மூடிய தொகுதி ஒன்றில் நடைபெறும் வேதியியல் தாக்கங்களில் பங்குகொள்ளும் தாக்கிகளின் மொத்த திணிவானது தாக்கத்தின் போது கிடைக்கும் விளைவுகளின் மொத்த திணிவுக்கு சமனாகக் காணப்படும் என்பது திணிவு மாறா விதி அல்லது திணிவுக் காப்பு விதி எனப்படும்.
பிறக்கும் போது பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்டு, பின்னர் தம்மை ஆணாக உணர்ந்து, அடையாளப்படுத்தி, ஆண்களாக வாழ்பவர்கள் திருநம்பிகள் (Transmen) என்று அழைக்கப்படுகின்றனர்.
கடல் அல்லது ஏரியின் எந்த அளவு ஆழம் வரை ஒளிச்சேர்க்கை செய்ய சூரிய ஒளி கிடைக்கிறதோ அந்த ஆழம் வரை உள்ள பகுதியை சூரிய ஒளி மண்டலம் (Sun light Zone) அல்லது ஒளி நிரம்பிய மண்டலம் (Photic zone) என்று அழைக்கிறார்கள்.
ஆவுடை அக்காள் என்பவர் 15 - 19 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் வாழ்ந்து, 1000 மேற்பட்ட பெண்ணிய, சாதிய எதிர்ப்பு, மெய்யியல், ஆன்மீகப் பாடல்களை இயற்றிய பெண் தமிழ்க் கவிஞர் ஆவார்.