விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு23


தமிழ் வலைப்பதிவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஆற்றக்கூடிய பங்களிப்புகள்

தொகு

தமிழ் வலைப்பதிவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஆற்றக்கூடிய பங்களிப்புகளை விளக்கி சூன் 13, 2009 அன்று சென்னை கிழக்குப் பதிப்பகத்தில் ஒரு கூட்டம் நடைபெறுகிறது. அனைத்து தமிழ் வலைப்பதிவர்கள் மற்றும் விக்கிப்பீடியர்களையும் வரவேற்கிறோம். சூன் 14, 2009 அன்று நடைபெறும் பயிற்சி பட்டறை குறித்தும் நினைவூட்ட விரும்புகிறேன். நன்றி--ரவி 16:33, 8 ஜூன் 2009 (UTC)

Google Translator toolkit

தொகு

Google Translator toolkit - தற்போதைய நிலையில் பெரிய அளவு உதவியாக இல்லை. ஆனால், ஆங்கில விக்கி கட்டுரையை அருகிலேயே வைத்துக் கொண்டு தொகுக்க உதவியாக இருக்கும்--ரவி 07:38, 10 ஜூன் 2009 (UTC)

த.வியின் தமிழ் நடை

தொகு

சில பொழுது அடையாளம் காட்டாத பயனர்கள் ஓரிருவர் வந்து தமிழ் நடையை, குறிப்பாக வடவெழுத்து ஒரீஇ எழுதும் முறையை, குறையாகச் சொல்லும்பொழுது "பொது ஊடகங்களை" சுட்டிக் காட்டுகிறார்கள். இதில் மூன்று கருத்துகளை நன்கு நினைவில் கொள்ளுவது வேண்டும் என நினைக்கிறேன். 1) தமிழ் விக்கிப்பீடியா ஒரு கிழமையில் (வாரத்தில்)ஏறத்தாழ 350,000 முறை பார்வையிடப் பெறுகின்றது. பதிவு செய்துள்ள பயன்ர்கள் 9200 உக்கும் கூட. 2) பொது ஊடகங்களில் எழுதுவோரும் சிலரே, மேலும் அவர்களைத் தட்டிக் கேட்பவர்கள் யாரும் இல்லை. "பொது ஊடக" இதழ்களிலும் பெரும்பாலும் கிரந்தம் தவிர்த்து எழுதும் இதழ்கள், நூல்கள் ஏராளமாக உண்டு. தமிங்கிலத்திலும், தமிழை நாளும் கெடுத்து எழுதும் இதழ்கள் மட்டுமே "பொது ஊடகங்கள்" இல்லை. 3) இது (த.வி) ஒரு கலைக்களஞ்சியம். இதில் நாம் கட்டுரை நடை, திருத்தமான எழுத்துநடை முதலிய சீர்தரங்கள் பேணுவது முறை, தேவை. த.வியும் ஒரு மாதத்தில் ஏறத்தாழ 1,500,000 (ஒன்றைரை மில்லியன்) முறை பார்க்கப்படும் தளம்தான். மேலும் இங்கு கலந்துரையாட, கருத்துரையாட, எதிர்க்கருத்துகள் கூற வசதிகள் உள்ளன. அறிவடிப்படையில் கருத்துரையாட வசதி உள்ளது. ஊடகங்களை நடத்துவோர், அவர்களின் சாய்வை தட்டிக் கேட்க முடியாததால் அவர்கள் தங்கள் கிரந்தச்--சார்புக் கொள்கையைத் தடையின்றி பரப்புகிறார்கள், விரிவாக்கிக்கொண்டே போகிறார்கள். தமிழ் மொழி இன்றளவும் தன் முறைப்பாடுகளால் வெற்றியுடன் நடைபோடும் மொழி. எனவே தமிழ் முறைகளைப் பேணுவதே நல்லது.--செல்வா 00:24, 11 ஜூன் 2009 (UTC)

பயனர் ‘செல்வா’ நினப்பது போல் ஊடகங்களில் தட்டிக் கேட்பார் யாருமில்லை என்பது உண்மையில்லை. முதலில் ‘தட்டிக்கேட்பவர்கள்’ ஊடகங்களை காசு கொடுத்து வாங்கும் நுகர்வோர். ஊடகங்கள் இடயே பலத்த போட்டி இருப்பதால், படிப்பவர்கள் புரிந்து கொள்ளும், விரும்பும் எழுத்து முறைகளை தான் ஊடகங்கள் அனுஷ்டிக்கிறன. ஊடகங்களின் விற்பனை குறைந்தால், அதன் முதலாளிகள் கட்டுரை ஆசிரியர்களை தட்டிக் கேட்டு எழுது முறையை மாற்றிவிடுவார்கள். ஆனால் விகி நடைதான் தட்டிக் கேடபவர் யாருமில்லை - என்னைப் போல் சில ஆர்வலர்களை தவிற. ஊடகங்கள் மட்டுமல்ல, தமிழ் பிளாகில் எழுதும் சாதாரண தமிழர்களும், இலக்கிய வாதிகளும் கிரந்த எழுத்துகளை உபயோகப்படுத்த தயங்குவதில்லை. --92.39.200.17 08:27, 11 ஜூன் 2009 (UTC)
ஆங்கில விகியில் New York Times, Washington Times, Times, Telegraph அல்லது மற்ற ஆங்கில சஞ்சிகைகளின் பயன்படுத்தப்படும் எழுத்துகளையோ, சொற்களையோ யாரும் ஆட்சேபிப்பதில்லை. யாரும் ஆங்கில இலக்கியகர்த்தாகக்ள் - சீரியஸ் எழுத்தாளர்களொ, ஜன ரஞ்சக எழுத்தாளர்களோ, பயன்படுத்தும் வார்த்தைகளை யாரும் ஆட்சேபிப்பதில்லை. தமிழ் விகியின் சாபக்கேடு - எந்த நுகர்வோராலும் தேர்ந்தெடுக்கப்படாத சிலர் ஊடகங்களையும், சாதாரண தமிழர்களையும் குற்றம் காணுகிறனர். "தமிழ் மொழி இன்றளவும் தன் முறைப்பாடுகளால் வெற்றியுடன் நடைபோடும் மொழி" என்பதும் செல்லாது. உதாரணமாக `தமிழ் இலக்கணம்` என்ற தலைப்பையே எடுத்தால் - ஆங்கில கட்டுரையும் http://en.wikipedia.org/wiki/Tamil_grammar , தமிழ் கட்டுரையும் ஒப்பிட்டு பாருங்கள். தமிழர்களுக்கு, தமிழரக்ளால்,தற்கால தமிழில், தமிழ் இலக்கணத்தைப் பற்றி எழுதமுடியவில்லை - `தொல்காப்பியர் காப்பாற்று படை`யாலும்--92.39.200.17 09:07, 11 ஜூன் 2009 (UTC)

செல்வம் தமிழ் போன்று ஒரு பயனர் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்து கருத்துக் கூறும் போது, அதை இதர விக்கிப்பீடியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ்ப் பெயர்களில் கிரந்தம் இருந்தால் அதை அப்படியே விடுவது என்பது ஒர் இடைப்பட்ட நிலைப்பாடாக தற்போது இருக்கிறது. கலைச்சொற்களிலும், இதர சொற்களை எழுத்துப்பெயர்ப்பு செய்யும் போது கிரந்தம் தவிர்க்கப்பட வேண்டும் என்று தற்போதைய பெரும்பான்மை தமிழ் விக்கிப்பீடிய பயனர்களிடம் கருத்து ஒற்றுமை உண்டு. இதற்கு தகுந்த மதிப்பு தர வேண்டும். சுந்தர் சுட்டிகாட்டியாது போன்று Troll (Internet) ஆக இருந்து, விசமத்தனமான உரையாடல்களை முன்வைப்பவர்களை அவ்வளவு பொருட்படுத்தாமல் இருப்பது நன்று. மேலும் கிரந்தம் எல்லா இடங்களிலிலும் பரவி இருக்கிறது என்று கூற முடியாது. இலங்கை வழக்கில் ஸ் இருந்தாலும், ஜ, ஹ ஷ எழுத்துக்களின் பயன்பாடு அரிது. எனவே கிரந்தைத்தை பொது வழக்கு என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அனைத்து தமிழர்களுக்கும் புரியும் தமிழ் எழுத்துக்களே பொது அடிப்படையாக அமையும். --Natkeeran 01:00, 11 ஜூன் 2009 (UTC)

பயனர் நேட்கீரன் சொல்வதுபோல் “கிரந்தம் தவிர்க்கப்பட வேண்டும் என்று தற்போதைய பெரும்பான்மை தமிழ் விக்கிப்பீடிய பயனர்களிடம் கருத்து ” என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை. விகி அடைப்படையே நாம் சொல்லுவதற்கு புறவய ஆதாரம் வேண்டும். இந்த ஆதாரங்களை கேட்டாலே Troll (Internet) என்ற குற்றம் சாட்டுவது தமிழ் விகியின் வளர்சியின்மை காட்டுகிறது. மேலும் விகி நியதிகளே விகி சொந்த அபிப்பிராயங்களை வெளியிடும் தடம் இல்லை என உறுதியாக சொல்கிறது. பயனர்கள் ‘செல்வா’, ‘சுந்தர்’, ’நட்கீரன்’ சொல்வது சொந்த அபிப்பிராயங்கள்தான். --92.39.200.17 08:27, 11 ஜூன் 2009 (UTC)


//முதலில் ‘தட்டிக்கேட்பவர்கள்’ ஊடகங்களை காசு கொடுத்து வாங்கும் நுகர்வோர். //

ஆமாம், அவர்கள் தட்டிக் கேட்டதால் தான் நடுப்பக்கத் தொப்புள் படங்கள், இலவச Mixi grinder, தமிங்கில நடை ஆகியவற்றைத் தருகிறார்கள்--ரவி 12:53, 11 ஜூன் 2009 (UTC)

