விக்கிப்பீடியா : உங்களுக்குத் தெரியுமா/அக்டோபர் 11, 2009
சிகப்பு மேகம் என்ற அமெரிக்க இலக்கோட்டா முதற்குடிமக்கள் தலைவர் 1865 இருந்து 1867 வரை வயோமிங் மொன்டானா ஆகிய இடங்களில் இவர்களுக்கும் ஐக்கிய அமெரிக்க படைத்துறைக்கும் இடையே நடைபெற்ற போரில் வெற்றி ஈட்டியவர்.
உணவைச் சூடாக்கப் பயன்படும் நுண்ணலை அடுப்பு 1940 களின் இறுதியில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.
கூடிய உற்பத்தி தரும் விதைகள் , பழுதடையா மரக்கறிகள் , புதிய வகை உயிரினங்கள் (மரபணு மாற்றப்பட்ட உயிரினம் ), செயற்கை உடல் உறுப்புகள், செயற்கை இன்சுலீன் என பல தரப்பட்ட பயன்பாடுகள் மரபணு பொறியியலுக்கு உண்டு.
அறிவாய்வியல் (Epistemology) என்பது, அறிவின் மூலம், எல்லை, இயல்பு போன்ற அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யும் ஒரு துறை ஆகும்.
தமிழ் , அன்னம் , முகில் , காக்கை , நெல் போன்ற அஃறிணைப் பொருட்களைத் தூது செல்ல ஏவுவது போல அமையும் இலக்கியம் தூது இலக்கியம் எனப்படுகிறது.