விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சனவரி 11, 2012
(விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஜனவரி 11, 2012 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
- முழுவதும் கருநிறமாக இருக்கும் இரட்டைவால் குருவியின் (படம்) வால் நுனியில் இரண்டாகப் பிரிந்து இருக்கும்.
- அகநாடுகள் என்பன சங்ககாலம் தொட்டே சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்குள் இருந்த உட்பிரிவுகள்.
- கடன் தவறல் மாற்று என்ற முதலீட்டில் ஒரு நிறுவனம் அல்லது அரசால் வெளியிடப்பட்ட பிணைப்பத்திரங்கள் வட்டி வழங்கமுடியாது தவறினால், அப்பணத்தை இதற்காக முன்னதாகவே உடன்பாடு கொண்டு முன்கட்டணம் செலுத்திய மற்றொரு நிதி நிறுவனத்திடமிருந்து பெறலாம்.
- குற்றப் பரம்பரைச் சட்டம் பிரித்தானிய இந்தியாவில் பல இந்திய சாதிகளைக் குறிவைத்து இயற்றப்பட்ட கடுமையான சட்டம்.
- தமிழகத்திலுள்ள பல்லவர்களின் மாமல்லபுர மரபுக்கோயில்களும் சோழர்களின் அழியாத பெருங்கோயில்களும் யுனெசுக்கோ அமைப்பால் அறிவிக்கப்பட்ட உலக பாரம்பரிய களங்கள்.