் கட்டுரைகளை எழுத முன்வந்தால் த.வி. வலுவான ஏற்றம் பெறும்.சந்தோசையும் ஈசுவரையும் அழைக்க வேண்டும். அவர்கள் தற்போது வெளியூரில் உள்ளனர். வந்ததும் தொடர்பு கொள்வேன். அரிகிசோரும் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்துள்ளார். அவரையும் அழைப்போம். ரவியும் சிவகுமாரும் வர முடிந்தால் மேலும் நலம். நாளைய விக்கிப் பட்டறை சிறப்பாக அமைய ரவிக்கு எனது வாழ்த்துகள். -- சுந்தர் \பேச்சு 06:14, 17 ஜனவரி 2009 (UTC)
தமிழர் இனவழிப்பை நிறுத்துக பயனர் பெட்டி
தொகுஈழத்தமிழர் இனவழிப்பை நிறுத்துக. |
--Natkeeran 01:59, 9 பெப்ரவரி 2009 (UTC)
The students could create a Tamil Wikipedia
தொகுThe students could create a Tamil Wikipedia என்று முனைவர். மு. அனந்தகிருசுணன் சொல்லி உள்ளார். செய்தி தவறா, த.விக்குக் கூடுதலாகப் பங்களிக்கச் சொன்னாரா இல்லை த.வி இருப்பதே தெரியவில்லையா?? த.வி குறித்த பரப்புரைகளில் நாம் இன்னும் கூடுதலாக ஈடுபட வேண்டும் போல !--ரவி 12:08, 13 பெப்ரவரி 2009 (UTC)
- செய்தி எதில் வந்தது? செய்தித் தாள்கள், சஞ்சிகைகளில் ஆயின் ஒரு விளக்கம் எழுதி அதன் ஆசிரியருக்கு அனுப்பலாம். முனைவர். மு. அனந்தகிருசுணனுக்கும் இது குறித்து அறிவிக்கலாம். மயூரநாதன் 13:39, 13 பெப்ரவரி 2009 (UTC)
தொடுப்பு கொடுக்க மறந்து விட்டேன். இப்போது கொடுத்துள்ளேன்--ரவி 13:50, 13 பெப்ரவரி 2009 (UTC)
Wikipedia:School and university projects
தொகுen:Wikipedia:School and university projects --Natkeeran 03:02, 14 பெப்ரவரி 2009 (UTC)
மொழி மாற்றம், நல்ல தமிழ் நோக்கி
தொகு- http://www.tamilcc.org/thamizham/ebooks/4/320/320.pdf --Natkeeran 16:05, 14 பெப்ரவரி 2009 (UTC)
அணுகப்பட்ட தமிழ் அமைப்புகள்
தொகு- விக்கிப்பீடியா:அணுகப்பட்ட தமிழ் அமைப்புகள்
- எமது பரப்புரை நடவடிக்கைகளை ஆவணப்படுத்தி, ஒழுங்கமைப்பதற்காக இப்பக்கம் உருவாக்கப்படுகிறது. ஊடகங்களும் இதில் சேக்கப்படலாம் என்று நினைக்கிறேன். தனி நபர்களை இப்படியிலிடுவது அழகல்ல.
- பதில் கிடைக்காத முக்கிய அமைப்புகளை நாம் இதர வழிமுறைகளைப் பயன்படுத்தி தொடர்பு கொள்ள வேண்டும்.
