விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஏப்ரல் 3, 2022
- தாவர உண்ணியான தும்பிப்பன்றி (படம்) பாலூட்டிகள், பன்றியைப் போன்று குட்டையாகவும், நீண்டும் காணப்படும். இதன் மூக்குப் பகுதி நீண்டும், எதையும் எளிதில் பற்றிக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்த தும்பிக்கைப் போன்று காணப்படும்.
- முதல் கன்னடப் பேசும் படத்தை இயக்கியவர் ஒய். வி. ராவ் ஆவார்.
- அஸ்வகோசர் என்பவர் இந்தியத் தத்துவவாதியும், சமசுகிருத கவிஞரும், தருக்கவாதியும் ஆவார்.
- போர்க்கள கற்பலகை என்பது பண்டைய எகிப்தின் (கிமு 3,200 - கிமு 3,100) போர்களக் காட்சியைக் கொண்ட முதல் கற்பலகையாகும்.