காலத்திற்கேற்றல் போல், ஊடகங்கள் விளம்பரங்களை மாற்றுகிரன. இது எழுத்து சம்பந்தப் பட்ட உரையே தவிற, அறம் பற்றிய விவாதம் அல்ல. மிக்ஸி கிரைண்டருக்கு தமிழ் சொல் தெரியாதவர், ஆங்கிலத்தில்தான் எழுதுபவர், எழுத்து சர்ச்சைகளை சமூக அறப்பிறழ்வாக பார்ப்பவர் தமிழ் நடையை பற்றிய உபதேசம் செய்வது நிச்சயம் சாபக்கேடுதான்--92.39.200.17 13:03, 11 ஜூன் 2009 (UTC)

நான் இங்கு இத்தலைப்பில் இட்டது, இவற்றை நாம் கருத்தில் கொள்ளவேண்டும் என்று நான் நினைத்ததால். பெரிதாக கருத்தாட இடவில்லை, விரும்பவும் இல்லை. பயனர் 92.39.200.17 அவர்களே, நீங்கள் வேண்டுமென்றே விடாது விக்கிப்பீடியாவை விகி எழுதுகிறீர்கள் அதன் தமிழ் ஒலிப்பு vigi என்பதை உணராத நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் வழங்கும் எழுத்துகளைப் பற்றி புரிந்துகொள்ளாமல் பேசுவது வியப்பில்லை. யாருக்கும் எழுத்துப்பிழைகள் நேரும்தான் ஆனால் தவிர என்பதைத் தவிற என்று விடாமல் எழுதுகிறீர்கள். இப்படியே வலிந்து தவறுதலாக எழுதினால் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுத்துபிழைகள் அளவிறந்து கூடிவிடும். எனவே, அருள்கூர்ந்து பிழையின்றி எழுதுக (தட்டச்சுப்பிழை விழுவதைச் சொல்லவில்லை, அவற்றையும் பார்க்கும்பொழுது திருத்தவேண்டும்). தமிழில் எழுதும்பொழுது தமிழ்முறைகளைப் பேணி எழுதுதல் என்பது நேர்மையான கொள்கை. தமிழ் வெற்றியுடன் இன்றும் வாழும் முதுபெரும் மொழி அதற்கு இருக்கும் இவ்வுரிமையைப் போற்றுவது இயல்பே. இக் கலைக்களஞ்சியம் ஒரு சீர்ய பணி. இதில் எளிய தமிழில் அதே நேரத்தில் நல்ல தமிழில், தெளிவான நடையில் கருத்தாழம் மிக்க குறுங்கட்டுரைகளும் நெடுங்கட்டுரைகளும் எழுதத் தம் பொன்னான நேரத்தைப் பலர் செலவிட்டு எழுதுகிறார்கள். உங்களை அன்புடன் நான் வேண்டிக்கொள்வது என்னவென்றால், உங்களுக்குப் பிடித்தவாறு கிரந்தம் கலந்தும், உங்களுக்குப் பிடித்த சொற்களால் கோத்தும் எழுதுங்கள். கிரந்தம் தவிர்த்து எழுதுவதிலும், நல்ல தமிழ்ச்சொற்களால் எழுதுவதிலும் நேர்மையான, உண்மையான நன்மைகள் உள்ளன. இதனை நீங்கள் புரிந்துகொள்ளாவிடில் போகட்டும், விட்டுவிடுங்கள். ஆனால் இடையூறாக இல்லாமல் இருக்கலாம் அல்லவா? பொதுமக்கள் படிப்பதற்காக கதைகள் முதலிய பொழுதுபோக்குகளுக்காகப் பயன்படும் ஊடகமொழி வேறு பாடநூல்கள் மொழி வேறு, கலைக்களஞ்சிய மொழி வேறு, அறிவியல் ஆய்விதழ் மொழி வேறு. எது எப்படியாயினும் இங்கு நல்ல தமிழில் இருக்க வேண்டும் என்று எழுதுவது தவறாகாது. இவற்றைப் புரிந்துகொள்வதும் புரிந்துகொள்ளாததும் உங்கள் பாடு. மேலும் உரையாட விரும்பவில்லை. --செல்வா 14:07, 11 ஜூன் 2009 (UTC)


"பொதுமக்கள் படிப்பதற்காக கதைகள் முதலிய பொழுதுபோக்குகளுக்காகப் பயன்படும் ஊடகமொழி வேறு பாடநூல்கள் மொழி வேறு, கலைக்களஞ்சிய மொழி வேறு, அறிவியல் ஆய்விதழ் மொழி வேறு"

வேறு மொழி என்று, தமிழர்களுக்கு புரியாததை எழுதக்கூடாது.நீஙக்ள் சொல்வது மொழி சாயல் (http://en.wikipedia.org/wiki/Register_(linguistics)) மொழி ரெஜிஸ்டர்கள் வேறு என்றால், பயன்படுத்தும் எழுத்துக்களே மாறாது. உதாரணமாக ஆங்கிலத்தில் நீதித் துறையிலும், ஊடகத் துறையிலும் மொழி நடை வேறுபாடாக இருக்கும். ஆனால் 26 ஆங்கில எழுத்துகளும் தடையின்றி உபயோகப் படுத்த படுகின்றன. யாரும் நீதிதுறையில் 25 ஆங்கில எழுத்துகள் தான் உபயோகிக்க வேண்டும் என்ற அபத்தத்தை முன்வைப்பதில்லை. ஆனால் நீங்கள் சொல்வது அப்ப்டித் தான் உள்ளது. தி ஹிண்டு தவறு என்கிறீகள். லக்ஷக் கணக்கான தமிழர்கள் அப்படித் தான் எழுதுகிறார்கள். கிரந்த எழுத்தை தவிர்ப்பதற்க்கு புது புது ஆர்குமெண்டுகளை கொண்டுவருகிறீகளே தவிர, ஆக்கம், நியாயம், திரம் இவற்றை கவனிப்பதில்லை.--92.39.200.17 14:43, 11 ஜூன் 2009 (UTC)

தமிழ் எழுத்துகளில்தான் எழுதுகிறோம். --செல்வா 15:39, 11 ஜூன் 2009 (UTC)
செல்வா, சொல்வது ஒன்று, செய்வது ஒன்று. ஒரு பக்கம் “உங்களுக்குப் பிடித்தவாறு கிரந்தம் கலந்தும், உங்களுக்குப் பிடித்த சொற்களால் கோத்தும் எழுதுங்கள்” என் சொல்கிறார். மறு பக்கம் த ஹிண்டு என்பதை இண்டு என மாற்றுகிரார். தமிழ் எழுத்துகள் என்ன என்று `தமிழ் எழுத்துமுறை` என்ற தமிழ்விக்கி கட்டுரையே உள்ளது (http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81). அங்கு சென்று, எது தமிழ் எழுத்து என்று அவர் உறுதி செய்வாராக.--92.39.200.17 11:47, 12 ஜூன் 2009 (UTC)
இந்து என்று எழுதும் பழக்கம் இருந்தால் அப்படி எழுதுவதை முதன்மைப் படுத்துகிறோம். நீங்கள் 4 சொற்களில் 3 சொற்கள் வேற்றுமொழிச்சொற்களாக, அளவிறந்து கிரந்தம் கலந்து எழுதினால், கட்டாயம் திருத்த வேண்டியிருக்கும். நீங்கள் மேலே "லக்ஷக் கணக்கான" என்று எழுதுவதை "இலட்சக் கணக்கான" என்று திருத்துவது முறை. கூகுள் தேடலில் பெறும் புள்ளிக் குறிப்புகளை எடுத்துக்கொள்வதில்லை, ஆனால் நீங்கள் "லக்ஷம்" என்று தேடிப்பாருங்கள் 1540 பக்கங்கள் வருகின்றன. ஆனால் இலடசம் என்று இட்டுத்தேடிப்பாருங்கள் 95,600 பக்கங்கள் வருகின்றன. "லட்சம்" என்று தேடிப்பாருங்கள் 421,000 பக்கங்கள் வருகின்றன. கூகுளில் உள்ளதால் ஏற்க முடியாது. ஆனால் வலுவானதாகக் கொள்ளமுடியாத ஒரு எடுத்துக்காட்டு. அதே போல ஹிந்து என்பது 67,100 பக்கங்களைச் சுட்டுகின்றது ஆனால் இந்து 561,000 பக்கங்களைச் சுட்டுகின்றது. இவ்வெண்ணிக்கைகள் முக்கியம் இல்லை. எது சரி என்று தேர்ந்து எழுதுவதே இங்கு முக்கியம். கூடியமட்டிலும் குறைவாக கிரந்தத்தைப் பயன்படுத்துவது நல்லது என்னும் பரிந்துரையில் எழுதுகிறோம். கிரந்த ஒலிப்புகள் உண்மையிலேயே தமிழ் இயல்புக்கு பொருந்தாமலும், தமிழர் கணிப்பில் கூடுதலான மூச்சு வீணாகும் முறையிலும் இருப்பதால் கூடியமட்டிலும் சேர்ப்பதில்லை. தமிழில் மெய்யொலிக்கூட்டங்களும் மிகக்குறைவு. இவை எல்லாம் நேர்மையான கருத்துகள் இதில் உள்ள உண்மைகளை உணராமல் திணிப்பது ஒன்றே குறியாக உள்ள ஒருசிலரால் பல தமிழர்கள் அலைக்கழிக்கப்படுகின்றார்கள். உங்களுக்கு எவ்வளவோ பேர் பொறுமையாக மறுமொழி தந்துள்ளார்கள். அருள்கூர்ந்து ஏதும் பயனுடையதாகச் செய்யுங்களேன் ஐயா? --செல்வா 12:53, 12 ஜூன் 2009 (UTC)
"பொறுமையாக மறுமொழி தந்துள்ளார்கள்" என்று எனக்கு ஏதோ உபகாரமும், சலுகையும் காட்டுகிறீர்கள் போல சொல்கிறீகள். மறுமொழி சொல்வது உங்கள் தீர்ப்பு. தவறுகளையும், முரண்பாடுகலையும் விக்கியில் சுட்டிக் காண்பது சரியானது - அதைத் தான் செய்கிறேன். நீங்கள் எத்தனை முறை கிரந்த எழுத்துக்களை அகற்றி, வேரொரு எழுத்து போட்டிருக்கிறிர்கள் - அதன் பெயர் திணிப்பு. நான் இதுவரை மற்றவர்கள் எழுத்தில் எதையும் மாற்றியதில்லை. தகவல் பிழை அல்லது இலக்கண்ப் பிழைகளை தவிற, மற்றவற்றை மாற்றுவது தவறு. சமீபத்தில் நீங்கள் ஹோராஸ் என்பதை ஓராசு என மாற்றினீர்கள். அது திணிப்பிற்கு நல்ல தாரணம். நான் இஸ்லாம் என எழுதினேன். ஒருவர் அதை இசுலாம் என மாற்றியுள்ளர். இந்த மாற்று எழுத்து திணிப்புகள் தேவையற்றவை. விக்கியின் கொள்கைகளுக்கு மாற்றாக ஒருவர் , பயன்ர் பக்கத்தை வணிக பிரசாரமாக மாற்றினார். அதை எடுத்துக் காட்டி ஓரளவு மாற்றினேன். அதெல்லாம் திணிப்பு அல்ல; நீங்கள் செய்யும் எழுத்து மாற்றம் தான் தணிப்பு. மேலும் “தமிழர் கணிப்பில் கூடுதலான மூச்சு வீணாகும் முறையிலும் ” என்பது ஆதாரமற்று. நீங்கள் தமிழர்களுக்கு ஒரு spokeman இல்லை என்பதை நினைவு வைத்துக் கொள்ளவும். நீங்கள் `என் மூச்சு வீணாகிரது` என உங்கலைப் பற்றிதான் சொல்ல முடியுமே தவிற, ”தமிழர்கள் மூச்சு” பற்றி சொல்லுவது அபத்தம்.--92.39.200.17 13:24, 12 ஜூன் 2009 (UTC)
தமிழ் விக்னசரியே லக்ஷம் என்ற வார்த்தையை கொடுத்துள்ளது. உங்கள் பிரச்சினை புரியவில்லை--92.39.200.17 13:35, 12 ஜூன் 2009 (UTC)