- இந்தப் பட்டியலில் தொடர்பு விபரங்கள் சேப்பது பொருத்தமாக இருக்குமா என்று பிற பயனர் கருத்துக் கூறினால் நன்று. --Natkeeran 23:52, 16 பெப்ரவரி 2009 (UTC)
இலங்கை சார்பு முதற்பக்கம்
தொகுஅண்மைய காலத்தில் தமிழ் வீக்கிப்பீடியாவின் முதற்பக்கம் அதிக அளவு இலங்கை சார்ந்த செய்திகளையும், படங்களையும் பெருமளவில் கொண்டிருப்பதாக உணர்கிறேன். இலங்கை பிரச்சனை தீவிரம் அடைந்திருப்பதனால் இதை ஒரு வகையில் ஏற்றுகொண்டாலும், நாம் நடுநிலையை பேண உறுதி கொள்ள வேண்டும். செய்திகளில் பரந்து பட்ட துறைகளில் உள்ள துறைகளில் உள்ள செய்திகள் இருத்தல் அவசியம். தற்போது இருக்கும் முதற்பக்கத்தில் செய்திகளில் 7 இல் 6 செய்தி தலைப்புகள் இலங்கையை பற்றியே உள்ளன. இது தமிழ் வீக்கிப்பீடியாவுக்கு நல்லதன்று. மற்ற பயனர் கருத்தை அறிய விரும்புகிறேன். --Daniel pandian 14:32, 20 பெப்ரவரி 2009 (UTC)
- இலங்கைச் செய்திகள் அதிக அளவில் இருப்பது நடுநிலையை மீறும் செயலாக எனக்குத் தெரியவில்லை. குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் அதிகமாக நடக்கும் போது அது குறித்து அதிக விடயங்கள் இடம் பெறுவது இயல்புதான். அது மட்டுமன்றி இந்தியத் தமிழர்களும் இது குறித்து அறிய விரும்புவார்கள் என்று எண்ணுகிறேன். ஆனாலும், எப்பொழுதும் இது போல ஒரு பக்கத்துச் செய்திகள் இருந்தால் அது வரவேற்கத் தக்கது அல்ல. இவ்வாறான நிலையை மாற்றுவதற்கு ஒரு வழிதான் உண்டு. அதாவது, தமிழ் நாட்டுப் பயனர்கள் இன்னும் அதிக அளவில் ஈடுபாடு காட்டவேண்டும். சில காலங்களுக்கு முன்னர் தமிழ் விக்கிப்பீடியாவில் அதிக இலங்கைத் தமிழ் நடை கையாளப்படுவதாக ஒரு குறை இருந்தது. இப்பொழுது பல தமிழ் நாட்டுப் பயனர்கள் பங்களிப்பதாலும், உரையாடல்கள் மூலம் புரிந்துணர்வுகள் அதிகரித்திருப்பதனாலும் நிலை இப்பொழுது பெருமளவு திருந்தியுள்ளது. விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கும் பயனர்கள் பொதுவாகத் தங்களுக்கு நெருக்கமான விடங்களில் தான் பங்களிப்புச் செய்கிறார்கள். எனவே பல தரப்பட்ட விடயங்கள் இருக்கவேண்டின் பலதரப்பட்ட ஆர்வங்களைக் கொண்ட பயனர்களின் பங்களிப்பு அவசியம். காலப்போக்கில் இது நடைபெறும் என்பதில் ஐயமில்லை. எனினும், பாண்டியன் நீங்கள் இவ்விடயத்தைச் சுட்டிக்காட்டியது நல்லதே. பயனர்கள் கவனிப்பார்கள் என எண்ணுகிறேன். மயூரநாதன் 15:02, 20 பெப்ரவரி 2009 (UTC)
- இலங்கை தொடர்பான செய்திகள் சற்று அதிகமாக இருப்பதும் நடுநிலைக்கும் ஏதும் தொடர்பு இல்லை என்பது என் கருத்து. தற்போதய காலகட்டத்தில் இலங்கையில் அதிகமான நிகழ்வுகள் நடப்பதால், அப்படி தோன்றியிருக்க வாய்ப்பு இருக்கலாம். மேலும் இந்தியா அல்லது உலகின் வேறு இடங்களை பற்றிய செய்திகள் சேர்ப்பு மிகவும் குறைவு என்பதும் ஓர் காரணமாக இருக்கலாம். இவ்வேலையில் இலங்கை செய்திகளுக்கு ஈடான வேறு நாடுகளின் நடப்புகளை பற்றிய செய்திகளை சேர்க்க வேண்டியது நம் அனைவரின் கடமை. இந்தியாவை பற்றிய செய்திகள் சேர்க்கப்படின் அது அரசியல் தொடர்பான மிகவும் கீழ்தரமான செய்திகள் தவிர வேறு ஏதும் இராது என எண்ணுகிறேன்.--கார்த்திக் 17:33, 20 பெப்ரவரி 2009 (UTC)
