விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/செப்டம்பர் 26, 2012
- இராபர்ட் புருசு ஃபூட் (படம்) பல்லாவரத்தில் கண்டறிந்த கற்காலக் கோடாரி மூலம் வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியா பற்றிய ஆய்வுகளின் தந்தை எனப் போற்றப்படுபவர்.
- நரிமூக்குப் பழவௌவால் இனப்பெருக்க புணர்ச்சியின் போது வாய்வழிப் பாலியல் நடவடிக்கை மேற்கொள்ளும் முதனி அல்லாத ஒரே இனமாகும்.
- தாவீதின் நட்சத்திரம் பொதுவாக யூதர்களின் அடையாளமாகவும் யூத மதத்தின் அடையாளமாகவும் நோக்கப்படுகின்றபோதிலும், யூதத்தின் அடையாளமாகவும் இசுரேலின் சின்னமாகவும் இருப்பது மெனோரா ஆகும்.
- யானை பாலூட்டிகளிலேயே அதிக சினைக்காலம் (22 மாதங்கள்) கொண்டது.
- ஆஸ்தான கோலாகலம் என்பது தமிழ்க் கணிதம் பற்றியும் விளக்கும் ஒரு நூலாகும். இதை 1951 ஆம் ஆண்டில் திருமைலை சைல சர்மா வெளியிட்டார்.