திரு. 92.39.200.1யை தடைசெய்தல்

தொகு

92.39.200.17 என்ற எண்ணுடைய இணைப்பில் இருந்து பங்களிக்கும் (இவரின் பங்களிப்புகள் !) இந்த நண்பர் நம்மில் பலருடன் (என்னிடம் ஆரம்பித்து) வீண் விவாதங்கள் செய்து வருகிறார். இவருடைய கேள்விகளுக்கு விடையளித்து நம்மிள் பலர் பல மணித்துளிகளை வீண்செய்துள்ளோம் என நினைக்கிறேன். இவருடைய வாதங்கள் அனைத்தும் த.விக்கு வளம் சேர்ப்பது போல் தெரியவில்லை!!! மேலும் இவருடைய உள்மனச் சிந்தனைய புரிந்து கொள்ளவும் நம்மால் இயலவில்லை என நினைக்கிறேன்? ஆதலாம் இப்பயனரை தடை செய்ய நான் பரிந்துரைக்கிறேன். --கார்த்திக் 14:56, 11 ஜூன் 2009 (UTC)

முதல் கட்டமாக வளர்முகப் பின்னூட்டங்களைத் தவிர மற்றவற்றைக் கண்டு கொள்ளாமல் இருக்கலாம், பேச்சுப்பக்கப் பண்பாடுகளை மீறினால் (இன்னும் மீறவில்லை என நினைக்கிறேன்) அந்தத் தொகுப்புகளை நீக்கலாம், கட்டுரைகளுக்கு ஊறு விளைவித்தாலோ, தொடர்ந்து பணிகளுக்கு இடைஞ்சல் செய்தாலோ மட்டும் தடை செய்யலாம். இப்போது தேவையில்லை. -- சுந்தர் \பேச்சு 15:27, 11 ஜூன் 2009 (UTC)
தடை செய்ய வேண்டியதில்லை. கட்டாயம் பணிகளுக்கு இடைஞ்சல் செய்கிறார். ஆனாலும் தடை செய்ய வேண்டியதில்லை. மறுமொழி தருவதை தவிர்க்கலாம். --செல்வா 15:35, 11 ஜூன் 2009 (UTC)


கட்டுரையை திரும்பப்பெறுகின்றேன்.

தொகு

விக்கிப்பீடியா நிர்வாகிகளுக்கு,
இங்கே சில நாட்களாக திரு.செல்வம் போன்ற பயணர்கள் இசுலாம் பற்றி பதிவிடும் கருத்துக்கள் என் போன்ற இசுலாமிய பயணர்களின் மனதை புண்படுத்துகின்றது. அவர் இங்கு கேட்ட, கட்டுரைக்கு சற்றும் பொருந்தாத பல கேள்விகளுக்கு (இங்கு) பதிலளித்த பின்பும் கூட மேலும் மேலும் இசுலாம் பற்றிய உண்மைக்கு புறம்பான கருத்துகளை பதிவேற்றி வருகின்றார். அமைதி காப்பது என்பதையும் தாண்டி இசுலாம் வன்முறையை தூண்டுகின்றது, பெண்னடிமை தனத்தை ஊக்குவிக்கிறது, போன்றவற்றை கூறுவதோடு மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் சுமார் 2 பில்லியன் மக்களால் மதிக்கப்படும் முகம்மது நபியை போர்களில் பல மக்களை கொன்ற கொலைகாரன் எனவும், பெண்னடிமையை போதிப்பவர் எனவும் மிகவும் கீழ்த்தரமாக வர்ணிக்கின்றார். மேலும் இன்னும் ஒரு படி மேலேயே போய் என்னதான் கடவுளாக இருந்தாலும் இவரை பெற்றவரும் ஒரு பெண்தானே என்று உட்சகதியில் திட்டவும் செய்கின்றார். இவை அனைத்துமே நாகரீகமற்றவை என்பதையும் தாண்டி இந்த கட்டுரைக்கு தேவையில்லாதவை. இப்பொழுது கடைசியாக 3 மாதங்களுக்கு முன்பு எழுதப்பட்டு பல பயணர்களால் திருத்தப்பட்ட கட்டுரையை ஆதாரமற்ற தகவல்களை கொண்ட கட்டுரை என்று பகுக்கிறார். ஆனால் அவர் மேற்க்கோல் கேட்ட அந்த வரிக்கு முன்னமே நான் இங்கு விளக்கம் கொடுத்துவிட்டேன். இன்னும் ஒரு முறை மீண்டும் வேண்டுமானால் தருகின்றேன்.