- இலங்கை தொடர்பான செய்திகள் அதிகமாக இருப்பது சரிதான். ஆனால் அது "இலங்கை சார்பு" என்று பொருட்படாது. ஆனால் இது இயல்பாக அமைவதாகவே நினைக்கிறேன். எங்கு செய்திக்குரிய பிரச்சினைகள் கூட நடக்கிறதோ, அவை செய்தியில் இடம் பெறும் (எ.கா பலஸ்தீனன் பிரச்சினை). கட்டுரைகள் இரண்டும் இலங்கை சம்பந்தமான இல்லை. உங்களுக்குத் தெரியுமா பகுதியிலும் அவை இல்லை. இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக தமிழர்கள் அறிய ஆவலாக இருப்பர் என்பதால், அதைப் பற்றி கூடிய தகவலை வழங்குவதில் தயக்கம் தேவை இல்லை என்று நினைக்கிறேன். எனினும் வேறு செய்திகளை நீங்களோ வேற பயனர்களோ (குறிப்பாகா அறிவியல் நுட்ப செய்திகள்) நிச்சியமாக வரவேற்போம். --Natkeeran 17:44, 20 பெப்ரவரி 2009 (UTC)
முதற்பக்க செய்திகள் அடிக்கடி இற்றைப்படுத்தப்பட வேண்டும். பலதரப்பட்ட செய்திகள் சேர்க்கப்பட வேண்டும். அவை ஆவணப்படுத்தல் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் இருக்க வேண்டும். இவற்றோடு பொருந்தும் வகையில் உள்ள செய்திகளை வார்ப்புரு பேச்சு:நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள் செய்திகள் பக்கத்தில் குறிப்பிட்டால், கண்டிபாக நிர்வாகிப் பயனர்கள் அவற்றை இற்றைப்படுத்துவார்கள். பல பயனர்களிடம் இருந்து கூடிய பங்களிப்புகள், ஆலோசனைகள் உதவும்--ரவி 03:35, 23 பெப்ரவரி 2009 (UTC)
நடுநிலைமை குறித்து கேள்வி எழுந்ததால் சிலவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.
- தற்போதைய உள்ள மற்ற எந்த ஒரு நடப்பு நிகழ்வைக் காட்டிலும், ஈழ நிகழ்வுகள் மிகுந்த செய்தி, வரலாற்று, ஆவணப்படுத்தல் முக்கியத்துவம் வாய்ந்தவை. உண்மையில், அதன் முக்கியத்துவத்துக்கு ஏற்ப இன்னும் முழுமையாக ஆவணப்படுத்தப்படவில்லை என்பதே சோகம்.
- systemic bias என்பார்கள். அதாவது பெருவாரியான பங்களிப்பாளர்களின் பொதுவான விருப்பங்கள் குறித்து அளவுக்கு அதிகமான தகவல்கள் சேர்வது. ஆங்கில விக்கிப்பீடியாவில் கணினி, இணையம், நுட்பம் குறித்த அதிகப்படியான, விரிவான கட்டுரைகளைக் காணலாம். ஏனெனில் பங்களிக்கும் பெரும்பாலான இளைய தலைமுறையினரின் பொது விருப்பத் தலைப்புகள் இவை. இது விக்கிப்பீடியாவில் அறியப்பட்ட ஒரு போக்கு. இதைத் தவிர்ப்பது குறித்த விவரங்களை Countering systemic bias பக்கத்தில் காணலாம்
- ஏதோ இலங்கைப் பங்களிப்பாளர்கள் அதிகம் இருப்பதால் இச்செய்திகள் அதிகம் எழுதப்படுவதாக கருத இயலாது. தமிழ் வலையுலகம், தமிழ் ஒளி, அச்சு ஊடகங்களிலும் ஈழப் பிரச்சினை தற்போது முதற்பக்கச் செய்தியாகத் தொடர்ந்து வருவதைக் காணலாம். அதே போன்ற ஒரு போக்கே இங்கும் இடம் பெறுகிறது என கருதலாம்.--ரவி 05:50, 24 பெப்ரவரி 2009 (UTC)
எமது wikibooks:ta:தமிழ் விக்கிப்பீடியா நூலுக்கு உதவும். --Natkeeran 17:48, 20 பெப்ரவரி 2009 (UTC)
இயன்றவரை இனிய தமிழில்
தொகு- http://www.varalaaru.com/Default.asp?articleid=791
- அருமையான கட்டுரை, வெளிப்பாடு
--Natkeeran 19:49, 20 பெப்ரவரி 2009 (UTC)
தமிழ் ஒலிப்புமுறைக்கு ஏற்ப நாடுகள் பெயர்களை மாற்றல்
தொகு...
- எல்லாவற்றையும் மாற்றுவதா.