அவர் விளக்கம் கேட்பது எந்த நிலையிலும் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லாதீர்கல் என முகம்மது நபி கூறியது. இந்த வரிக்கான விளக்கம்..,
முகம்மது நபி தனது சொந்த ஊரான மெக்கா நகரில் இசுலாம் பற்றி போதிக்க ஆரம்பிக்கின்றார். அவரது போதனையில் கவரப்பட்டு கொஞ்சம் மக்களும் இசுலாமை ஏற்றுக்கொள்கின்றனர். இது பிடிக்காத மற்ற அரபிகள், முகம்மது நபியையும் அவரது தோழர்களையும் கொல்லுவதற்கு திட்டமிடுகின்றனர். இதை அறிந்த முகம்மது நபி, தனது தோழர்களை சிறு சிறு குழுவாக பிரித்து மதீனா நகருக்கு அனுப்பிவிடுகின்றார். இறுதியில் தானும் மெக்கா நகரில் இருந்து மதீனா நகருக்கு தப்பிச்செல்கின்றார். மதீனா நகரத்து மக்களும் முகம்மது நபியையும், இசுலாத்தையும் ஒருங்கே ஏற்றுக்கொள்கின்றனர்.
இதனால் கோபமடையும் மெக்கா நகரத்து அரபிகள் முகம்மது நபியையும், அவர்களது தோழர்களையும் மட்டும் அல்லாது அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த மதீனா நகரத்து மக்களையும் நிர்மூலமாக்கும் வெறியில் மதீனா நகரின் மீது போர்த்தொடுக்கின்றனர். இவ்வாறான ஒரு இக்கட்டான நிலையில் தன்னை நம்பிய மக்களை காக்கும் பொருட்டு முகம்மது நபி போர்க்களம் புக முடிவெடுக்கின்றார். இப்பொழுது முகம்மது நபியின் முன் இருக்கும் ஒரு பிரட்சணை அன்றைய அரபிகளிடம் இருந்த போர்க்குணம். போர் என்று வந்துவிட்டால் எதிரில் இருப்பது ஆனா, பெண்ணா குழந்தைகளா அல்லது முதியவர்களா என பார்க்காமல் அனைவரையும் கொன்று குவிப்பது அவர்களின் பரம்பரை குணம். இந்த போரில் தோற்றால் இசுலாம் என்கிற மதமே முற்றிலும் அழிந்துவிடும் என்ற இக்கட்டு வேறு இருந்ததால் அவர்களின் போர்க்குணம் இன்னும் அதிகமாக இருக்கும் என நபி அவர்கள் எண்ணியதால், அந்த மக்களை அழைத்து ஒரு முறையான போர் விதியை போதித்தார். அதில் முதலாவதாக வருவதுதான் இந்த பிரட்சணக்குரிய வரி. அதாவது போரில் உங்களை தாக்கவரும் போர் வீரர்களை மட்டுமே நீங்கள் பதிலுக்கு தாக்கவேண்டும். மாறாக அவர்களை உற்சாகப்படுத்தவும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவம் பார்க்கவும், சிதறிய போர் கருவிகளை சேகரித்து கொடுக்கவும் அவர்களுடன் வரும் பெண்களையோ, குழந்தைகளையோ, வயதானவர்களையோ கொல்லக்கூடாது (அவர்களும் ஆயுதம் ஏந்தி உங்களை தாக்க வந்த பொழுதும் கூட)என்று கூறினார். இது மனித நேயம் இல்லையா?. (முகம்மது நபியின் வகுத்த இந்த போர்முறைதான் இன்றளவும் இசுலாமிய போர்முறையாக இருக்கின்றது. மேற்கோல் கேட்போர் (இங்கு)சென்று பார்க்கவும்.
இவ்வாறு போரில் கூட அப்பாவி மக்களை கொல்லக்கூடாது, என கூறிய முகம்மது நபியின் பெயரால், இன்று சில தீவிரவாத அமைப்புகள் வெடிகுண்டுகளை வைத்து அப்பாவி மக்களை கொல்வதை இசுலாம் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளாது என்று வன்முறைக்கு எதிராக நான் கூறிய இந்த கருத்தை தான் செல்வம் வன்முறையை தூண்டுகின்றது என கூறுகின்றார்.
இந்த ஒன்றை தவிர இந்த கட்டுரை சம்பந்தமான வார்த்தைகள் அவரது வாதத்தில் வேறு இல்லை.ஒருவரை பற்றி விமர்சனம் செய்ய அனைவருக்கும் உரிமை இல்லாமல் இல்லை. ஆனால் இது போன்ற சமய சம்பந்தமான விமர்சனங்கள் மற்றவர்களை மிகவும் புண்படுத்தக்கூடியது. வாத முறையில் பார்க்காமல் உளவியல் ரீதியில் பார்த்தால் இதை புரிந்துகொள்ள முடியும். என்னைப்பொருத்தவரை தன் மதத்தை போலவே மற்ற மதங்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுப்பவரே உண்மையான நடுநிலைவாதி. நான் உண்மையான நடுநிலைவாதியே.

இங்கே திரு. செல்வம் அவர்களின் கட்டுரைகளை விட என்னை அதிகம் பாதித்தது உங்களை போன்ற நிர்வாகிகளின் மௌனமே. இவ்வாறான நாகரீகமற்ற கருத்துகளை ஒருவர் பதியும் பொழுதும் மௌனம் காக்கும் உங்கள் நிலை எனக்கு உணர்த்தியது ஒன்றை மட்டுமே. தமிழ் விக்கிக்கு தேவை நடுநிலை கட்டுரைகள் அல்ல. அதிகம் பங்களிக்கும் பயனரே. உங்களால் அவரை தடுக்கமுடியவில்லை என்றாலும், குறைந்தபட்சம் சர்ச்சைக்குரிய பதிகைகளை நீக்கியிருக்கலாம். ஆனால் நீங்கள் அவ்வாறு செய்யவில்லை. தமிழ் விக்கி பற்றி மிகவும் உயரிய எண்ணத்துடன் வந்த நான், இப்பொழுது ஒருவிதமான மன அழுத்தத்துடன் இதை விட்டு செல்கிறேன். கொஞ்சம் வெறுப்பும், கொஞ்சம் கோபமும், கொஞ்சம் பயமும் சேர்ந்துதான் இவ்வாறான முடிவை நோக்கி என்னை செலுத்தின. காரணம் இசுலாம் என்ற அடிப்படை கட்டுரைக்கே சமய தீவிரவாதி என்று இகழப் பட்டிருக்கும் நான் இன்னும் எழுத நினைத்த அல்-அக்ஸா மசூதி, பாலஸ்தீனீய பிரட்சணை, சிலுவைப் போர்கள், ஜிகாத் போன்றவற்றை பற்றி எழுதினால் இன்னும் என்னென்ன பெயர்களை பெறுவேனோ? பயமாக உள்ளது. 26 வயது... அழகான பெங்களூர் வாழ்க்கை.... நிம்மதியான வேலை.... மகிழ்க்சியாக இருந்துவிட்டு போகலாம் அல்லவா? இந்த தலத்தில், மதரீதியான எதிர்ப்பார்புகள் தவறு என்றாலும், மதரீதியான பாதுகாப்புகள் இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
மேலும் இதை விட்டு செல்வதற்க்கு முன்பு சர்ச்சைக்குரிய எனது கட்டுரையை திரும்பப்பெறுகின்றேன். ஏனென்றால் என்னைப்போன்ற மூடனின் , சமய தீவிரவாதியின் வன்முறையை தூண்டக்கூடிய, பிரட்சார நெடியுடன் கூடிய இந்த கட்டுரை இங்கு இருப்பது அழகல்ல. இதர்க்கு பதில் நீங்கள் திரு. செல்வம் போன்ற சமயசார்பற்றவர்களை கொண்டு, அவர்களின் கருத்துப் பிரகாரமே இசுலாம் என்பது கி.பி ஏழாம் நூற்றாண்டில் பல போர்களில் ஈடுபட்டு பலரை கொன்ற முகம்மது என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. வன்முறையை பெரிதும் வரவேற்க்கும் இந்த மதம் பெண்னடிமை தனத்தையும் வளர்க்கிறது என்பது போன்று நடுநிலைமையுடன் எழுதிக்கொள்ளுங்கள். மிகவும் மகிழ்ச்சி.(விக்கியின் காப்புரிமை சட்டத்தின் படி எனது இந்த செயல் தவறு என்றாலும், எனது மதத்தை பற்றிய அவதூறுகலை பரப்ப நான் எழுதிய கட்டுரையே வழிவகுக்க கூடாது என்பதனால் இதை செய்கிறேன். எனது மனநிலையை புரிந்துகொள்ளவும். மன்னிக்கவும். மேலும் பழைய கட்டுரையையே இங்கு மீண்டும் பதிவேற்றி இருக்கின்றேன்.)

இறுதியாக என்னை இங்கு முதன் முதலில் வரவேற்றவர்கலான சுந்தர் அண்ணாவிற்க்கும், கணக் அண்ணாவிற்க்கும் மற்றும் என்னுடைய கட்டுரைகளை பாராட்டி என்னை அதிகம் எழுத தூண்டிய மற்ற பயணர்களுக்கும் எனது நன்றி!!
--arafat 13:29, 12 ஜூன் 2009 (UTC)

arafat, விக்கி பங்களிப்பாளர்கள், நிருவாகிகள் அனைவருமே தங்கள் முழுநேரப் பணிச்சுமைக்கு இடையேயே பங்களிக்கிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு, உங்கள் முடிவை சற்று ஒத்திப் போட வேண்டுகிறேன். தங்கள் தொலைப்பேசி எண் தந்தால் அழைத்துப் பேசவும் விரும்புகிறேன். என் தொலைப்பேசி எண் 99431 68304. கனகு, சுந்தர், கார்த்திக், நான் உட்பட பல நிருவாகிகளும் இது விதயத்தில் உரையாடியதைக் குறிப்பிட விரும்புகிறேன். இரு பக்கமும் உணர்வு வயப்பட்ட நிலை தணிந்து நிதானமாக உரையாட வேண்டும் என்ற காரணத்துக்காகவும் மேலும் தலையிடாமல் இருந்தேன். நன்றி--ரவி 14:12, 12 ஜூன் 2009 (UTC)

ஆம், அராபத், நீங்கள் உங்கள் முடிவைக் கைவிட்டு, மீண்டும் தொகுக்க முன் வர வேண்டும். நடுநிலைச் சிக்கல்கள் இருந்தாலும் தேவையான சான்றுகளைக் கொண்டு தீர்க்கலாம். நாங்கள் அனைவரும் அதில் உங்களுக்கு உதவுவோம். -- சுந்தர் \பேச்சு 15:44, 12 ஜூன் 2009 (UTC)
அரபாத், ஒரு பயனர் அவர் நினைத்தையெல்லாம் எழுதுகிறார். அவருக்கு இசுலாம் பற்றி தெரிந்தது அவ்வளவே. பொது கலைக்கழஞ்சியத்தில் நாம் எழுதும்போல் சிலர் வந்து வம்பு வளர்ப்பது சாதாரணமாக நடக்கக் கூடியதே. நாம் ஏன் இதற்காக ஓட வேண்டும்?. தவறுதலாக வாதாடும் அவரே இங்கு இருக்கிறார். நீங்கள் ஏன் வெளியேற வேண்டும்?. நீங்கள் வெளியேறினால் அது ஒரு கெட்ட முன்னுதாரணத்தை இது போன்ற பயனர்களுக்கு கொடுக்கும். அதிகாரிகளும் பல தடவை அவரை சொல்லி சலித்து விட்டனர் போலும். நான் முன்னமே உங்களை கேட்டு கொண்டதுக்கு இணங்க பல நல்ல கட்டுரைகளை தாங்கள் எழுத வேண்டும். தயவு செய்து தங்கள் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள்.--Daniel pandian 19:56, 12 ஜூன் 2009 (UTC)
அரபத் ரியாத், சி'ஃகாத்' என்பதன் உண்மையான பொருள் எல்லோருக்குள்ளும் நிகழும் உட்போராட்டம் என்பர். நல்லது-கெட்டது எவை, நல்வழி-அல்வழி எவை, எது உண்மை எது பொய் என்று இடையறாது நிகழும் உள்போராட்டம் பல நேரங்களில் வெளியுலகிலும் பல்வேறு விதமாக உருவெடுக்கின்றது. பகவத் கீதை சொல்வதும் இது போன்ற போராட்டம்தான் என்பர். அறம், மெய்யியல் தேடுதல்களிலும் நடைமுறையிலும் இப்படி எதிர்-எதிர் கருத்துகள் அறிவு,உணர்வு ஓட்டங்கள் நிகழும்தான். விட்டு ஓடமுடியாது (ஓடினாலும் வேறு இடத்தில் வேறு விதமாகக் கவ்வும் :) ). அருள்கூர்ந்து, தளர்வடையாமல், எப்படி அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்பதை தேர்ந்து நல்ல கட்டுரைகள் ஆக்க உதவ வேண்டுகிறேன். பொதுவாக சரியான நடுநிலைப் பதிவாக (இருபக்கக் கருத்துகளையும் அல்லது பல பக்கக் கருத்துகளையும்) கூறி நல்ல தகவல்கள் தரும் கட்டுரைகளாக ஆக்க உதவுங்கள். உலகில் மிகப்பெரிய மதங்களில் ஒன்றாகிய இசுலாம் பற்றி ஆயிரக்கணக்கான கட்டுரைகள் நடுநிலைமையுடன் செவ்வனே தமிழ் விக்கியில் இருக்க வேண்டும் என்பது என்போன்ற பலருடைய ஆவல். ஆக்க உழைப்பது நம் எல்லோருக்கும் கிடைக்கும் ஒரு பெரும் நல்வாய்ப்பு. நீங்கள் தொடர்ந்து ஆக்கம் நல்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.--செல்வா 21:52, 12 ஜூன் 2009 (UTC)

arafat உடன் தொலைப்பேசியில் பேசினேன். மற்ற விக்கிப்பீடியர்களின் நிலைப்பாடுகளைப் புரிந்து கொண்டிருக்கிறார். மீண்டும் பங்களிப்பதாகவும் தற்போது வேலைப்பளுவால் இயலவில்லை என்றும் தெரிவித்தார்--ரவி 13:26, 15 ஜூன் 2009 (UTC)

மீண்டும் தனிநபர் தாக்குதல்

தொகு

செல்வா, சுந்தர், ஒரு பயனரை வரவழைக்க இன்னொரு பயனரை குறை கூறியிருப்பது ஞாயமா? அவர் பயனரை வரவழைக்க நல்லெண்ணம் இருப்பதாகத் தெரிவில்லை. அவரை வரவழைக்கும் நல்ல நோக்கமா? தாங்களே பதில் கூற வேண்டும். அவரே இங்கிருக்கின்றார் என்றால் இவர் இங்கு சொந்தக்காரரா, தளத்தின் சொந்தக்காரர் இவரா? எல்லாம் தெரிந்தவர் என்பதால் என்னவேண்டுமென்றாலும், யாரை வேண்டுமானாலும் எழுதலாமா? தாக்கலாமா? சரியாக வாதிடுபவர் என்று அவரேக் பறைசாற்றிக்கொள்ளும் ஒருவர் இது மாதிரி எழுதுவாரா? இது தனி நபர் தாக்குதல். அங்கு தனி நபர் தாக்குதலா தொடுத்திருக்கின்றேன்? இதற்கு பதில் தர வேண்டும். இதற்கும் நான் மெளனமாக இருக்க வேண்டுமா? மூன்றாவது நபர் தலையிடுவது மாதிரி தலையிட்டு பிரச்சினையை பெரிதாக்க முயல்கின்றனர். தவறாக வாதிடுபவர் என்று குறை கூறுகின்றவர். சரியாக வாதிடுபவர் செய்யும் செயலா? எதிர் கருத்துக்கள் இங்கு வரும், கருத்துக்கள் வராமல் பொதுத்தளங்களில் கட்டுரை எப்படி எழுதமுடியும் என்று கூறியிருந்தால், நல்லெண்ணம். என் கட்டுரைகளிலும் வந்துள்ளது. என்று கூறியிருந்தால் நல்லெண்ணம். இவர் பாவம் என்னைத் தாக்க காரணம் தேடிக்கொண்டிருந்தார் போலிருக்கின்றது. இதை இங்கு கட்ட பஞ்சாயத்து என்று கூறுவார்கள். அதிகாரிகள் பல முறை கூறியும் இவர் இப்படித்தான் வாதிடுகின்றார் என்று இந்த அதிகாரி கூறுகின்றார்,சர்வாதிகாரி வாதாடுகின்றார் நன்றாக தெரிகின்றது இவர் யார் என்று. --செல்வம் தமிழ் 05:49, 13 ஜூன் 2009 (UTC)

செல்வம் தமிழ் அவர்களின் மேலுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தயவு செய்து யாரும் பதிலளித்து மேலும் மேலும் இப்பிரச்சினையைப் பெரிதாக்காதீர்கள் என்று தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \பேச்சு 07:13, 13 ஜூன் 2009 (UTC)

கனக் நான் ஏற்றுக் கொள்கின்றேன். நான் இசுலாமியரை, குரானைபற்றி பற்றி தவறாக கூறியது மாதிரி இங்கு உருவாக்கி காட்டப்படுகின்றது. என்க்கும் இசுலாமிய நண்பர்கள் நிறையப் பேர் உண்டு முகமது நபி கூறிய சில தத்துவங்கள அடங்கிய சிறு புத்தகங்கள் படித்திருக்கின்றேன்.

இதுதான் கடைசியாகத் தரும் தகவல். இது குறித்து மூன்றாம் நபரும் வேறு மாதிரி திரித்து கூறுகின்றார். தவறாக கூறியவரே இத்தளத்தில் தொடர்கின்றார்என்று கூறியிருக்கின்றார். இது என்ன வாசகம். அவருக்கு உண்மையில் பற்றே இல்லை. அகைகறையும் இல்லை. இங்கு சிண்டு முடிகின்ற வேலையை செவ்வனே செய்கின்றார்.

இது குறித்து அந்த பயனர் குறிப்பது பெரிதாகப்படவில்லை. அவர் அவர் நிலையிலிருந்து வெளியில் வரவில்லை.

இங்கு இசுலாம், இந்து ஒற்றுமைக்கு பாதகம் விளையாமால் இருக்க அந்த கருத்தே வெளியிட்டேன். இது நாகரிகமற்ற ஒன்று அல்ல. அங்கு குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் அடிப்படையில் வன்முறை விளைந்திருக்கின்றது. முகம்மது நபி கூறிய எவ்வளவோ கருத்துக்கள் இருக்க இதை தவிர்க்க முயலலாம். அவற்றை முரண்பாடுகளில் இடலாம். கட்டுரையாளரும் இதை தவறாக புரிந்து கொண்டு வன்முறையில் ஈடுபடுகின்றார்கள் என்று கூறியிருக்கின்றார். அவர் கருத்தை வைத்தே நானும் கருத்துகளை உள்ளிட்டேன் அது எப்படி தவறாகும் அது பொது கருத்து யார் வேண்டுமானாலும் இடலாம். இங்கு துண்டு பிரசுரங்களாக தீவிரவாத இயக்கங்களிடமிருந்து கைப்பற்றியுள்ளனர் என்பது வரலாறு. அந்தந்த நிலப்பரப்பில் ஏற்படும் விளைவுகளைப் பொறுத்து கூறப்படுவது. இதை பயனர் விளக்கமாக கூறியிருந்தாலே போதுமானது. அதற்கு என்னை சாடியிருக்கவேண்டிய அவசியமில்லை.

அதற்காக இசுலாம் அறிவு என்று ஒன்று இந்து அறிவு, கிறித்துவ அறிவு, புத்த அறிவு, ஜைன....... இன்னும் இதர அறிவுகள் என்று ஒன்றுத் தேவையில்லை., மனித நேய அறிவு (அது அறிவல்ல குணம்) மட்டும் இருந்தால் மட்டும் போதும்.

இந்திய மக்கள் மதநல்லிணக்கத்திற்கே வாக்களித்துள்ளனர். அதுவே அவர்கள் விருப்பம். உங்கள் கருத்தையும், நான் குறிப்பிட்டவையும் சேர்த்து இந்திய, தமிழக அரசுக்கு, மகளிர் அமைப்புக்கு, நடுநிலைவாதிகளுக்கு அனுப்புங்கள். அதில் எது தவறு என்று கூறுவார்கள். இல்லையேல் வாக்கெடுப்புக்கு அனுப்புங்கள். இங்கள்ள பொது மக்களுக்கு.

இந்து இசுலாம் ஒற்றுமையாக இருக்கவேண்டும் "வன்முறையை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர். அவர்கள் இசுலாமியரகளே அல்ல" என்று குறிப்பிட்டால் போதுமானது.

பயனர் எந்த இடத்திலும் இசுலாம் -இந்து அல்லது அனைத்து சமய ஒற்றுமையை பற்றி கூறவேயில்லை. பதிலுக்கு இசுலாம் அறிவு என்பதை பற்றியே கூறிக்கொண்டிருக்கின்றார்.

ஒரு வேளை இந்து சமயத்தை பற்றி தாக்கினாலும் இப்படித்தான் கருத்து கூறியிருப்பேன். சாதியக் கோட்பாடுகள் இந்து சமயத்திலும் உள்ளது. அதைபற்றியும் பயனர்கள் சாடியிருக்கின்றார்கள். அந்த சமயத்திலும் பயனர்கள் சமயசார்பற்றே வாதிட்டிருக்கின்றார்கள். மதசார்பற்ற நிலையிலேயே தளத்தை அணுகவேண்டும். மதசார்பு கொண்டு நோக்கினால் எதுவும் தவறாகத் தான் படும்.