- பொது வழக்கில் பெரும்பாலும் இல்லாதவற்றை மாற்றுவதா.
- கருத்து, ஆட்சோபனை..தெரிவுக்கவும்.--Natkeeran 20:48, 21 பெப்ரவரி 2009 (UTC)
- அனைத்து நாடுகளின் பெயர்களையும் தமிழ்ப் படுத்துவதில் எனக்கு உடன்பாடே. விக்கியில் தற்போதுள்ள நாடுகளின் பெயர்களை அகர வரிசைப்படி பட்டியலிட்டு அவற்றின் சரியான தமிழ்ப் பெயர்களையும் (பல விவாதங்களுக்கு உள்ளாகலாம்) பட்டியலிட்டு, பின்னர் மாற்றுவது நல்லது.--Kanags \பேச்சு 23:26, 21 பெப்ரவரி 2009 (UTC)
பின்வருமாறு எழுதுவது நல்லது என்பது எனது கருத்து.
- ஆப்கானிஸ்தான் -> "ஆப்கனிசுத்தான்"
- ஆஸ்திரேலியா -> "ஆசுத்திரேலியா"
மயூரநாதன் 16:55, 22 பெப்ரவரி 2009 (UTC)
- கனகு கூறுவதை ஏற்கின்றேன். மயூரநாதன் வழங்கும் பரிந்துரைகளை ஏற்கின்றேன். பொதுவாக தமிழ் இயல்புக்கும் ஏற்றவாறும், மூல மொழியில் உள்ளதை ஒட்டியும் பெயர்களிருப்பது நல்லது. ஆங்கில வழக்கை எல்லா இடங்களிலும் பின்பற்றுவது தேவை இல்லை. இது நாடுகளின் பெயர்களுக்கு மட்டுமல்லாமல் பிறவற்றுக்கும் பொருந்தும். --செல்வா 05:23, 23 பெப்ரவரி 2009 (UTC)
- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் நாடுகள்/நாடுகளின் தமிழ்ப் பெயர்கள்
- உங்கள் பரிந்துரைகள் சரியே. இக் கிழமை A, B ஆகியவற்றை தமிழ்ப் படுத்தலாம்!.. இது தொடர்பாக சில தயக்கங்கள் உண்டு. எ.கா ஜ என்பதை தமிழ்படுத்துவது அவசியமா?...ஜனவரி, ஜூன், ஜூலை என்று வேற இருக்கிறது. --Natkeeran 22:25, 23 பெப்ரவரி 2009 (UTC)
கொட்டை, விதை, பருப்பு, தானியம்
தொகுஎன்ன வித்தியாசம் ??--Natkeeran 01:37, 24 பெப்ரவரி 2009 (UTC)
- சுருக்கம் கருதி, ஈடான ஆங்கிலச் சொற்களைத் தந்துள்ளேன். ஒத்த ஆ.வி. கட்டுரையில் பார்க்கலாம். -- சுந்தர் \பேச்சு 07:52, 24 பெப்ரவரி 2009 (UTC)
- வித்து, விதை என்பது மரஞ்-செடி-கொடி முளைப்பதற்கு ஏதுவானது என்னும் பொருளில் ஆளப்படுவது. கொட்டை என்பது அதே பணியைச் செய்தாலும், அந்த வித்து கெட்டியாக உள்ளது என்பதனைக் குறிக்கின்றது. பருப்பு என்பதும் விதையின் பணியைச் செய்தாலும், அது உள்ளே பருத்து ஆனால் மெதுமையானதாக இருப்பது என்று பொருள் படும். தானியம் என்பது மாந்தர்கள் உணவாகப் பயன்படுத்தும் விதை என்று பொருள் கொள்ளுகின்றது. தமிழில், காழ் என்று ஓர் அருமையான சொல் உண்டு. அதுவும் உறுதியான, கெட்டியான என்னும் பொருள் கொண்டது, விதையைக் குறிக்கும் சொல். விரை என்றாலும் விதைதான்.--செல்வா 15:52, 24 பெப்ரவரி 2009 (UTC)
Category:Topical indexes தலைப்புகள் பட்டியல்