சேது சமுத்திரம் திட்டத்திற்காக, ராமர் பாலம் பற்றி கூறிய சாதாரண் கருத்துக்கு ஒரு வட இந்து சமயவாதி தமிழ்நா....முதல்வரின்............த....... கூறவில்லையா? அது அவரின் சமய வெறியால் வந்த வார்த்தை. அவரை அந்த நோக்கிலேயே விட்டு விட்டார்கள். நீங்களும் அந்த நோக்கிலேயே அணுகினால் இந்த மாதிரி வார்த்தைகள் தான் வெளி வரும்.

உங்கள் பார்வையிலேயே அனைவரையும் பார்க்க சொல்லமுடியாது. அப்படி பார்த்தால் வன்முறையே நிகழாது. ஒரு உயிரும் கொல்லப்படாது. அப்படி யாரும் பார்ப்பதில்லை, பார்க்காதவர்களை நீங்களும், நானோ, பார்க்கவோ, திருத்தவோ, கண்டுபிடிக்கவோ முடியாது. விளைவுகளை நினைத்து, பார்த்து குறிப்பிட்டவை. ஏற்பதும் ஏற்காததும் அவரவர்கள் விருப்பம். இவற்றால் விளைந்தபொழுது வந்த நாளிதழ்களை அனைறைய தேதியில் பார்த்தால் இது குறித்து புரியும். --செல்வம் தமிழ் 08:25, 13 ஜூன் 2009 (UTC)

பயனருக்கு

தொகு

நீங்கள் கூறிய கருத்துக்கு பதில் தெரிவித்துவிட்டேன். நமது கருத்து மோதல் அவ்வளவு தான். இதற்கும் நீங்கள் கட்டுரை எழுத தவிற்பது எனக்கு உடன் பாடல்ல. நீங்கள் கட்டுரை எழுதாமைக்கு என் கருத்துக்களே காரணம் என்றால் நான் அவற்றை உங்களுக்காக விலக்கிக் கொள்ளவும் தயார்.--செல்வம் தமிழ் 10:17, 13 ஜூன் 2009 (UTC)


விக்கிப்பீடியர்களுக்கு

தொகு

நான் இறுதியாக இங்கு பதிவேற்றிய எனது கருத்துக்கு பலரும் உண்மையான அக்கறையுடன் பதில் கொடுத்திருந்தனர். தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்ட சிலரும் தங்கள் நிலையை விளக்கியதுடன், விக்கியின் செயல் திட்டங்களை பற்றியும் எடுத்துக்கூறினர். மேலும் எனது பதிவு சிலரை காயப்படுத்தியிருப்பதையும் உணர்கிறேன். கொஞ்சம் கோபத்தில் எழுதிய அந்த பதிவுக்காக நான் விக்கி நிர்வாகிகளிடமும் மற்ற விக்கிப்பீடியர்களிடமும் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். டேனியல் மற்றும் செல்வம் ஆகியோரின் கருத்தையும் ஏற்றுக்கொள்கிறேன்.
மேலும் இசுலாம் கட்டுரையின் சர்ச்சைக்குரிய அந்த வரிக்கு, மேற்க்கோலையும் இணைத்திருக்கிறேன். நடுநிலை பற்றிய வார்ப்புருவை உங்கள் முடிவுக்கே விடுகின்றேன். இத்துடன் இந்த சர்ச்சையை முடித்துக்கொள்ளவும் விரும்புகிறேன்.நன்றி!
--arafat 13:42, 15 ஜூன் 2009 (UTC)

விக்கிப்பீடியா நோக்கி விமர்சனங்கள்

தொகு

இவர் கூறும் பல குற்றச்சாட்டுக்கள் நியாமானவை. குறிப்பாக ஈழப் பிரச்சினை தொடர்பாக "பெரும்பான்மையானோர்" ஆங்கில விக்கியில் பல ஒரு சார்பு கருத்துப் பின்புலத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதே பிரச்சினை இங்கும் இருக்கலாம். அரசியல் தவரித்த அறிவியல் நுட்ப கட்டுரைகளில் கவனம் தரலாமே என்று சொல்வதைத் தவிர வேறு பதில் என்னிடம் இல்லை எனலாம். --Natkeeran 13:57, 14 ஜூன் 2009 (UTC)

நற்கீரன் அருள்கூர்ந்து இப்படி அறவே தகுதியற்ற வெளி இடுகைகளை இங்கே இடாதீர்கள். இதனை நான் நீக்கப் பரிந்துரைக்கிறேன். குழலி என்பவர் விக்கிப்பீடியாவின் அடிப்படைகளைக் கூட அறியாமல் கூறியுள்ள "கருத்துகளை" இங்கே ஏன் இடுகிறீர்கள்? தரமான திறனாய்வாய் இருந்தால் கட்டாயம் இங்கு இடலாம். இப்படி அடிப்படை அறியாதவர்களின் மிகத் தவறான கருத்துகளை இங்கே இடவேண்டாம் என வேண்டிக்கொள்கிறேன். விக்கிப்பீடியாவில் யார் எதனை எப்பொழுது செய்தார்கள் என்பது துல்லியமாய்ப் பதிவாகி இருக்கும். எனவே அவர் கூறிய கருத்துகள் பொய்யானவை என்பதை யாரும் எளிதாகக் காணலாம். --செல்வா 03:20, 15 ஜூன் 2009 (UTC)

தொடுப்பை நீக்கத் தேவையில்லை. இது போன்ற தவறான புரிந்துணர்வுகள் இருப்பதும் நாம் அறிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டியதே. அவர் தந்த எடுத்துக்காட்டுகள் ஆங்கில விக்கிப்பீடியா குறித்தானது. ஆங்கில விக்கியைப் பொருத்தவரை அவர் கூறும் பிரச்சினை இருப்பது உண்மை தான். அது தமிழ் விக்கிப்பீடியா குறித்ததாக புரிந்து கொள்ளப்பட்டதால் ஒரு சிறு குழப்பம். ஆனால் நற்கீரன், //அதே பிரச்சினை இங்கும் இருக்கலாம்// என்ற வரிகளை நீங்கள் தவிர்த்து இருக்கலாம். கண்டிப்பாகத் தமிழ் விக்கியில் இந்நிலை இல்லை. வருங்காலத்தில் இந்நிலை வராமல் உறுதியுடன் செயல்படுவோம். குழலி அவர்களுக்கு விரைவில் தக்க பதில் தருவேன்.--ரவி 06:29, 15 ஜூன் 2009 (UTC)

தொடுப்பை நீக்க வேண்டும் என்று நான் வேண்டியதன் கருத்தைப் புரிந்து கொள்ளுங்கள், ரவி. தரமான விமர்சனம், திறனாய்வு என்றால் எவ்வளவு எதிர்மறையாக இருப்பினும் இங்கு இடலாம். அதனை நாம் வரவேற்று அத் திறனாய்வில் எதிர்மறையாக கூறியுள்ளவற்றைக் கருத்தில் கொண்டு பயன்பெறவும் வேண்டும். ஆனால் முழுப்பொய்யையும், விக்கிப்பீடியாவைப்பற்றி அறியாத்தனமாக அவர் கூறிய கருத்துகளையும் (தமிழ் விக்கிப்பீடியா என்று அவர் குறிப்பிட்டுள்ளார், ஆங்கில விக்கியிலும் மரு.அன்புமணி பற்றி அவர் கூறிய கதைகள் அங்கும் இல்லை.), வெறும் காழ்ப்புணர்வோடு இட்டதெல்லாம் இங்கு விக்கி ஆலமரத்தடியில் இருக்கத்தேவை இல்லை. கண்டபடி உண்மை ஏதும் இல்லாமல் தாறுமாறாக எழுதுவதெல்லாம் ஏன் இங்க்கு பதிவு செய்து "விளம்பரம்" தரவேண்டும்? மீண்டும் இக்குறிப்பை நீக்கப் பரிந்துரைக்கிறேன். அங்கே பின்னூட்டத்தில் உள்ள மொழிநடையையும் பாருங்கள். மயூரநாதன் உட்பட பலர் கருத்து சொல்லியும் வேறு உள்நோக்கங்களுக்காக அவர்கள் இட்ட பதிவை ஏன் இங்கு பறை சாற்ற வேண்டும்? இப்பகுதியை நீக்க விரும்பாவிட்டால் பொருட்டில்லை, ஆனால் அறவே தகுதியில்லா "கருத்துரை"யைப் பற்றி இங்கு இட்டு வெளிச்சம் தருவது தவறு என்று நினைக்கிறேன். --செல்வா 13:55, 15 ஜூன் 2009 (UTC)

அவரின் இடுகை, எடுத்துக்காட்டுகள், மறுமொழிகளில் உள்ள தொனி, நம்பகம் குறித்து எனக்கும் மாற்றுக் கருத்துகள் உண்டு. ஆனால், அவர் சொல்ல விரும்புவது ஒரு மிக முக்கியமான பிரச்சினை. இது குறித்து உரையாடுவதற்கான வாய்ப்பாக இதைக் கொள்ளலாம். இணைப்பை நீக்குவதை நற்கீரனின் முடிவுக்கு விடுகிறேன். ஆனால், இது குறித்து நாம் உரையாட வேண்டும்.

என்னுடைய வேறு பல நண்பர்களும் இப்பிரச்சினை குறித்து தங்கள் ஏமாற்றத்தைத் தெரிவித்து உள்ளனர். அதுவே, தமிழ் விக்கிக்குப் பங்களிப்பதற்கான மனத்தடையாகவும் அவர்களுக்கு இருக்கிறது. தமிழ் விக்கிப்பீடியாவும் எதிர்காலத்தில் இப்படி ஆகாமல் இருக்க நாம் என்ன செய்கிறோம், என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.

ஆங்கில விக்கிப்பீடியாவின் நம்பகத் தன்மை பிரச்சினை தமிழ் விக்கிப்பீடியாவின் எதிர்காலத்தையும் பாதிக்கும். எனவே, தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பையும் தாண்டி, ஆங்கில விக்கிப்பீடியாவில் தமிழ் சமூகம் சார் கட்டுரைகளை மேம்படுத்துவது எப்படி என்று நாம் சிந்திக்க வேண்டியது அவசியம். தற்போது தமிழ் விக்கிப்பீடியர்களில் சுந்தர் மட்டுமே ஆங்கில விக்கியில் நிருவாகியாக உள்ளார் என்று நினைக்கிறேன். நம்மில் சிலராவது ஆங்கில விக்கியிலும் கணிசமான பங்களிப்பு செலுத்தி நிருவாகி நிலைக்கு உயர்வது நல்ல தொடக்கமாக இருக்கும்--ரவி 14:55, 15 ஜூன் 2009 (UTC)


செல்வா இத்தொடுப்பை இங்கே ஆலமரத்தடியில் நீக்கச்சொல்கிறார் நன இன்றுதான் இத்தொடுப்பை விக்கிபீடியா கட்டுரையில் வெளியிணைப்பாக போட்டுவிட்டிருந்தேன் :( அந்த வலைப்பதிவுக்கு அங்குள்ள பின்னூட்டங்களின் வழி வேண்டிய பதில்களை நாம் முன்வைத்திருக்கிறோம். மற்றபடி ரவியின் கருத்தே எனதும். --மு.மயூரன் 15:38, 15 ஜூன் 2009 (UTC)


ரவி, ஆங்கில விக்கியில் பல குறைகள் உண்டு. இருந்தாலும் வாழும் நபரைப்பற்றிய ஒரு கட்டுரையில், உண்மைக்குப் புறம்பான, சான்றுப்பின்புலம் இல்லாத தகவல்களைச் சேர்ப்பது மிகக் கடிது. குறைந்தது இரண்டு பங்களிப்பாளர்களாவது பார்க்கக்கூடிய கட்டுரை என்றாலும் கூட இவ்வாறான விசமத்தொகுப்புகள் மாற்றியமைக்கப்படும். தவிர, மரு.அன்புமணியைப் பற்றிய கட்டுரை உருவாக்கப்பட்டு சில மாதங்களே ஆகின்றன! அவர் வேண்டுமென்றே ஒரு கட்சியினரை விக்கிப்பீடியாவுக்கு எதிராகத் திருப்பி விட முயல்கிறாரோ என்று எண்ண வைக்கிறது. இத்தகைய பதிவுகளை விளம்பரப்படுத்தக்கூடாது என்பது எனது அழுத்தமான கருத்து. விக்கிப்பீடியா கட்டுரையில், தேடிப்பிடித்தாவது நேர்மையான, மெய்யான கருத்துக்களைக் கொண்ட விமர்சனங்களைக் (எழுதியவர் நோக்கம் எப்படியிருந்தாலும்) கட்டாயம் தொகுக்கலாம். தொகுக்கவும் வேண்டும். இப்பதிவு முற்றிலும் தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டுள்ளதால் வேண்டாமென நினைக்கிறேன்.
ஆங்கில விக்கியின் சிக்கல்கள் எனது துய்ப்பில் முற்றிலும் வேறானவை. அங்குள்ள 'சொந்தக் கருத்துக்களைப் புகுத்துதல்' மிகவும் நுண்ணிய, எளிதில் களைய இயலாத ஒன்று, இது போன்ற அப்பட்டமானது அல்ல. அங்குள்ள நடுநிலை நாட்டல் முறை நன்றாகவே உள்ளது, ஆனால் அது நெறிமுறைகளைப் பின்பற்றுபவர்களைக் களைப்படையவும், எரிச்சல் கொள்ளவும் செய்து கலகக்காரர்களுக்கு ஏதுவாக உள்ளது. (இங்கும் அந்நிலை வர வாய்ப்புண்டு.) இருப்பினும் மிகுதியாகப் பார்க்கப்படும் கட்டுரைகளில் ஒரு சில பகுதிகள் தவிர பெரும்பாலும் நன்றாகவே இருக்கும். -- சுந்தர் \பேச்சு 16:42, 15 ஜூன் 2009 (UTC)


பிற இடங்களில் தமிழ் விக்கிப்பீடியா பற்றி வரும் விமர்சனங்களை நாங்கள் அறிந்திருக்க வேண்டும் என்பது நியாயமான கருத்துத்தான். ஆனால், சான்றுகள் எதுவுமே இல்லாத குற்றச்சாட்டுக்கள் என்று தெரிந்த பின்னும் அக்கருத்துக்களுக்கும், அதை எழுதியவருக்கும் விளம்பரம் கொடுப்பது சரியாக எனக்குத் தெரியவில்லை. இவ்வாறு இலவசமாக விளம்பரம் கிடைக்கும் என்று தெரிந்தால் மேலும் பலர் இவ்வாறு விக்கியைத் தாக்கி எழுதத் தொடங்கி விடுவார்கள்.
நிற்க குறிப்பிட்ட இடுகையில் புதிதாக என்ன இருக்கிறது என்று அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று எனக்கு விளங்கவில்லை. இராமகி அவர்கள் இந்த இணைப்பைத் தமிழ் மன்றம் வலைப்பதிவில் இட்டுப் பின்னூட்டம் இடக் கேட்டுக்கொண்டதால்தான் இதற்கு நான் பதில் கொடுத்தேன். எங்கே கேள்வி எழுப்பப்பட்டதோ அங்கேயே இவ்வாறான இடுகைகளுக்குப் பதில் கொடுத்து நிறுத்திக்கொள்வது நல்லது என்பது எனது கருத்து. இவ்விடுகையில் முன்வைத்த உதாரணங்கள் அனைத்துமே உண்மைக்குப் புறம்பானவை என்பது தெளிவாகத் தெரிகிறது. அதனை எழுதியவரே அந்த விடயங்களைக் கைவிட்டுவிட்டு, ஆங்கில விக்கியில் நடந்தால் தமிழிலும் நடக்கலாம் தானே என்று அனுமான அடிப்படையில் வாதம் புரிகிறார். ஆங்கில விக்கியைப்பொறுத்து அந்த இடுகையில் குறிப்பிட்ட சில விடயங்கள் உண்மை எனச் சில பயனர்கள் கூறுகிறார்கள். ஆனால் இது ஒன்றும் புதிய விடயம் அல்லவே. இது பற்றிப் பல மாதங்களுக்கு முன்னர் கூட நாங்கள் கலந்துரையாடி இருக்கிறோம்.
அத்துடன், விக்கிப்பீடியாப் பங்களிப்பாளர்களைப் பெயர் குறித்து எள்ளி நகையாடும் சொற்பயன்பாடுகள் பின்னூட்டங்களில் உள்ளன. இத்தகைய குறிப்புக்களை நேரடியாக ஆலமரத்தடிப் பக்கத்தில் விட்டாலே அது கண்டனத்துக்கு உரியது. ஆனால் அத்தகைய குறிப்புக்களை நாமே தேடி எடுத்துக்கொண்டுவந்து இங்கே வெளிச்சம் போடுவது முறையாகாது.
மயூரநாதன் 17:29, 15 ஜூன் 2009 (UTC)
குழலி சுட்டிக்காட்டியது ஒரு விக்கிப்பீடியாவின் ஒரு முக்கிய பிரச்சினை. அதாவது எது உண்மை என்பது "பெரும்பான்மையானோரால்" அல்லது தீவரமாக செயற்படுவோரால் தீர்மானிக்கப்படுவதா என்பது. அவர் அதை பூரணமாக பண்பாண முறையில் கூறவில்லை என்பது உண்மையே. அதில் தரப்பட்ட பின்னூட்டங்களில் தனிநபர் விமர்சனங்கள் இருப்பதும் தாகாததே. எதிர்காலத்தில் இவ்வாறான இடுக்கையை இடமுன் கூடுதலாக கவனம் எடுத்துக் கொள்வேன். இவ்வளவு கூறப்பட்ட பின் சுட்டியை நீக்குவது எவ்வளவு பொருந்தும் என்று தெரியவில்லை.