தொகுதலைப்புகள் பட்டியல் என்பது ஒரு விடயம் அல்லது துறை சார்பாக இருக்க வேண்டிய கட்டுரைத் தலைப்புகளின் பட்டியல் ஆகும். எ.கா [கனடா பற்றிய தலைப்புகள்], அல்லது en:Library of Congress Subject Headings. ஆங்கில விக்கிப்பீடியாவில் en:Category:Tropical indexes இவ்வாறு உள்ளது. தற்போது அவர்கள் en:Category:Outlines கூடிய ஒழுங்கமைப்புடன் செய்து வருகிறார்கள். இவ்வாறு தமிழ் விக்கிப்பீடியாவிலும் பகுப்பு:தலைப்புகள் பட்டியல்கள் என்ற ஒரு தாய்பகுப்பு உருவாக்கப்பட்டு, தலைப்புகள் பட்டியல்களின் பட்டியல் உள்ளவாறு 9 தாய்பகுப்புகளிலும் தலைப்புகள் பட்டியல் இடப்படும். கலைச்சொற்கள் அவ்வளவு பொருந்தவில்லை. இது பற்றி கருத்துக்கள், ஆட்சோபனைகளை பயனர்கள் முன்வைக்கலாம். நன்றி. --Natkeeran 23:13, 25 பெப்ரவரி 2009 (UTC)
கருத்திடல் பற்றி
தொகுசமீபத்தில் ஒரு பயனர் (217.28.2.87) பெயர் தராமல், குறிப்பிடத்தக்க எந்தப் பங்களிப்பும் செய்யாமல், கருத்து சொல்வதாக கூறி அமர்களம் செய்து வருகிறார். ஆதாரம் கேப்பது நன்று. ஆனால் ஒரு நபரைப் பற்றி விபரங்கள் தெரியாமல் முடிவுகள் சொல்வது எவ்வாறு. இப்படி நபர்களை அவமதிப்பு பண்பன்று. --Natkeeran 16:21, 28 பெப்ரவரி 2009 (UTC)
- இதையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம். கருத்து கூற வேண்டியனவற்றுக்கு மட்டும் மறுமொழி கூறிவிட்டு, தனிமனித தாக்குதல்களை பொருட்படுத்தாமல் மேற்கொண்டு செய்வதில் கவனம் செலுத்துவது நல்லது என்பது என் தனிக்கருத்து. நீங்களும் "கருத்து கந்தசாமி" போன்றவாறு அருள்கூர்ந்து பெயர்கள் சூட்டாமல் இருக்குமாறு வேண்டிக்கொள்கிறேன். தவறாக நினைத்துக்கொள்ளாதீர்கள், அவர்கள்தான் அப்படி செய்கிறார்கள் என்றால், நாம் அவர்களுக்கு ஈடாக ஏதும் செய்யத் தேவை இல்லை. சற்று பொறுமையாக கருத்தை மட்டுமே ஊன்றிக் கேட்டு ஆவன செய்வதில் கவனம் செலுத்துவோம். இது ஒரு நட்புடன் விடுக்கும் வேண்டுகோளே.--செல்வா 20:36, 3 மார்ச் 2009 (UTC)
- ஆமாம், செல்வா, சற்று வரம் மீறி சென்று விட்டேன். An eye for eye will blind the world. --Natkeeran 22:54, 3 மார்ச் 2009 (UTC)
விக்கி கூகுள் குழுமம்
தொகுதமிழ் விக்கிபீடியா, தமிழ் விக்கி கட்டுரை - தளங்களுக்கான கூகுள்குழுக்கள் உள்ளனவா? என முனைவர் நா. கணேசன் அவர்கள் கேட்டிருக்கிறார். இப்படி ஒன்று உள்ளதா? இல்லாவிட்டால் ஒன்று தொடங்கலாமா? --Kanags \பேச்சு 20:13, 3 மார்ச் 2009 (UTC)
- நா. கணேசன் என்னிடமும் கேட்டிருந்தார்.விக்கி குழுமம் ஒன்று ஏற்கனவே உள்ளது ஆனால் அது ஏனோ இப்பொழுது "இயங்கவில்லை". கூகுள் குழுமம்: http://groups.google.com/group/tamil_wikipedia?lnk= பயனர் ரவிதான் தொடங்கினார் ஆனால் இப்பொழுது அவராலேயே அதில் ஏதும் மாற்றங்கள் செய்ய இயலவில்லை. இதனை மீண்டும் "திறக்க" ஏதும் வழிகள் இருக்கும். நா. கணேசனுக்கும் நேரடியாக இதனைத் தெரிவித்து உள்ளேன்.--செல்வா 20:30, 3 மார்ச் 2009 (UTC)