--Natkeeran 00:14, 16 ஜூன் 2009 (UTC)

நற்கீரன், குழலி என்பவர் மரு. அன்புமணி கட்டுரையைப் பற்றிக் கூறியது முழுப்பொய். மெய் என்றால், அவருக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் நிறுவுங்கள்!! தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றியும் அதில் ஆயிரக்கணக்கான மணிகளை நேர்மையுடன் உழைத்தவர்களையும் (என்னைச் சொல்லவில்லை, நானும் உழைத்திருக்கிறேன் அது வேறு செய்தி), நேர்மையின்றி முழுப்பொய்யைக் கூறி மிக அவதூறாக எழுதிவருக்கு ஏன் நீங்கள் ஆதரவு தருகிறீர்கள்?! சான்று இல்லாததை கட்டுரையில் இருந்து நீக்கும் நாம் முழுப்பொய்யைக் கூறும் ஒரு வலைப்பதிவுக் கட்டுரைக்கு ஏன் இணைப்பு தர வேண்டும்? மறுமொழி தர வேண்டுகிறேன், நற்கீரன். நீங்கள் ஏதோ இந்த வலைப்பதிவர் கண்டுபிடித்துக் கூறியதுபோல் தவறாக கணிக்கும் கருத்து எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. மேலும் அதற்கு மாற்று என்ன? அதுமட்டும் அல்ல, ஆங்கில விக்கியிலும் எல்லாம் பெரும்பான்மையைக் கொண்டு நிறுவுவது அல்ல. வாக்களித்தாலும் வலுவான சான்றுகள் யாவை என்று கருதியே முடிவுகள் (ஆங்கில விக்கியில்) எடுக்கப்படுகின்றன (எடுத்துக்காட்டாக சிறப்புக் கட்டுரை தேர்வுகள்). சுந்தர் இதுபற்றி மேலும் விரிவாகக் கூற முடியும். விக்கியின் உயர் பண்புகளைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். கூட்டாக அறிவாக்கங்கள் செய்வது பற்றியும், அதற்கான தொழில்நுட்பங்கள், முறைமைகள் பற்றியும், விக்கியின் முறைகளைப் பற்றியும் உயர்கல்வி நிறுவனங்களிலும் கருத்தாடப்படுகின்றன. விக்கியின் உயரிய குறிக்கோள்களையும் விழுமியங்களைப் புரிந்துகொள்ளல் வேண்டும். பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டால் பல்வளம் நிறைந்த பொழில்களையும் மழைக்காடுகளையும் பாலைநிலமாக்க முடியும்.--செல்வா 01:18, 16 ஜூன் 2009 (UTC)


செல்வா, உங்களை இந்தளவுக்கு இது பாதித்திருக்கும் என்று எண்ண வில்லை. யாரையும் புண்படுத்தும் நோக்கம் என்க்கு இல்லை. அப்படி படுத்தியிருந்தால், மன்னிக்க. நிச்சியமாக அவருக்கு நான் ஆதரவு தர இல்லை. ஆனால் விக்கிப்பீடியாவின் தன்மை குறித்து எமக்கு இருக்கும் புரிதல் மற்ற பலருக்கு இல்லை. அப்படி நான் எதிர் பாக்க முடியாது. நீங்கள் சுட்டியது போல அவரது கூற்றுக்களின் பல தவறுகள் இருப்பது உண்மை. --Natkeeran 01:24, 16 ஜூன் 2009 (UTC)
நற்கீரன், இணைப்பை நீக்கியதற்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியாவில் இப்பொழுது இருக்கிறது அல்லது இனிமேல் இருக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது எனக் கருதும் விடயங்கள் பற்றிய கருத்துக்களைப் பயனர்கள் நிச்சயமாக இங்கே உரையாடலாம். அது ஆரோக்கியமானது. உலகில் எந்த ஒரு பிரச்சினையிலும் ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்கள் இருக்கத்தான் செய்கின்றன. இவற்றை எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்து விக்கிப்பீடியாவில் போதிய வழிகாட்டல்கள் உள்ளன என்பதே எனது கருத்து. ஆனால், நடை முறையில் பல விடயங்கள் உணர்வு அடிப்படையைக் கொண்டவை. இத்தகையவை தொடர்பில் பலர் அறிவு அடிப்படையில் சிந்திக்காமல் உணர்வுகளுக்கு ஆட்படுகிறார்கள். இதனால், தீர்வுகள் சிக்கலாகி விடுகின்றன. இது, விக்கிப்பீடியாவுக்கு மட்டும் உள்ள பிரச்சினை அல்ல. பலர் கூடிச் செய்யும் எந்த வேலையிலும் இது உண்டு. சனநாயகம் என்பது, உலகின் பல பாகங்களிலும் பெரிதும் மதிக்கப்படுகிறது. ஆனால், மிகப்பெரிய சனநாயக நாடுகளில் கூட நடைமுறையில் இது முழுமையாகப் பேணப்படுவதில்லை.
விக்கிப்பீடியாவுக்கு மாற்றாக இருக்கக்கூடிய வேறெந்த முயற்சியிலும் கூட இத்தகைய குற்றச்சாட்டுகளைத் தவிர்த்துவிட முடியாது. விக்கிப்பீடியாவிலும் குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும், தொடர்ந்து குற்றச்சாட்டுகளும் வந்துகொண்டுதான் இருக்கும். ஆனால், இதன் குறை நிறைகள் பற்றிப் பயனர்கள் தெளிவாக இருக்கவேண்டும். இவற்றைக் குறைப்பதற்கு ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையிலும் தங்கள் பங்களிப்பைச் செலுத்தவேண்டும். விக்கி போன்ற ஒரு திட்டத்தில் பங்குபற்றுவதற்குத் தேவையான மிக முக்கியமான தேவை பொறுமை என்பது எனது கருத்து. எந்த ஒரு கருத்தையும் வெளிப்படுத்துவதற்கும், பிழைகளைச் சுட்டிக்காட்டுவதற்குமான வாய்ப்பு விக்கிப்பீடியாவில் போல வேறெந்த மாற்றுத்திட்டங்களிலும் கிடையாது. கட்டுரையில் சேர்க்காவிட்டாலும்கூட உரையாடல் பக்கங்கள் மூலம் மாற்றுக் கருத்துக்கள் பயனர்களைச் சென்றடையும் படி செய்ய இயலும், எழுதியவரிடமிருந்து வெளிப்படையாகவே சான்றுகள் கோர முடியும். இத்தகைய வசதிகள் பல விக்கிப்பீடியாவை அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கான மிகச் சிறந்த ஒரு ஊடகம் ஆக்குகின்றன. இவ்வசதிகள் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டும் வருகின்றன. பிரச்சினைகள் உருவாகும்போது அந்தந்த நேரச் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தீர்வுகள் காண முடியும். சிலர் கூறுவதுபோல், குறைபாடுகள் திருத்தப்படாவிட்டால், விக்கிப்பீடியாவுக்கு ஆதரவு தருவது ஆபத்தாக முடியும் என்று சொல்வது தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வது ஆகும். விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்க வருபவர்கள் திறந்த மனத்துடன் வரவேண்டும். விக்கிப்பீடியாவில் குறை இருக்கிறது அதை நான் திருத்தப்போகிறேன் என்று வருபவர்கள் எதையும் உருப்படியாகச் செய்ய முடியாது. அவர்களால் பொது நன்மைக்காக எதுவும் செய்ய முடியாது. விக்கிப்பீடியா அவர்களுக்குப் பொருத்தமானதாகவும் இருக்காது என்பதே எனது தனிப்பட்ட கருத்து. மயூரநாதன் 03:09, 16 ஜூன் 2009 (UTC)
நற்கீரன், இணைப்பை நீக்கியதற்கு நன்றி. செல்வா, நற்கீரன் ஒரு inclusive நிலைப்பாட்டை எடுக்கும் எண்ணத்திலும் பெருந்தன்மைக்காகவும் மட்டுமே அப்படிச் செய்தார் என நினைக்கிறேன். அதனால் அவர் அந்தப் பதிவருக்கு வக்காலத்து வாங்குகிறார் என்று பொருளாகாது. அந்தப் பதிவு முழுப்பொய் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். உங்கள் கோபத்தையும் முழுமையாகப் பகிர்கிறேன். ஆனாலும், உங்கள் முந்தைய பதிவு நற்கீரனைச் சற்று கடுமையாகத் தாக்கியிருக்கக் கூடும் என்றே தோன்றுகிறது. -- சுந்தர் \பேச்சு 16:46, 16 ஜூன் 2009 (UTC)
நற்கீரன், உங்கள் மனதைப் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். நான் கூறியது கடுமையாக இருந்துவிட்டதை எண்ணி வருந்துகிறேன். என் கருத்து என்னவென்றால், தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள நிறைகளைச் சொல்லி, குறைகளையும் சொல்லி, ஒரு நேர்மையான திறனாய்வாய் இருந்தால் அது பற்றி இங்கு இடுவது முறையாகும். ஆங்கிலத்தில் சொல்வார்களே trashing என்று அப்படி ஒருவர் இத்தனையாயிரம் கட்டுரைகள் இருக்கும் இக் கூட்டாக்கத்தை ஒட்டுமொத்தமாக இழித்துச் சொல்லும்பொழுது மீண்டும் மீண்டும் நற்கீரன் அதில் உள்ள நேர்மையற்றதன்மையைக் கூறாமல், பொய்மையைக் கூறாமல் யாருமே எண்ணிப்பார்க்காத ஏதோ ஒன்றை அப்பதிவர் கண்டுபிடித்து முன்வைத்தது போல கூறுவது எனக்குத் தவறாக பட்டது. இதனை இம் மறுமொழியோடு விட்டுவிட்டு கட்டுரை ஆக்கத்தில் கருத்தைச் செலுத்துவோம் .--செல்வா 03:12, 17 ஜூன் 2009 (UTC)

பதிவு செய்யாத பயனர்கள்

தொகு

பயனராகப் பதிவு செய்யாமல், பயனர் பக்கங்களை ஆக்குபவர்களை என்ன செய்யலாம்? அவற்றை நீக்கலாமா? பார்க்க: பயனர்:எம்.பீ.எம் ஷமீர்.--Kanags \பேச்சு 11:31, 15 ஜூன் 2009 (UTC)

ஆம், உதவி:பயனர் பக்கம் உருவாக்குவது எப்படி? என்ற பக்கத்தை உருவாக்குவோம். இந்தக் குறிப்பை பயனரின் ip முகவரி பேச்சுப் பக்கத்தில் இட்ட பிறகு, அவர் உருவாக்கிய கட்டுரைவெளியில் உள்ள பயனர் பக்கத்தை நீக்கலாம்--ரவி 13:04, 15 ஜூன் 2009 (UTC)

எனது பயனாள் பெயர் ஆங்கிலத்தில் உள்ளதைத் தமிழில் எழுதினேன். மன்னிக்கவும்--.எம்.பீ.எம் ஷமீர்